12-05-2005, 01:14 AM
Vaanampaadi Wrote:அன்பான நண்பணே தலா
எமது பாரத பிரதமர் மன்மோகன்சிங் ஒருபோதும் இலங்கை பிரச்சினையில் நேரடியாக தலையிடமாட்டார் என்றே நம்புகிறேன்.....சகோதரா ஒன்றை நீங்கள் கவனத்தில்கொள்ள வேண்டும் ...... அதாவது சோனியா காந்தி அம்மையார்தான் தற்போதைய அரசை வழிநடத்தி செல்லுகிறார் .... அவர் ஒரு இத்தாலி நாட்டைசேர்ந்தவர் என்பது தெரிந்ததே ....அவர் சிலவேளைகளில் தனது கணவணை கொன்றவர்களை பலிவாங்கவேண்டும் என நினைத்தால் அது வேறு மாதீரியாக முடியும் அன்பரே......
இந்தியா தலையிட வேண்டும் இது எபோதும் வேண்டுவதுதான்.... ஆனால் ஒரு பக்கசார்பாய் நடந்து கொள்ளக் கூடாது... இதுதான் எங்களின் கவலையே...
போர் எண்டு வரும் போது அதை வளி நடத்துபவர்கள் எதிரிகள் ஆகுவது இரு தரப்பின் மக்களின் மனவோட்டம்..... இந்திய ராணுவம் படை எடுத்த போது அமரர் றஜீவ் அதற்குத் தலைவர்..... அவரைப் பாதுகாத்திருக்க வேண்டியது இந்திய ராணுவத்தின் கடமை. அதை அவர்கள் தவறவிட்டு விட்டு அதை இன்னும் ஒரு இனத்திம் மீது பழிபோடுவது சரியானதா..?? அதனால் பாதிக்கப் படும் மக்களில் இருந்து இன்னும் எதிரிகளைச் சம்பாதிப்பது விவேகமானதா..??? அப்படி ஒரு தவறை இந்தியா இனியும் செய்யாது எண்டு நம்புகிறேன்.....
எதிர்காலத்தை சுபீட்ச்சமாக்கி இந்தியாவைச் சுற்றி நட்புறவை வளர்த்து வரும் இந்திய அரசு தமிழரையும் அணைத்துச் செல்லும் எண்டு நம்புகிறன்..
::

