12-06-2005, 07:54 AM
வாடகை வீடு இவர்களுக்கு இல்லை
<img src='http://www.dinamalar.com/2005Dec06/photos/science.jpg' border='0' alt='user posted image'>
கடந்த பிப்ரவரியில் மட்டும் 10 ஆயிரம் எச்.ஐ.வி., பாசிடிவ் தாய்மார்கள், குழந்தைகளைப் பெற்று மாஸ்கோவின் தெருக்களில் அனாதைகளாக விட்டுச் சென்றுள்ளனர். "ரஷ்ய சட்டங்கள், எச்.ஐ.வி., பாசிடிவ் மனிதர்களைப் பாகுபடுத்துவதைக் கண்டிக்கின்றன. ஆனால், இந்த பெண்களும், குழந்தைகளும் படும் துன்பங்களை பார்த்துக் கொண்டு அரசு சும்மா இருக்கிறது' என்று மனித உரிமை கண்காணிப்பு அமைப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர். எச்.ஐ.வி., பற்றிய சமூக ஒதுக்கல், பள்ளிகளிலும், கிளினிக்குகளிலும், அவர்களின் வீடுகளிலும் கூடக் காணப்படுகின்றது. எச்.ஐ.வி., பாசிடிவ் பெண்கள் பலரை டாக்டர்கள் வார்த்தைகளால் சாடுவதும், சிகிச்சை தர மறுப்பதும் ரஷ்யாவில் சாதாரணமாக காணக்கூடியதாக இருக்கின்றது.
அனாதைகளாக விடப்படும் குழந்தைகள், எச்.ஐ.வி., பாசிடிவ் குழந்தைகளுக்கான அனாதை இல்லங்களிலோ, அல்லது ஆஸ்பத்திரிகளில் உள்ள தனி வார்டுகளிலோ வைத்துப் பராமரிக்கப்படுகின்றனர். ரஷ்ய பார்லிமென்டில் உள்ள எம்.பி.,க்களும், உரிமைகளுக்காகப் போராடுபவர்களும் எச்.ஐ.வி., பாசிடிவ் குழந்தைகளுக்காகவும், பெண்களுக்காகவும் நிறைய பேராடியிருந்தாலும், இன்னும் பேராடுவதற்கு நிறைய தேவைகள் உள்ளன. ரஷ்யாவில் எச்.ஐ.வி., பாசிடிவ் மனிதர்கள் வேலையில் இருந்து விரட்டப்படுகின்றார்கள். வாடகைக்கு இருப்பவர்கள் உடனே வீட்டை காலி செய்யப்படுகிறார்கள். எச்.ஐ.வி., வைரஸ் தாக்கப்பட்டவர் என்று தெரிந்தால், டாக்டர்கள் கூட சரியாக சிகிச்சை தருவதில்லை.
Dinamalar

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>