![]() |
|
மீண்டும் ஒரு இந்தியத் தலை ஈடா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19) +--- Thread: மீண்டும் ஒரு இந்தியத் தலை ஈடா? (/showthread.php?tid=2208) |
மீண்டும் ஒரு இந்தியத் தலை ஈடா? - narathar - 12-03-2005 கடசியாக வரும் தகவல்கள் இந்தியா அனுசரணையாளராக வர இருப்பதாகவும்,இந்தியா இலங்கையில் போர் முளாமல் ஒற்றாயாட்சியின் கீழ் தீர்வு காணப் பட வேண்டும் என்று சொல்லி இருப்பதாகவும் , வருகின்றன. நோர்வேயின் விசேடதூதுவர் வேறு இந்தியாவில் பேச்சுவார்த்தை நடத்துகிறார் ,இந்திய தென் பிராந்தியத் தளபதி வவுனியாவில வந்து பங்கர் எல்லாம் சரியா இருக்கோ எண்டு பாத்திட்டுப் போறார்.என்ன நடக்குது?என்ன நடத்தப் போகினம்? இன்னொரு தலயீட்டுக் கான சாத்தியக் கூறுகள் எவ்வாறு உள்ளன?இந்திய மத்திய ,தமிழ் நாட்டு மானில அரசியல் நிலவரங்கள் அவ்வறான இராணுவத் தலயீட்டுக்குச் சாதகமானதாக இருகின்றனவா? நோர்வேயின் பின்னால் இயங்கும் அமெரிக்கா, இந்தியாவுடன் நெருங்கி வந்திருப்பதன் விளைவுகளா இவை? . இன்றய ஐலன்ட் பத்திரிகையில் ஜயந்த தனபால தமிழ் மக்களுக்கு ஒரு நீயாயமானத் தீர்வைக் கொடுத்து புலிகளைச் தமிழ் மக்களிடம் இருந்தும் ,சர்வதேசத்திடம் இருந்தும் தனிமைப் படுத்த வேணும் எண்டு சொல்லி இருகிறார்.மகிந்தர் இந்திய இலங்கை ஒப்பந்தத்தைப் பற்றிக் கதைச்சிருக்கிறார்.எல்லாருமாச் சேர்ந்து தமிழ் மக்கழுக்கு ஒரு நிரந்தரத் தீர்வை திணிக்கப் போகினம?பழய இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் இணைப்பு சீயை புதிய மொத்தயில கொண்டு வரப் போகினம் போல ,ஆனா என்ன அதுக்கிடயிலா .....என்ன நடக்கப் போகுதோ? - Nellaiyan - 12-03-2005 இந்தியத்தரப்பின் இன்றைய நகர்வுகள்: இந்தியா சமாதானப் பேச்சுவார்த்தையில் இணை அனுசரணையாளராக பங்குபற்றுவதாயின்.. விடுதலைப் புலிகள் மீதுள்ள தடையை நீக்க வேண்டும்! இல்லையேல் இந்த இணை அனுசரணையாளருக்கான சாத்தியங்கள் இல்லவே இல்லை! தமிழர் தரப்பும் ஏற்க மட்டாது!!! அப்படியாயின் இந்தியா இத்தடையை நீக்குமா?? இல்லவே இல்லை!!! எல்லாவற்றிற்கு மேல் ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை எப்படியாவது அழிக்கவோ, நசுக்கத்தான் முற்படும்! அதுவே கடந்த கால வரலாறும்!!! அப்படியாயின் ஏனிந்த நகர்வுகள்????? உலகப் பொலிஸாருக்கு இந்தியாவின் கடந்த காலங்களின் இராணுவ முன்னெடுப்புகள் சந்தோஸத்தைக் கொடுக்கவில்லை!! அதிலும் ஐ.நா பாதுகாப்புச்சபை நிரந்தர உறுப்பினராவதற்கு நோக்கிய இந்திய பாச்சலும், ஆசிய கண்டத்தில் சீனா/இந்திய இராணுவ பலம் தமக்கு மிகப் பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதாலும், உலகப் பொலிஸார் சில நகர்வுகளை மேற்கொள்வதாக இந்திய அரசியல் தலைமை உணர்கிறது. மற்றும் ஈழத்தமிழர்கள் குறுகிய கால இறுதிப் பாய்ச்சலுக்கு தயாராகி வருவதும் இந்திய இராணுவ/அரசியல் தலைமைகளை தலையில் கையை வைக்கச் செய்திருக்கும்!! இதன் விளைவுகளே இன்றைய இந்திய நகர்வுகள்!!! அதிகரிக்கும் இத்தலையீடுகள் ஈழத்தமிழருக்கு ஆதரவான உலக, மேற்கத்தேய பொலிஸாரின் செயற்பாடுகளுக்கே வழி வகுக்கும்!!! இன்றைய தலையீகள், நாளைய எம் விடிவுக்கே!!! - தூயவன் - 12-03-2005 இப்போது இந்திய அரசு தான் சமாதான முயற்சிகளுக்கான இணை ஆதரவு நாடாக இருக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் அடிபடுகின்றன. இதற்காகத் தான் கிளிநொச்சி மருத்துவமனைக்கான மருந்து பொருட்களை இந்தியா அனுப்பி தமிழர்களின் ஆதரவை பெறும் கபட நோக்கத்தை செய்ததாக எண்ணத்தோன்றுகின்றது. எனி தான் தமிழர்கள் அவதானமாக காய்களை நகர்த்தவேண்டும். - narathar - 12-03-2005 போர் நிறுத்த உடன்படிக்கையை திருத்தும் யோசனையை விடுதலைப் புலிகள் நிராகரிப்பு முறையாக அமுல்படுத்துவது குறித்து பேசத்தயாரென அறிவிப்பு போர் நிறுத்த உடன்பாட்டில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தாங்கள் சம்மதிக்கப் போவதில்லையெனவும் இந்த உடன்பாட்டை அமுல்படுத்துவது குறித்துப் பேசத் தயாராயிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஹக்ரப் ஹொக்லண்ட் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கிளிநொச்சியில் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனைச் சந்தித்த போதே தமிழ்ச்செல்வன் இதனைத் தெரிவித்துள்ளார். போர் நிறுத்த உடன்பாட்டை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பாகப் பேசுவதற்கு தாங்கள் தயாராயிருப்பதாகவும் ஆனால், அதனைத் திருத்தியமைக்க தாங்கள் சம்மதிக்கப் போவதில்லையெனவும் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். எனினும், போர் நிறுத்த உடன்பாட்டில் திருத்தங்களைச் செய்ய புதிய அரசு விரும்புகிறது. இது தொடர்பாக கண்காணிப்புக் குழுவுக்கும் அரசு தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை நடைபெற்ற சந்திப்பில் அரசின் நிலைப்பாடு குறித்து கண்காணிப்புக் குழுத் தலைவர், தமிழ்ச்செல்வனுடன் பேசியுள்ளார். எனினும், புலிகள் இதற்கு சம்மதிக்கவில்லை. இதேநேரம், அரசுடன் உடனடியாக சமாதானப் பேச்சுகளை ஆரம்பிக்கத் தயாராயிருப்பதாகவும் யுத்தத்திற்கு செல்லும் எண்ணமெதுவும் தங்களுக்கு கிடையாதெனவும் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். சமாதானப் பேச்சுகளை எந்த அடிப்படையில் ஆரம்பிக்கலாமென்பது குறித்து யோசனை ஒன்றை முன்வைப்பதற்கு அரசுக்கு கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். தமிழ்ச்செல்வனுடனான இந்தச் சந்திப்பு தொடர்பாக கண்காணிப்புக் குழு நேற்று அரச தரப்பைச் சந்திக்கவிருந்தது. http://www.thinakural.com/New%20web%20site...Important-4.htm - vasanthan - 12-03-2005 இந்தியாவும் நோர்வேயுடன் சேர்ந்து மத்தியஸ்தம் வகிக்கப்போகுதாமே? உண்மையா? - Thala - 12-03-2005 <b>சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை பார்க்கிறது !</b> இந்தியாவின் தென் பிராந்திய இராணுவத் தளபதி லெப். ஜெனரல் பி.எஸ். தகார் நேற்று வியாழக்கிழமை வவுனியாவிற்கு விஜயம் செய்தார். வவுனியா விமானப்படை தளத்தினை வந்தடைந்த இவரை வன்னி மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி உட்பட சிரேஷ்ட இராணுவ உயர் அதிகாரிகள் வரவேற்றனர். வன்னி இராணுவ தலைமையகத்தில் கலந்துரையாடலை நடத்தியதுடன் ஏ - 9 வீதி வழியாக காலை 10 மணியளவில் ஓமந்தை சோதனை சாவடிக்கு விஜயம் செய்து அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நிலைவரங்களை அறிந்து கொண்டார். (சூரியன்..) <b>புலிகள் பகுதீக்க போக குறுக்கு வளி எதாவது தெரியுதா எண்டு பாக்கிரார்போல கிடக்கு..... புலிகளின் பலத்தை எடை போடலாம்... ஆனால் மனவுறுதி செயல்திறன் பற்றி அறியிற நோக்கமே இல்லாமல் என்னத்தை எட்டிப் பாத்து என்னத்தைச் செய்ய முடியும் ........</b> - sinnakuddy - 12-03-2005 எனக்கென்னவோ .....உவன் இந்தியாக்காரன் 87 இலை வடமராட்சியிலை ஆகாயத்திலை பறந்து சாப்பாட்டு பொட்டலம் போட்டதும்..கிளிநொச்சிக்கு மருந்து பொட்டலம் அனுப்பினதும் ஒரேமாதிரியான ஜில்மால் மாதிரிதான் கிடக்கு. - kurukaalapoovan - 12-03-2005 அது மாத்திரம் அல்ல இந்திய கடற்படை அதிகாரி ஒருவர் கடற்புலிகளால் இந்தியாவிற்கும் கடற்பிராந்திய நலன்களிற்கும் ஆபத்தில்லை எனக்கூறியதும் இன்னொன்று. குறுகிய காலத்திற்கு முன்னரும் (தேர்தல் முடிவுகள் ஓரளவு உறுதிப்படுத்தப்பட்ட காலப்பகுதியில்) இன்னொரு படைத்துறை அதிகாரியும் இப்படியான பாணியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திடீர் என மிகக்குறுகிய காலத்தில் இந்திய வெளிவிவகார கொள்கைவகுப்பாளர்களுக்கும் அதை அமுல்ப்படுத்தும் இடை நிலை அதிகாரிகளும் ஒட்டு மொத்தமாக ஈழத்தமிழர் மற்றும் விடுதலைப்புலிகள் தொடர்பாக ஞானம் பெற்றுவிட்டார்கள் என நினைப்பது தவறு. இது இந்திய மற்றும் ஈழத்தமிழ் உணர்வாளர்களின் நம்பிக்கையை பெறமுனையும் ஒரு நகர்வு போலதான் உள்ளது. வெகுஜனரீதியில் ஊடகவியலாளர்கள் மற்றும் கல்விமான்களிற்கு இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்கள் என்று நம்பவைக்க பல முயற்ச்சிகள் நடந்தேறலாம். அவர்கள் ஊடாக இந்தியாவின் தலையீடு சார்ந்த சாதாரண மக்களின் நிலைப்பாட்டை மாற்றும் ஒரு உளவியல் தந்திர நகர்வுகளை கடந்த சில வாரங்களாக முன்னெடுக்கிறார்கள் போலுள்ளது. இந்து நாளிதழ் இலங்கை அரசு கருணா குழுவை வைத்து புலிகளுக்கு எதிராக நிழல்யுத்தம் நடத்துவதை ஏற்றுக் கொண்டுள்ளது போன்ற பாணியில் பட்டும் படாமலும் எழுதும் செய்திகள் இதற்கு இன்னொரு உதாரணம். http://www.eelatamil.net/sankathi/index.ph...d=546&Itemid=26 - Eelathirumagan - 12-03-2005 இந்தியா இன்னும் ஒரு சூட்சிவலை பின்னுகின்றது. தமிழீழ மக்கள் அவதானத்துடன் இருந்தால் இதையும் வெல்லலாம். - narathar - 12-03-2005 எல்லா நகர்வுகளும் ஒரு தலயீட்டிற்கானா தாயார்படுத்தலாகவே தெரிகிறது.அந்த தலயீடு என்ன வடிவத்தில் வரும் எப்படி வரும் என்பதுவே இப்போது எழும் கேள்வி?அது இந்திய மத்திய மானில அரசியலையும் சார்ந்துள்ளது.அத்தோடு முன்னர் தாம் விட்ட பிழைகளை மீண்டும் இந்திய கொள்கைவகுப்பாளர்கள் விடப் போவதில்லை. அமெரிக்கா இராக்கில் இப்போதும் படிக்கும் பாடத்தை அவர்கள் பகுத்தறிவரே.தேசிய உணர்வு பெற்ற மக்களை இராணுவ வலிமை கொண்டு என்றுமே வெல்ல முடியாது என்னும் அடிப்படை அரசியலை இவர்கள் இம் முறையாவது விளங்கிக் கொள்வரோ? இம்முறை அனேகமாக ஒருவகை இணக்கப்பாடு போன்ற தோற்றத்தயே இவர்கள் எடுக்க வேண்டி இருக்கும். காரணம் இன்று தமிழ் ஈழ மக்கள் ஓரணியாக அரசியல் ரீதியாக திரட்சிபெற்ற மக்கட் கூட்டமாக எழுந்து நிற்கின்றனர்.இவர்களை வீழ்த்துவதாயின் நண்பனாக நடிக்க வேணும்.எமது அரசியற் சாணக்கியம்,எவ்வறு நாம் இதனை எம் மக்கள் மத்தியில் அம்பலப் படுத்துவதோடு, கிடைக்கும் சந்தர்ப்பத்தில் தமிழ் நாட்டு மக்களிடமும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி எமது அரசியலை, நியாயத்தை தமிழ் நாட்டவரிடமும் மற்றய இந்திய மக்களிடமும் கொண்டு போகப் போகிறோம் என்பதில் தங்கி இருகிறது. அவர்கள் தடயை முதலில் நீக்க வேணும் என்ற முன் நிபந்தனை கோரப்படலாம். - kurukaalapoovan - 12-03-2005 அவையின்ரை தடைக்கு முக்கியத்துவம் குடுத்த காலம் எல்லாம் மலையேறி பல வருடங்கள் ஆகிவிட்டுத்து. அதைப்பற்றி இன்னமும் முனகிக்கொண்டிருக்கிறது அவையும் அவையின் கைக்கூலிகளும் தான் . அவை தடையை நீக்கி போடக்கூடிய நாடகத்தால் தமிழ்த் தேசியத்திற்கு எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை. அந்த ஏமாத்து வித்தைக்கு பலியாகாமல் எம்மக்கள் விளிப்பாக இருப்பார்கள் என நம்புகிறேன். - narathar - 12-03-2005 தடை நீக்கப் படுவதால் நாங்கள் இந்திய,தமிழ் நாட்டு மக்களிடம் எமது அரசியல் நியாயத்தை எடுத்துச் செல்லலாம்.தடை நீக்கத்தால் எமக்கு அனுகூலமே தவிர ,கெடுதல் இல்லை.அத்தோடு இந்திய மக்கள் எமது அயலவர்.அத்தோடு இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு.எமது அயலுறவுக் கொள்கை தவிர்க்கமுடியாதபடி புவியியல் காரணிகளால் இந்திய பாதுகாப்போடு பின்னிப் பிணைந்தது.எமது போராட்டத்தை இந்தியா நசுக்காத வரை ,எமக்கும் இந்தியாவுக்கும் எவ்வித பகையும் கிடயாது. கடந்தகால கசப்புணர்வுகளை மறந்து இந்தியா தமிழ் ஈழத்தை அங்கீகரித்து ,தனது பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்.சிங்கள இனவாதத்தின் தற்போதய நெருக்கடிக்கு இந்தியா அபயமளித்து,தனது நீண்ட கால நலங்களுக்கு குந்தகம் விளையும் வண்ணம் தலயீட்டை மேற்கொள்ளும் மாகில் அது நீண்டகால நோக்கில் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே அமையும்.தற்போதய நெருக்கடியில் இருந்து மீண்டதும் சிங்கள இனவாதம் முன்னரைப் போல் இந்தியாவிற்கு எதிராகவும் திரும்பும்.ஏற்கனவே ஜாதிக கெல உருமய இதனைக் கோடிட்டுக் காட்டி உள்ளது. நாம் இந்திய கொள்கை வகுப்பாளரையும் இந்திய, தமிழ் நாட்டு மக்களையும் ஒரே கண்ணோட்டத்தோடு பார்ப்பது தவறு. நீண்டகால நோக்கில் இந்திய ,தமிழ் நாட்டு மக்களுடன் எமது உறவை வலுப் படுத்த வேண்டும்.அது தடை நீக்கத்தினால் சாத்தியப் படும். - cannon - 12-04-2005 இந்திய பிராந்திய வல்லாதிக்கத்தின் ஈழத்தமிழர்கள் மேல் கொண்ட கொள்கை மாறும்!!!!..... ....கேட்பதற்கு சந்தோஸமான சொற்கள்தான்! ஆனால் நிஜத்தில்???????.... ....இதற்கு முன் ஓயாத அலைகள் யாழ் நகரை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கும் போது, இதே இந்திய ஏகாதிபத்தியவாதிகள் எம்மை நோக்கி நீட்டிய ஒலிவ் ....."லன்டனிலுள்ள இந்தியத் தூதரகம் கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தை தூதரகத்திற்கு அவசரமாக அழைக்கிறது. அங்கு இந்தியத் தூதுவரால் பல உறுதிமொழிகள் அழிக்கப்பட்டன!!! 1. யாழ்நகரை புலிகள் கைப்பற்றுவதற்கு முன் அங்குள்ள இலங்கை இராணுவத்தை உயிரிழப்பை தவிர்ப்பதற்காக அப்புறப்படுத்துகிறோம். 2. புலிகளின் இராணுவ நகர்வுகளுக்கு எவ்வித இடையூறுகளும் அளிக்க மாட்டோம். *. ஏறக்குறைய எம்மை அங்கீகரிப்பதற்கு சமமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால் நடந்தனவைகள் எல்லாம் என்ன??? 1. யாழ்நகரை நோக்கிய பாச்சலின் சிறிய இடைவெளியை ஏற்படுத்தி, குறுகிய காலத்தில் பாகிஸ்தான், செக் குடியரசு போன்றனவற்றிலிருந்து பல பல்குழல் செலுத்திகள், பல தரப்பட்ட அழிவாயுதங்கள் இறக்கப்பட்டு யாழ்நகரை காப்பாற்ற இந்தியா உதவியது!!! இதன் மூலம் இலங்கை இராணுவம் தொடுத்த எதிர் தாக்குதலில் சாவகச்சேரியே தரைமட்டமாக்கப்பட்டது!!! 2. இந்திய இராணுவ போக்குவரத்து விமானங்களே இலங்கை இராணுவத்தை பெருமளவில் யாழில் தரையிறக்கக்கூட பாவிக்கப்பட்டது!!!.... ........இதன் மூலம் எம் பூர்வீக நிலமொன்று சில வருடங்களின் பின் தான் மீட்கப்பட வேண்டிய சூழ்நிலையும்!!!!! இதே இந்தியாதான் முன்பும் எம் பிரட்சனைக்கு நிரந்தரத் தீர்வு தருவதாக கூறி அமைதிப் படையாக வந்து நரவேட்டை ஆடிய ரணங்கள் இன்னும் மாறாமல் உள்ளது!!!! மீண்டும், மீண்டும் நப்பாசைகளா???????? - narathar - 12-04-2005 திரு கனோன் அவர்களே நான் மேலெ எழுதியவற்றைக் கவனமாகப் படித்து அதில் எங்கே நப்பாசை உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டவும்.இந்தியா சொன்னது வாக்குறுதி தந்தது அதனால் நாங்கள் யாழ்ப்பாணத்தைப் பிடிக்கவில்லை என்பது உண்மைக்குப் புறம்பான கதை.அந்தளவிற்கு இழிச்சவாயர் இல்லை எமது அரசியற் தலமை.அதற்கான காரணங்கள் இங்கே எழுத முடியாதவை.கள நிலமை சம்பந்தமானவை. நாம் எமக்குக் கிடைக்கும் எந்தச் சந்தர்ப்பத்தையும் எமக்குச் சாதகமாகப் பயன் படுத்த வேணும்.சர்வதேச அரசியல் நலங்கள் சார்ந்தது.இதிலே அவர் உதவி செய்வார் ,இவர் உதவி செய்வார் என்று நாம் ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது.எமது பலமே எமக்குத் துணை.அதனை நாம் எவருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது.அதே நேரம் பின்னப்படும் சதிவலைகளை விரிப்பவருக்கு எதிராகப் பயன் படுத்த வேணும்.அவ்வாறே இந்த 4 வருட சமாதானாம் என்று சொல்லப் படுகின்ற காலம் பயன் படுத்தப்பட்டது.இந்திய நிலைப் பாடு எவ்வாறு மாற்றம் அடையும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.இன்று நாம் பலம் பெற்று அரசியல் ரீதியாக ஒருமுகப் பட்டுள்ளோம்.எமக்கு என்று ஒரு தளமும் கட்டுப் பாட்டுப் பிரதேசமும் இருக்கு.முன்னர் அவ்வாறான நிலை இருக்கவில்லை.ஆகவே முன்னர் பயன்படுத்திய உபாயங்களயே இப்போதும் செய்வார்கள் அல்லது அதே உபாயங்களைக் கையாள்வர் என்று நினைப்பது புத்திசாலித்தனமல்ல.எமக்கு நிரந்தர எதிரிகள் கிடயாது,எமக்கு இருப்பவை எமது நலங்கள்,அவை சார்ந்தே தீர்மனங்கள் எடுக்கப் பட்டு வருகின்றன. எது எப்படியோ காலம் பதில் சொல்லும்.அடுத்த வருசம் பதில் கிடைக்கலாம். - தூயவன் - 12-04-2005 sinnakuddy Wrote:எனக்கென்னவோ .....உவன் இந்தியாக்காரன் 87 இலை வடமராட்சியிலை ஆகாயத்திலை பறந்து சாப்பாட்டு பொட்டலம் போட்டதும்..கிளிநொச்சிக்கு மருந்து பொட்டலம் அனுப்பினதும் ஒரேமாதிரியான ஜில்மால் மாதிரிதான் கிடக்கு. உண்மை தான். ஆனாலும் இங்கு சிலர் சொன்னது போல அவனின் சதிகளை எமக்குச் சார்பான காய்நகர்த்தல்களாக மாற்றுவதற்கு நாம் தயாராகவேண்டும். எம் மக்களையும் தயார் படுத்த வேண்டும். வெளிப்படையாக சிரித்து பேசி முதுகில் குத்தும் சதியை, அவலத்தை தருபவனுக்கே அதைத் திருப்பிக் கொடுப்போம், என்ற தலைவரின் சித்தாந்தத்தை பயன்படுத்துவோம்.. - cannon - 12-04-2005 ஈழத் தமிழர் பிரச்சனையில் தாய்த்தமிழகத்தின் ஆறு கோடி தமிழர்கள் ஆழ்ந்த கவலை கொண்டிருக்கிறார்கள் என்பதை மன்மோகன் அரசு மறந்துவிடக் கூடாது : தினமணி நாளேடு எச்சரிக்கை!! [ஞாயிற்றுக்கிழமை, 4 டிசெம்பர் 2005, 00:09 ஈழம்] [ம.சேரமான்] ஈழத் தமிழர் பிரச்சனையில் ஆறு கோடி தாய்த் தமிழகத் தமிழர்கள் ஆழ்ந்த கவலை கொண்டிருக்கிறார்கள் என்பதை மன்மோகன் அரசு மறந்துவிடக் கூடாது என்று தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தினமணி நாளேடு எச்சரிக்கை விடுத்துள்ளது. தினமணி நாளேட்டின் தலையங்கம்: தில்லிக்கு வந்து பிரதமரைச் சந்தித்துப் பேசிய இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் சமரவீரவிடம், "இலங்கையில் போர் நிறுத்தம் நீடிக்க வேண்டிய அவசியத்தை'' மன்மோகன் சிங் வற்புறுத்தியிருக்கிறார். அதேசமயத்தில், "போர்நிறுத்த உடன்படிக்கையை மதித்து நடப்பதென புதிய அதிபர் மகிந்த ராஜபட்சய உறுதி பூண்டிருப்பதாகவும்'' சமரவீர தெரிவித்திருக்கிறார். அதற்கு முன், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ. அகமதுவைச் சந்தித்து கலந்துரையாடிய அவர், "ஈழப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண்பதற்காக பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு'' விடுதலைப் புலிகளுக்கு அதிபர் அழைப்பு விடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். "அப் பேச்சுவார்த்தைகள் திறந்த மனத்துடன், ஒளிவுமறைவுக்கு இடமில்லாமல் நடைபெற வேண்டும்'' என்று அதிபர் விரும்புவதாகவும் அப்படி நடந்தால் மட்டுமே அதில் எட்டக்கூடிய உடன்பாடுகளை நாடே ஏற்றுக்கொள்ளுமாறு செய்ய முடியும் என்பதும் அதிபருடைய கருத்து என்றும் சமரவீர விளக்கியிருக்கிறார். ஆனால் ஈழப்பிரச்சினையின் நிரந்தரத் தீர்வுக்கு இந்த அணுகுமுறை போதுமானதாகத் தோன்றவில்லை. போர் நிறுத்தம் நான்கு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. இச் சூழ்நிலையில், ஈழப் பிரச்சினை தீர்வுக்கான திசையில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்றால் இல்லையென்றே பதிலளிக்க வேண்டியிருக்கிறது. இதற்கு முதன்மையான காரணம் - தீர்வுக்கான திட்டத்துக்கு சிங்களர் இடையே செல்வாக்குப் பெற்றுள்ள சந்திரிகாவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் - எதிர்க்கட்சியான ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியும் எக்காலத்திலும் ஒருமுக ஆதரவு காட்ட முன்வராததேயாகும். இதற்கு அடிப்படைக் காரணம் - ஈழத் தமிழர்களுடைய கோரிக்கையின் அடிப்படையையே புதிய ஆளும் சக்தி அங்கீகரிக்க மறுப்பதுதான். "கூட்டாட்சி' அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டுமென்ற சித்தாந்தத்தையே புதிய ஆட்சியாளர் ஏற்க மறுத்து வருகிறார்கள். பிறகு எப்படி திறந்த மனத்துடன் பரஸ்பர நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பு இருக்க முடியும்? ஈழப் பிரச்சினையில் சர்வகட்சிகளின் ஒத்துழைப்புடன் வாஜ்பாய் அரசு வடித்த தேசியக் கொள்கையையே மன்மோகன் அரசும் பின்பற்றுவதாக நாடாளுமன்றத்தில் சில காலத்துக்கு முன் அறிவிக்கப்பட்டது. இக் கொள்கை நான்கு அம்சங்களைக் கொண்டது. அதில் முக்கியமான அம்சம் என்னவெனில், "ஒன்றுபட்ட இலங்கைக்குள் - கூட்டாட்சிக் கட்டமைப்பு ஆட்சி முறை மூலம் ஈழப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும்'' என்பதாகும். அதிலும் குறிப்பாக 2003 அக்டோபரில் - தில்லியில் வாஜ்பேயியும் பிரதமர் விக்கிரமசிங்கவும் வெளியிட்ட கூட்டறிக்கையிலும் இந்த அம்சம் வற்புறுத்தப்பட்டிருக்கிறது. "இலங்கையின் ஒற்றுமைக்கு ஊறு ஏற்படாத வகையில் தீர்வு அமைந்திருப்பது எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு கூட்டாட்சிக் கட்டமைப்பு ஆட்சி முறையும் பிரச்சினையின் தீர்வுக்கு அத்தியாவசியம்'' என்ற வாசகம் அக் கூட்டறிக்கையில் எடுப்பாக இடம்பெற்றிருந்தது. ஆனால் இப்பொழுதோ அந்த அடிப்படைக் கொள்கையையே ஏற்க மறுக்கும் அரசு - இந்தியாவுடன் பொருளாதார உடன்படிக்கை காண விரும்புகிறது. இக் கட்டத்தில் "கூட்டாட்சி அடிப்படையிலேயே தீர்வு' என்ற அடிப்படைக் கொள்கையை ராஜபக்ச அரசிடம் வலியுறுத்திக் கூற இந்திய அரசு தயங்கக் கூடாது. ஏனெனில் ஈழப் பிரச்சினை 30 லட்சம் தமிழர்களின் வாழ்வுரிமை, சமத்துவக் குடியுரிமை, கலாசாரப் பாதுகாப்புரிமை சம்பந்தமானது. இப் பிரச்சினையில் தாய்த்தமிழகத்தின் ஆறு கோடி தமிழர்கள் ஆழ்ந்த கவலை கொண்டிருக்கிறார்கள் என்பதை மன்மோகன் அரசு மறந்துவிடக் கூடாது என்று அந்தத் தலையங்கம் எச்சரித்துள்ளது. http://www.eelampage.com/index3.php?cn=22225 - Thala - 12-04-2005 என்ன தினமணியின் அறிக்கை இப்பிடி இருக்கிறது..??? தினமணி திடீர் எண்டு மனம் மாறிவிட்டதா..?? இல்லை எப்போதும் அவர்களுக்குள் இருக்கும் உள்ளக் குறுகுறுப்பை இப்போதான் வெளியிடத் துணிவு வந்ததா...??? இப்பிடி நிறையக் கேள்விகள் வந்தாலும்... அன்போடு வரும் அவர்களின் ஈழத்தவர் பற்றிய செய்தி ஈழத்தமிழரை நெகிழ வைப்பது என்னவோ உண்மை.... - narathar - 12-04-2005 தலை நீங்கள் தினமணியையும்,தினமலரையும் போட்டுக் குழப்புகிறீர்கள் என்று நினைக்கிறேன்.தினமணி நீண்டகாலமாகவே ஈழத்தமிழருக்கு ஒரளவேனும் ஆதரவாக எழுதியிருக்கிறது.அதன் ஆசிரியர் குழுவில் இருந்த கார்மேகம் (இவர் ஒரு இலங்கை , இந்தியப் பூர்வீகத் தமிழர்)அவர்கள் முன்னர் வடகிழக்குக்கு வந்து ஒரு தொடர் கட்டுரையை தமிழர் தன்னாட்சி பற்றி தினமணியில் எழுதி இருக்கிறார். - narathar - 12-04-2005 சிறிலங்கா அரசு விரிக்கும் நயவஞ்சக வலையில் விழ வேண்டாம்: இந்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை! [ஞாயிற்றுக்கிழமை, 4 டிசெம்பர் 2005, 20:01 ஈழம்] [ந.ரகுராம்] இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியாவைத் தலையிட வைக்க சிறிலங்கா அரசு விரிக்கும் நயவஞ்சக வலையில் விழ வேண்டாம் என்று இந்திய அரசுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை ஊடகவியலாளர்களுக்கு வைகோ நேற்று சனிக்கிழமை அளித்த நேர்காணலில் கூறியதாவது: சிறிலங்கா அரச தலைவர் ராஜபக்சே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்துகளின் மூலம் தமிழர்களுக்கு அடிப்படை உரிமைகூட கிடைக்காது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்தும் முயற்சியில் நோர்வேக்கு முக்கியத்துவம் அளிப்பதைவிட இந்தியாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறுவது நயவஞ்சகமான கருத்தாகும். நார்வேதான் இந்த விவகாரத்தில் உண்மையாக செயல்பட்டது. ராஜபக்சேயின் உள்நோக்கம் குறித்தும் சிறிலங்கா அரசு விரிக்கும் நயவஞ்சக வலையில் விழ வேண்டாம் என்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ராணுவ அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரிடம் நான் எச்சரித்து இருக்கிறேன் என்றார் வைகோ. http://www.eelampage.com/index2.php?cn=22241 - narathar - 12-04-2005 அனுசரணையாளராக சீனாவை அழைக்க ஜே.வி.பி. முயற்சிக்கிறது: சுரேஸ் பிரேமசந்திரன் [ஞாயிற்றுக்கிழமை, 4 டிசெம்பர் 2005, 19:16 ஈழம்] [ம.சேரமான்] இலங்கை இனப்பிரச்சனைக்கான அனுசரணையாளராக சீனாவை ஈடுபட வைக்க ஜே.வி.பி.யும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகத்துக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இனப்பிரச்சனையில் இந்தியா ஏற்கனவே தலையிட்டுள்ளது. இந்திய அமைதிப் படையும் இங்கே வந்துள்ளது. இந்தியா இப்போது நேரடியாக தலையிடாது. ஆனால் நோர்வேயை ஆதரிக்கும். அதே நேரத்தில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஜே.வி.பி. ஆகியோர் சீனாவை அனுசரணையாளராக அழைக்க முயற்சிக்கிறார்கள். சீன ஆதரவாளர்களாக மங்கள சமரவீரவும் ஜே.வி.பியினரும் உள்ளனர். அம்பந்தோட்டை துறைமுக மேம்பாட்டுக்காக சீனாவை அவர்கள் அழைத்துள்ளார். சீனாவை அவர்கள் அழைத்தால் இங்கு மோசமான விளைவுகள் ஏற்படும். சிங்கள பேரினவாதிகளாகவும் தமிழர்களுக்கு எதிராகவும் பேசிவருகிற கொட்டகதெனியா, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போன்ற கடும்பாக்காளர்களை அரசாங்கப் பொறுப்புக்களில் மகிந்த ராஜபக்ச நியமித்துள்ளார். போருக்கு அரசாங்கம் தயாரானால் அது பிரபாகரனின் தவறு அல்ல. விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்கு அழைப்பதாகக் கூறுவது எளிது. ஆனால் எந்த அடிப்படையில் மகிந்த ராஜபக்ச பேசப் போகிறார்? என்று சுரேஸ் பிரேமசந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். http://www.eelampage.com/index2.php?cn=22240 |