12-04-2005, 11:38 PM
<b>யோகா அழகு. யோகமும் அழகும் சேர்ந்தால் அதுதான் லீனா கிங்கர். சென்னையின் இளம் யோகா மாஸ்டர்! </b>
டிஸ்கொதே, பியூட்டி பார்லர், ஷாப்பிங்னு பறந்துட்டு இருக்கிற மாடர்ன் பெண்கள் மத்தியில் வித்தியாசமாக யோகாவைத் தேர்ந்தெடுத்தது எப்படி லீனா? என்றால், தேவதையாகச் சிரிக்கிறார்.
<img src='http://www.vikatan.com/av/2005/dec/11122005/p18b.jpg' border='0' alt='user posted image'>
மனசு, உடம்பு இரண்டுமே எப்போதும் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என நினைக்கும் பெண் நான். எந்த வசதிகளுக்கும் குறைச்சல் இல்லாத வாழ்க்கை. ஆனா, மனசு மட்டும் ஏதோ ஒண்ணைத் தேடிட்டே இருந்தது. நடனத்தின் மீது காதல் வர, பரதநாட்டியம், குச்சுப்புடி என ஒரு ரவுண்ட் போனேன். அடுத்தது, கராத்தே. அது முடிந்ததும் களறி கற்க, திருச்சூர் பக்கம், சாக்கோடு கிராமம் போனேன்.
<img src='http://www.vikatan.com/av/2005/dec/11122005/p18.jpg' border='0' alt='user posted image'>
களறி பயிற்சி செய்யும்போது, தவறி விழுந்து காலில் பயங்கர அடி. மூன்று மாதங்கள் படுக்கையில் கிடந்தேன். டான்ஸர் ஆகணும், கராத்தே சாம்பியன் ஆகணும், களறியில் ஜெயிக்கணும்னு என்னென்னவோ கனவுகளோட இருந்த எனக்கு, எல்லாமே ஒரே நாளில் முடிந்துபோன மாதிரி இருந்தது. அப்போது தான், கோயமுத்தூரில் இருக்கிற சுவாமிஜி சிவானந்தா யோகப் பயிற்சி மையம் பற்றி கேள்விப்பட்டேன். யோகா கற்கப் போனேன். முதல் மாதத்தில் உடல் வலியை மறந்தேன். அடுத்த மாதம், மன வலியும் போயேபோச்சு. யோகாவின் அருமை புரியவர, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என முறையாகப் பயின்ற யோகாவை சொல்லித்தர ஆரம்பித்தேன்.
<img src='http://img530.imageshack.us/img530/3984/p18a6si.jpg' border='0' alt='user posted image'>
ஏழை அநாதைக் குழந்தைகளுக்கு முதலில் யோகா சொல்லித் தந்தேன். வாழ்க்கையின் இன்னொரு பக்கம் எனக்குப் புரிய ஆரம்பித்தது. ஆறுதல் இல்லாமல், ஆதரவு இல்லாமல், அன்பு என்றால் என்னவென்றே அறியாமல் மனச்சுமைகளுடன் இருக்கிற எத்தனையோ பேருக்கு யோகா பயிற்சியும் தியானமும் ஒரு நல்ல மருந்து எனப் புரிந்துகொண்டேன். இனி, யோகா கற்றுத் தருவதே என் வாழ்க்கையின் குறிக்கோள் என முடிவுக்கு வந்தேன்.
சென்னையில் ஒரு யோகா மையம் அமைப்பதே என் கனவு என்கிறார் லீனா கிங்கர், ஒளிரும் விழிகளுடன்!
\ பா.ராஜநாராயணன்,
படங்கள்: ஜி.வெங்கட்ராம்
(விகடன்)