12-05-2005, 07:58 PM
எனது பார்வையில்
kurukaalapoovan Wrote:-1- தமிழ்நாட்டில் இன்று ஈழத்தமிழரின் போராட்டத்திற்கு ஆதரவான அரசியல் கட்சிகள் எவை?ஈழத்தமிழர்பால் அனுதாபம் இருக்கும், பெரிதாக வரவாய்ப்பில்லை, பெரியபிரயத்தனம் பன்னினால் தமிழ்நாட்டளவில் பெரிதாகவரலாம், இந்திய அளவில் தமிழ்நாடு ஆதிக்கம் செலுத்துவது என்பது வலுகஸ்ரம். வலுகஸ்ரம்.
வைகோவையும் பழநெடுமாறனையும் சொல்லலாம், ராமதாஸ்,திருமாவளவன் முழுமையான நம்பிக்கை இல்லை.
திமுக சந்தர்ப்பவாதம், அதிமுக ஜெயலலிதவின் காலத்தின் பின் சிலவேளைகளில் மாறலாம்.
-2- அந்த ஆதாரவுக்கட்சிகளின் அரசியல் பலம் தமிழ்நாட்டில், இந்தியாவில் ஓப்பீட்டளவில் என்ன நிலையில் தற்பொழுது உள்ளது?
தமிழ்நாட்டில் குறைவு, இந்தியாவில் வலுகஸ்ரம்.
-3- இந்த அரசியல் கட்சிகளின் தற்போதைய வெகுஜன ஆதரவுத்தளம் எந்த அடிப்படையில் (கொள்கைகளால்) உருவாக்கப்பட்டுள்ளது? இதன் எதிர்காலம் எப்படி இருக்கும்?
வைகோ,பழநெடுமாறனின் ஆதரவுத்தளம் நம்பிக்கை அழிக்கிறது, எதிர்காலத்தில் முன்னேற்றம் கானப்படலாம்.
-4- இந்தக்கட்சிகளின் கொள்கைகள் தலமைத்துவங்கள் ஆட்சிபீடம் ஏறும் மற்றும் எதிர்கால மாற்றங்கள் சவால்களை எதிர்கொள்ளக்கூடி பூரணத்துவம் கொண்டவையா?
கருனநிதியின் பின் வைகோ வரலாம், வராமலும் விடலாம், மற்றப்படி வலுகஸ்ரம்.
-5- தமிழ்நாட்டு மக்களின் பெரும்பான்மையானவர்களின் இன்றைய அரசியல் விழிப்புணர்வு தொளிவு எந்த நிலையில் உள்ளது?
விழிப்புணர்வு கூடி இருக்கிறது, அரசியலின் முன்னால் வறுமை அடிபட்டு போகிறது. காலத்தை அனுசரித்து போகவேண்டியவர்களாக இருக்கிண்றனர்.
-6- தமிழ்நாட்டில் வேகமாக வழர்ந்துவரும் சமுதாயவர்க்கம் எது? இவர்களது எதிர்பார்புகள் அபிலாசைகள் என்னவாக இருக்கப்போகிறது? எதிர்கால தமிழ்நாட்டு அரசியலில் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் இந்தவர்கத்தின் முக்கியத்துவம் என்ன?
வேகமாக வளர்ந்து வருவபர்கள் பிராமணர்கள், அரசியலில் பெரிதாக இல்லாவிட்டாலும், அதிகாரங்களில் இவர்கள்தான் இருக்கப்போகிறார்கள், அரசியல் வாதிகளுக்கு ஜால்ரா அடித்து தமது பொருளாதாரத்தையும், இனத்தையும் வளர்க்க முன்னுரிமை கொடுப்பார்கள்.
-7- தமிழ்நாட்டு மக்கள் தமது அரசியல் தலைமியிடம் இன்றும் எதிர்காலத்திலும் எதை எதிர்பார்க்கப்போகிறார்கள்? அதாவது எவை தேர்தல் விஞ்ஞாபனங்களாக இருக்கிறது, இருக்கப் போகிறது?
வேலை வாய்ப்பு,வறுமை ஒழிப்பு, தண்ணீர்,வீட்டு வசதி இதுவெல்லாம் அவர்கள் கனவுகள் மட்டுமே.
-8- இந்தியாவின் எதிர்கால அபிலாசைகள் என்ன அவற்றை அடைந்து கொள்ள வகுக்கப்படும் கொள்கைகள் என்னவாக இருக்கும்? இவை சார்ந்த சவால்கள், அனுகூலங்கள் என்ன?
வல்லரசுக்கனவு மட்டுமே அமெரிக்காவும்,சீனாவும் நண்பர்கள் ஆகலாம் பாகிஸ்தானும் இலங்கையும் தேள்வைக்குமட்டுமே.
-9- இவற்றிற்கு ஏற்ற பங்காளிகள் யார்? எதிரிகள் யாராக இருக்கப்போகிறார்கள்?
அமெரிக்காவும்,சீனாவும் நண்பர்கள் ஆகலாம் பாகிஸ்தானும் இலங்கையும் தேள்வைக்குமட்டுமே.
-10- இந்தியாவின் எதிர்கால அபிலாசைகள் சார்ந்த இந்திய கொள்கை வகுப்பாளர்களின் பார்வையில், இந்திய மற்றும் தமிழ்நாட்டு மக்களின் பார்வையில் இன்று ஈழத்தமிழரின் போராட்டத்திற்கு ஆதரவு காட்டும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் நிலை, பங்களிப்புகள் என்னவாக இருக்கப் போகிறது?
.
.
.

