12-06-2005, 11:28 AM
thiru Wrote:இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட செய்தி என்றே கருதுகிறேன். காரணம் இப்போது கூட எமது மருத்துவமனையில் மட்டும் மூன்று HIV நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள்.
இவர்களை எவரும் அவமரியாதை செய்யவோ அன்றி வெளியே துரத்தவோ முயலவில்லை.
HIV குழந்தைகள் விடயத்திலும் அவ்வாறுதான். இங்கு தாய் தந்தையர்கள் பிள்ளைகளது நலன்களில் அக்கறை செலுத்தாவிடின் அப்பிள்ளைகளை அரசாங்கமே சிறுவர் நிறைவாழ்வு இல்லத்தில் சேர்த்துப் பராமரிக்கிறது.
HIV குழந்தைகளுக்கான சிறப்பு வாழ்வகங்கள் இங்கே செயற்படுகின்றன.
மேலே உள்ளவாறான செய்திகளை அமெரிக்க சார்பு செய்திநிறுவனங்களும் பத்திரிகைகளும் வெளியிடுவதன் நோக்கம் விளாடிமிர் புத்தின் தான் எண்ணுவதைச் செய்து முடிக்கும் தலைவர் என்பதால்தான்.
புத்தின் முன்னைய அதிபர் யெல்சின்போல 24 மணிநேரமும் போதையில் மிதந்தபடி அமெரிக்க நலன்களுக்குத் தலையாட்டிக்கொண்டிருந்தால் ஆகா ஓகோ என்று எழுதுவார்கள்.
உதாரணமாக இந்தப் பத்திரிகைகள் எல்லாம் யெல்சினை வானளாவப் புகழ்ந்தன. காரணம் அவர் ஒரு அமெரிக்காவின் இரகசிய முகவர்.
அவர் காலத்தில் 1997ல் ஒரு டொலரிற்கு 06 ரூபிளாக இருந்த பண மதிப்பு 2000ல் புத்தின் ஆட்சியைப் பொறுப்பேற்கும்போது ஒரு டொலரிற்கு 28 ரூபிளாக இருந்தது.
ஆனால் 2000லிருந்து இன்றுவரை ரூபிளின் மதிப்பு 28ற்கும் 30ற்கும் இடையில் இருந்துவருகிறது.
இதுதான் அமெரிக்காவிற்கும் அதன் நேசநாடுகளுக்கும் பிடிக்காத விடயம். அதற்காக இப்படி ரஷ்யாவில் எல்லாமே படுமோசம் என்ற சித்தரிப்புகள்.
இவற்றை நம்பி தமிழகப் பத்திரிகைகளும் இதனைப் பிரசுரிப்பதுதான் வேதனை. உலகம் முழுவதும் ரஷ்யாவிடம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தினாலே ரூபிளின் மதிப்பு டொலருடன் போட்டியிடும் என்ற உண்மையை ஏனோ எல்லோரும் வசதியாக மறந்துவிடுகிறார்கள்.
<b>
அன்புடன் திரு</b>
திரு உங்களின் விபரமான தகவல்களுக்கு நன்றிங்க .... இன்றய கால கட்டத்தில எந்த செய்திகளை நம்புவது என்றே தெரியவில்ல .... இந்த செய்திகாரங்க எல்லாரும் அவ அவன் தான்பாட்டுக்கு நெனச்சமாதிரி எழுதிட்டு.. இத வாசிச்சு சாவுங்கடா சாவுகிராக்கிங்க என்று சொல்லாமல் சொல்லிட்டு போய்கிட்டே இருக்கிறான் ..... நாமலும் என்ன பண்ணமுடியும் ...
ஏதோ தகவல் போட்ட்ருக்காங்க அப்டீன்னு அத வாசித்து விட்டு பேசாம இருக்க வேண்டியதுதான் .... உள்ளூர் சமாச்சாரம்ன்னா பறவாயில்ல யாரயாவது வெசாரிச்சு அது உன்மையா பொய்யான்னு தெரிஞ்சுக்கலாம் .... இது வெளிநாட்டு சமாச்சாரம்....இத யாருகிட்ட போயி விசாரிச்சு தெரிஞ்சுக்கிறது ....
நீங்க அங்க இருக்கிற படினால இப்ப இந்த உண்ம நெலமைய தெலிவு படுத்தினீங்க ....
நன்றிங்க
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

