12-05-2005, 08:13 PM
இலங்கையில் எந்தத் தீர்வையும் நோர்வே திணிக்காது அரசும் புலிகளுமே தீர்வைப் பற்றி முடிவு செய்ய வேண்டும்
இந்தியாவிடம் நோர்வே தெரிவிப்பு
இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் ஏற்றுக் கொள்ளும் இறுதித் தீர்வுக்கான அனுசரணை முயற்சிகளில் ஈடுபடுவோமே தவிர, எந்தத் தீர்வையும் எவர் மீதும் திணிக்கும் நோக்கமெதுவும் தங்களுக்கு இல்லையென நோர்வே அனுசரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுடில்லியில் இந்திய வெளியுறவுச் செயலர் சியாம் சரணைச் சந்தித்து இலங்கையின் சமாதான முயற்சிகள் தொடர்பாக கலந்துரையாடிய போதே நோர்வேயின் நிலைப்பாட்டை, அந்நாட்டு அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் இலங்கையின் சமாதான முயற்சிகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு நோர்வேயை எவ்விதத்திலும் பழிசொல்ல முடியாதெனவும் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.
தங்கள் மீது இது தொடர்பாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளையும் சொல்ஹெய்ம் முற்றாக மறுத்துள்ளார். இலங்கை இனப்பிரச்சினைக்கு சமஷ்டி வகையிலான தீர்வுதான் தேவையென்பது போன்று எவ்வித கருத்துகளையும் நோர்வே தெரிவிக்காது. தீர்வுக்கான அனுசரணையை வழங்குவதே நோர்வேயின் பணியாகும்.
எவ்வித தீர்வென்பதை அரசும் புலிகளுமே முடிவு செய்ய வேண்டும். அதனை இரு தரப்பும் தீர்மானிப்பதற்கான அனுசரணை முயற்சியை நோர்வே தொடர்ந்தும் வழங்குமெனவும் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.
அத்துடன், இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் இந்தியாவின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட முடியாதெனவும் இதில் இந்தியாவின் பங்கு மிக மிக முக்கியமெனவும் இதன் காரணமாகவே ஒவ்வொரு தடவையும் தாங்கள் இந்தியாவுடன் சந்திப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.
http://www.thinakural.com/New%20web%20site...Important-9.htm