12-05-2005, 03:36 AM
iruvizhi Wrote:மதுரனண்ணாவுக்கு எனது வாழ்த்துக்கள்.
....எது எவ்வாறாக இருந்தாலும் நடுவர்களாகிய உங்கள் மூவரையும் மதிப்போடும் கௌரவத்தோடும் யாழ்கள உறவுகளாகிய நாம் பார்ப்பதோடு உங்களை யாழ்கள உறவுகளாகிய நாம் வாழ்த்துகின்றோம்.....
இருவிழி
நன்றி! மதிப்பு.. கெளரவம்.. எல்லோருக்கும் பொதுவானது இருவிழி. அந்த வகையில் யாழ் கள உறுப்பினர்கள் யாவரும் மதிப்பும் கெளரவமும் உள்ளவர்களே!
இன்று யாழ் களத்தில் இளைஞர்களது கருத்துகளும் எண்ணங்களுமே ஓங்கி நிற்கின்றன. அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அந்த வகையில் அவர்களது கருத்துகளை ஓரமாக இருந்து பார்த்து இரசிப்பதே எனது இணைய உலாவில் ஒரு அங்கம்.
ஆகவே... யாழ் களத்தில் போட்டிகளையோ அல்லது வேறு நிகழ்வுகளையோ உங்களைப் போன்ற இளைஞர்கள் முன்னெடுப்பதே காலத்தோடு பொருந்திய செயலாக இருக்கும்.. ஆரம்பியுங்கள். போட்டியாளனாக பங்குபற்ற ஆவலாயுள்ளேன்.
.

