12-06-2005, 03:46 PM
thiru Wrote:Vasampu Wrote:<b>திரு</b>
நீங்கள் குறிப்பிட்டபடி ரூபிளின் மதிப்பு முன்பு டொலருக்கு 6 இலிருந்து இப்போது 28 தொடக்கம் 30 வரை உயர்ந்துள்ளதென்றால் ரூபிளின் மதிப்பு குறைந்துள்ளதாகவல்லவா அர்த்தம். இது நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை அல்லவா குறிக்கின்றது.
Vasampu
தெளிவாகக் குறிப்பிடாதது எனது தவறு. நேரமின்மையால் அவசரமாக எழுதிவிட்டுச் சென்றதால் நேர்ந்த வழு. பொறுத்தருளுங்கள்.
1997 லிருந்து 2000வரை முன்னாள் அதிபர் யெல்சின் அவர்களது ஆட்சிக்காலத்தில் அதாவது ஒரு குறுகிய காலமான 03 வருடங்களிற்குள் ரஷ்யாவின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு வீழ்ந்தது. அதனால் 1997 ல் ஒரு டொலருக்கு 06 ரூபிளாக இருந்த பண மதிப்பு -யெல்சின் புத்தினிடம் 2000 ஆண்டில் ஆட்சிப்பொறுப்பினை ஒப்படைக்கும்போது- 28 ரூபிளாகக் காணப்பட்டது.
ஆனால் புத்தின் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் இந்தப் பொருளாதார வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்திவிட்டார். அதனால் அது கடந்த 05 வருடங்களாக -ஒரு டொலருக்கான ரூபிளின் மதிப்பாக 28 தொடக்கம் 30 ரூபிளாக- நிலையாக நிற்கிறது.
இந்த நிலையிலிருந்து மீண்டும் பொருளாதாரத்தை மேலெழுப்ப பலவகையில் புத்தின் முயன்றுவருகிறார்.
முக்கியமாகப் பெரும் வணிக நிறுவனங்கள் ஒழுங்காக வரிகட்டுவதில்லை. அதுதொடர்பாக உலக அளவில் பிரபலமான ஒரு வழக்கில் ரஷ்ய அரசு சார்பாக அண்மையில் தீர்ப்பு வந்தது.
இதில் தற்போது சிறையிலடைக்கப்பட்டிருக்கும் மிகையில் ஹடறோவ்ஸ்க்கி என்ற பெருவணிகர் தலைவராக இருந்த யூக்கோஸ் மசகெண்ணை உற்பத்தி நிறுவனம் வருமானவரி ஏய்ப்பு (பலமில்லியன் கோடி ரூபாய்கள்)செய்ததாக உறுதிப்படுத்தப்பட்டு அந்த நிறுவனம் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.
வேடிக்கை என்னவெனில் முழுக்க முழுக்க ரஷ்யாவின் உள்விவகாரமான இந்த வழக்கில் ஹடறோவ்ஸ்க்கிக்கு ஆதரவாக நேரடியான சட்ட உதவியிலிருந்து மறைமுகமான ராசதந்திர அழுத்தம் வரைக்கும் பிரயோகித்து அமெரிக்க அரசு போராடியது.
காரணம் வரிஏய்ப்பின் மூலம் ரஷ்ய அரசை வங்குரோத்தாக்கி தம்மை ஆதரிக்க வைப்பதற்கான ஒரு கருவியாக யூக்கோஸ் நிறுவனத்தினை அமெரிக்கா பயன்படுத்தியது.
இப்போது அடுத்தடுத்து வருமான வரி ஏய்ப்பு வழக்குகள் பல நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்டு வருகின்றன.
அதுபோக, வானம்பாடி அவர்களது பதில் கண்டு மகிழ்ச்சி. தங்களைப்போலவே எமக்கும் ஏனைய நாடுகள் குறித்த தகவல்களை பல்வேறு செய்தி நிறுவனங்கள் பல்வேறு கோணங்களில் தரும்போது குழப்பம்தான் எஞ்சும்.
ஆனால் தங்களைப்போன்று இங்கு இப்படித் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதன் வாயிலாக நாம் இங்கு பலநாடுகளில் வதியும் நண்பர்கள் வாயிலாக உண்மை நிலையைத் தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுகிறதல்லவா.
அதற்காக தங்களுக்கு எனது பணிவான நன்றிகள்.
<b>அன்புடன் திரு. </b>

