![]() |
|
2 நாள் அடி நோர்வேக்கு அரசாங்கம் உத்தியோகபூர்வ அழைப்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: 2 நாள் அடி நோர்வேக்கு அரசாங்கம் உத்தியோகபூர்வ அழைப்பு (/showthread.php?tid=2152) |
2 நாள் அடி நோர்வேக்கு அரசாங்கம் உத்தியோகபூர்வ அழைப்பு - வினித் - 12-07-2005 <b>நோர்வேக்கு சிறிலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வ அழைப்பு </b>[புதன்கிழமை, 7 டிசெம்பர் 2005, 18:21 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கை அமைதி முயற்சிகளில் அனுசரணையாளராக செயற்படுமாறு நோர்வே நாட்டுக்கு சிறிலங்கா அரசாங்கம் இன்று உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது. சிறிலங்கா அரசாங்கம் இன்று புதன்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கை: இலங்கை அமைதி முயற்சிகளில் றோயல் நோர்வே அரசாங்கம் தமது அனுசரணையாளர் பணியில் தொடர்ந்து ஈடுபட சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே நாட்டினது சிறிலங்கா தூதுவர்களையும் மகிந்த ராஜபக்ச இன்று சந்தித்துப் பேசினார். அமைதி முயற்சிகளைத் தொடருவதற்காக தாம் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளை இணைத் தலைமை நாடுகளினது தூதுவர்களிடம் மகிந்த ராஜபக்ச விளக்கினார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. <b>www.puthinam.com</b> - adithadi - 12-07-2005 பிச்சை கொடுக்கும் நாடுகள் நல்லா வெருட்டியிருப்பினம், பிச்சை வேனும்மா அல்லது சமாதனம்மா என்று. பயந்துட்டான் சிங்கள ராஜா. - AJeevan - 12-07-2005 <b>நோர்வேக்கு மீண்டும் அழைப்பு நோர்வே அனுசரணை பணியை தொடர மஹிந்த அழைப்பு</b> <img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/11/20051128135108051128_203srilanka.jpg' border='0' alt='user posted image'> இலங்கையின் புதிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச , அமைதி வழிமுறையில், நோர்வே தொடர்ந்தும் தனது அனுசரணைப்பணியைத் தொடரும்படி அழைப்பு விடுத்துள்ளார். இன்று இலங்கைக்கான நோர்வே தூதர் ஹான்ஸ் ப்ரட்ஸ்கர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்த போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக அரசு தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை ஒன்று கூறுகிறது. இதற்கிடையே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இலங்கைக்கான கொடையாளி நாடுகளான, அமெரிக்கா, ஜப்பான், நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதர்களிடமும் , அமைதி வழிமுறை குறித்து இலங்கையின் குறிப்பாக தென்னிலங்கையின் அரசியல் கட்சிகளுடன் விவாதிக்க தான் எடுத்துவரும் முயற்சிகள் குறித்து தெரிவித்தார். இதனையடுத்து, நோர்வே தூதர் ஹான்ஸ் ப்ரட்ஸ்கர் நாளை ( வியாழன்) கிளிநொச்சி சென்று , நாளை மறு நாள் ( வெள்ளிக்கிழமை) புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வனுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது <b>நோர்வே அனுசரணை: புதிய அரசின் நிலை குறித்து ஜே.வி.பி</b> நோர்வே அனுசரணை தொடர்பான பிரச்சினையில், மக்கள் விடுதலை முன்னணி ( ஜே.வி.பி) தான் ஏற்கனவெ கொண்டிருந்த நிலையைத்தான் இப்போதும் தொடர்ந்து கடைப்பிடிப்பதாக, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சந்திரசேகரன் கூறினார். மஹிந்த சிந்தனை என்கின்ற வேலைத்திட்டத்தை உள்வாங்கிக்கொண்டு அதற்கேற்ப சமாதன நடவடிக்கைகளை முன்னெடுப்பதகான நடவடிக்கைகளுக்கு எங்களது ஆதரவு உண்டு என்று கட்சியின் மூத்த தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துளளதை அவர் சுட்டிக்காட்டினார். தேர்தலுக்கு முன் நோர்வேயின் பங்கு பற்றி கேள்விகளை எழுப்பிவிட்டு இப்போது தேர்தலுக்குப் பின் வேறு விதமான நிலைப்பாட்டை எடுக்கிறார்களா என்று கேட்டதற்கு பதிலளித்த சந்திரசேகரன், தங்களது நிலைப்பாட்டில் எந்த விதமான மாற்றமும் இல்லை , நோர்வே கடந்த காலத்தில் அனுசரணையாளராக இலங்கையில் தேசிய பிரச்சினையில் ஒரு தீர்மானகரமான ஒரு சக்தியாக இருந்து வந்திருக்கின்றது. நோர்வே அனுசரணையாளராக மட்டும் இருந்தால் அது தொடர்பாக தங்களுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை என்றார் அவர். BBC tamil - ஜெயதேவன் - 12-07-2005 ரோகரா! அரோகரா!! என்ன? எங்கடை அரசியள் எல்லாம் பிழைக்கிறது!! நோர்வேயை பக்ஸ வெளியேற்றுவாரெண்டல்லோ!. தூள்மன்னனுடன் சேர்ந்து கத்தோ கத்தெண்டு கத்தினம்!! எல்லாம் பூ..... டோகரா!!! - tamilini - 12-07-2005 Quote:2 நாள் அடி நோர்வேக்கு அரசாங்கம் உத்தியோகபூர்வ அழைப்புயார் அடிச்சது என்றியள்..?? - sinnappu - 12-07-2005 tamilini Wrote:Quote:2 நாள் அடி நோர்வேக்கு அரசாங்கம் உத்தியோகபூர்வ அழைப்புயார் அடிச்சது என்றியள்..?? மப்பா :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: - tamilini - 12-07-2005 Quote:மப்பா ்இல்லை அப்பு.. நீங்க நிறுத்தச்சொன்னியளா அது தான் கேட்டன் சரி சரி நோ ரென்சன் நான் இப்படி கேள்வி கேக்கவில்லை. :? - adithadi - 12-07-2005 சண்டையில்லாமல் தமிழர் தேசத்திற்கு சுயாட்சி கிடைக்கும்மாயின் நன்று. ஆனால் அது கனவில் மட்டும் தான் நடக்கும் என்று சிங்கள தேசம் சொல்லிவிட்டது. பின்பு ஏன் பேச்சுவார்த்தை? - MUGATHTHAR - 12-08-2005 தேர்தலுக்கு முன் ஜே.வி.பி நாட்டின் சமாதான பணியிலிருந்து உடனடியாக நோர்வே வெளியேற்றப்பட வேணும் தேர்தலுக்குப் பின் ஜே.வி.பி நோர்வே கடந்த காலத்தில் அனுசரணையாளராக இலங்கையில் தேசிய பிரச்சினையில் ஒரு தீர்மானகரமான ஒரு சக்தியாக இருந்து வந்திருக்கின்றது. நோர்வே அனுசரணையாளராக மட்டும் இருந்தால் அது தொடர்பாக தங்களுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை இதுதான் அரசியல் எண்டு சொன்னா கேக்க மாட்டுதுகள் சிங்களச் சனங்கள் என்னவெண்டு விளக்கிறது.......... - Birundan - 12-08-2005 ஜேவிபி ஒரே அடியாய் தொப்பியை இப்பிடிமாத்திப்போடும் என்று, தீவிரசிங்களவர் எதிர்பாத்திருக்க மாட்டினம். இதுசரியான ஒருபேக்காட்டுத்தான். அரசியலில் இது எல்லாம் சகயமப்பா. - நர்மதா - 12-08-2005 இல்லை பாருங்க தை மாதம் ஜக்கிய நாடுகள் சபையாலல் இலங்கைக்கு உதவி (பிச்சை) வழங்கிற மாகாநாடு ஒன்று கூட்டினம் எல்லே அதில இலங்கைக்கு உதவி (பிச்சை) வழங்கிற என்டால் சில நிபந்தனை விதிப்பினம் சமாதானத்தை ஆரம்பிக்க சொல்லி இல்லாட்டில் உதவி (பிச்சை) கிடைடக்காது. அதனால்தான் நோர்வேக்கு மீண்டும் அவசர அழைப்பு ஒன்றை விட்டவை(இதில இந்தியாவின் வற்புறுத்தலும்்இருக்காம்). அதிலையும் பாருங்க ஜே.வி.பி சொல்லினம் முற்று முழதானதல்ல நிபந்தனையுடனான அழைப்பு இது எப்படி ாத்தியம் ஆகும் சிந்தித்து பாருங்க இதுக்குள்ள என்ன இருக்குது எண்டு - நர்மதா - 12-08-2005 இதிலிருந்து இன்னும் ஒன்றையும் விளங்கவோணும் நோர்வே அனுசரணை பணியை ஆரம்பிக்குது இதில பாருங்க இரண்டு பேச்சு வார்த்தை மோடை அமைக்கணும் ஒன்று அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் மற்றையது ஆளும் கட்சியில் மூன்று கட்சிகளுக்கும் ஏன் என்றால் மூன்றும் வேறு வேறு கொள்கைகள். பாருங்க விடுதலைப்புலிகளிடம் ஒரு விடயத்தை கதைத்தால் அதை அவர்கள் உடனே மூன்று கட்சிகளுக்கும் தெரியப்படுத்தி அவர்கள் ஆமோதிக்க வேண்டும் இல்லாட்டில் ஒன்றும் நடக்காது. மற்றையது பேசுவார்த்தையில் பங்கு கொள்வதற்கு அந்த மூன்றுகட்சியிலையும் படித்தவர் யாரும் இல்லையாம் ஜ.தே.க இருந்து ஜி.எல்.பீரீசை கேக்கினமாம் - shanmuhi - 12-08-2005 நோர்வேக்கும் ஒருபக்கம் அழைப்பு அனுப்புவினம் மறுபக்கம் சுவீடன் நாட்டுடன் நீர் உந்து விசைப் படகுகளையும், விசேட நவீன கடற்கலங்களையும் கொள்வனவு செய்வதற்கும் உடன்படிக்கை செய்வினம். - தூயவன் - 12-08-2005 shanmuhi Wrote:நோர்வேக்கும் ஒருபக்கம் அழைப்பு அனுப்புவினம் மறுபக்கம் சுவீடன் நாட்டுடன் நீர் உந்து விசைப் படகுகளையும், விசேட நவீன கடற்கலங்களையும் கொள்வனவு செய்வதற்கும் உடன்படிக்கை செய்வினம். பாத்தீங்களா? இப்படியான குள்ளநரித்தனத்துக்காகத் தான் தலைவர் பதிலடி கொடுப்பார். இது சில மரமண்டைகளுக்கு புரியாமல் அறிக்கை விட்டோண்டு திரியுதுகள் |