Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இருபாலையில் கிளைமோர் தாக்குதல்
#5
இருபாலைத்தாக்குதலுக்குப் பழிவாங்கலாக அச்சுவேலியிலிருந்து துவிச்சக்கரவண்டியில் வீடுதிரும்பிக்கொண்டிருந்த -வயோதிபரான -எனது தந்தையாரும் தாக்கப்பட்டிருக்கிறார்.

தாக்கியவர்கள் நன்கு சரளமாகத் தமிழ் பேசியதாகவும் தாக்குதல் அச்சுவேலி மகாவித்தியாலயத்திற்கும் அச்சுவேலி வைத்தியசாலைக்கும் இடையில் வைத்து நடாத்தப்பட்டதாகவும் வயது வேறுபாடின்றி வீதியால் சென்ற அனைவரும் இந்தக் குழுவினால் தாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர் தற்போது வைத்தியசிகிச்சைக்குட்படுத்தபட்டு வீடுதிரும்பியுள்ளார்.

அதுதவிர யாழ்ப்பாணத்தில் பரவலாக குண்டாந்தடிகளுடன் அலையும் சிறிலங்காப் படைவீரர்கள் மாலையில் திறக்க முற்பட்ட ஒரு சில கடைகளையும் இழுத்து மூடச்செய்ததுடன் போக்குவரத்துகளையும் முடக்கியுள்ளதாகத் தெரியவருகிறது.

<b>திரு</b>
Reply


Messages In This Thread
[No subject] - by sri - 12-06-2005, 12:10 PM
[No subject] - by Vaanampaadi - 12-06-2005, 12:32 PM
[No subject] - by Mathan - 12-06-2005, 02:35 PM
[No subject] - by thiru - 12-06-2005, 02:48 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)