Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
2 நாள் அடி நோர்வேக்கு அரசாங்கம் உத்தியோகபூர்வ அழைப்பு
#3
<b>நோர்வேக்கு மீண்டும் அழைப்பு
நோர்வே அனுசரணை பணியை தொடர மஹிந்த அழைப்பு</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/11/20051128135108051128_203srilanka.jpg' border='0' alt='user posted image'>
இலங்கையின் புதிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச , அமைதி வழிமுறையில், நோர்வே தொடர்ந்தும் தனது அனுசரணைப்பணியைத் தொடரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று இலங்கைக்கான நோர்வே தூதர் ஹான்ஸ் ப்ரட்ஸ்கர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்த போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக அரசு தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை ஒன்று கூறுகிறது.

இதற்கிடையே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இலங்கைக்கான கொடையாளி நாடுகளான, அமெரிக்கா, ஜப்பான், நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதர்களிடமும் , அமைதி வழிமுறை குறித்து இலங்கையின் குறிப்பாக தென்னிலங்கையின் அரசியல் கட்சிகளுடன் விவாதிக்க தான் எடுத்துவரும் முயற்சிகள் குறித்து தெரிவித்தார்.

இதனையடுத்து, நோர்வே தூதர் ஹான்ஸ் ப்ரட்ஸ்கர் நாளை ( வியாழன்) கிளிநொச்சி சென்று , நாளை மறு நாள் ( வெள்ளிக்கிழமை) புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வனுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது

<b>நோர்வே அனுசரணை: புதிய அரசின் நிலை குறித்து ஜே.வி.பி</b>

நோர்வே அனுசரணை தொடர்பான பிரச்சினையில், மக்கள் விடுதலை முன்னணி ( ஜே.வி.பி) தான் ஏற்கனவெ கொண்டிருந்த நிலையைத்தான் இப்போதும் தொடர்ந்து கடைப்பிடிப்பதாக, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சந்திரசேகரன் கூறினார்.

மஹிந்த சிந்தனை என்கின்ற வேலைத்திட்டத்தை உள்வாங்கிக்கொண்டு அதற்கேற்ப சமாதன நடவடிக்கைகளை முன்னெடுப்பதகான நடவடிக்கைகளுக்கு எங்களது ஆதரவு உண்டு என்று கட்சியின் மூத்த தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துளளதை அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தலுக்கு முன் நோர்வேயின் பங்கு பற்றி கேள்விகளை எழுப்பிவிட்டு இப்போது தேர்தலுக்குப் பின் வேறு விதமான நிலைப்பாட்டை எடுக்கிறார்களா என்று கேட்டதற்கு பதிலளித்த சந்திரசேகரன், தங்களது நிலைப்பாட்டில் எந்த விதமான மாற்றமும் இல்லை , நோர்வே கடந்த காலத்தில் அனுசரணையாளராக இலங்கையில் தேசிய பிரச்சினையில் ஒரு தீர்மானகரமான ஒரு சக்தியாக இருந்து வந்திருக்கின்றது. நோர்வே அனுசரணையாளராக மட்டும் இருந்தால் அது தொடர்பாக தங்களுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை என்றார் அவர்.

BBC tamil
Reply


Messages In This Thread
[No subject] - by adithadi - 12-07-2005, 06:41 PM
[No subject] - by AJeevan - 12-07-2005, 07:02 PM
[No subject] - by ஜெயதேவன் - 12-07-2005, 08:45 PM
[No subject] - by tamilini - 12-07-2005, 09:11 PM
[No subject] - by sinnappu - 12-07-2005, 10:05 PM
[No subject] - by tamilini - 12-07-2005, 10:54 PM
[No subject] - by adithadi - 12-07-2005, 11:22 PM
[No subject] - by MUGATHTHAR - 12-08-2005, 12:58 PM
[No subject] - by Birundan - 12-08-2005, 02:06 PM
[No subject] - by நர்மதா - 12-08-2005, 02:30 PM
[No subject] - by நர்மதா - 12-08-2005, 02:59 PM
[No subject] - by shanmuhi - 12-08-2005, 03:15 PM
[No subject] - by தூயவன் - 12-08-2005, 04:03 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)