12-04-2005, 11:13 PM
அனுசரணையாளராக சீனாவை அழைக்க ஜே.வி.பி. முயற்சிக்கிறது: சுரேஸ் பிரேமசந்திரன்
[ஞாயிற்றுக்கிழமை, 4 டிசெம்பர் 2005, 19:16 ஈழம்] [ம.சேரமான்]
இலங்கை இனப்பிரச்சனைக்கான அனுசரணையாளராக சீனாவை ஈடுபட வைக்க ஜே.வி.பி.யும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகத்துக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இனப்பிரச்சனையில் இந்தியா ஏற்கனவே தலையிட்டுள்ளது. இந்திய அமைதிப் படையும் இங்கே வந்துள்ளது. இந்தியா இப்போது நேரடியாக தலையிடாது. ஆனால் நோர்வேயை ஆதரிக்கும்.
அதே நேரத்தில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஜே.வி.பி. ஆகியோர் சீனாவை அனுசரணையாளராக அழைக்க முயற்சிக்கிறார்கள். சீன ஆதரவாளர்களாக மங்கள சமரவீரவும் ஜே.வி.பியினரும் உள்ளனர். அம்பந்தோட்டை துறைமுக மேம்பாட்டுக்காக சீனாவை அவர்கள் அழைத்துள்ளார். சீனாவை அவர்கள் அழைத்தால் இங்கு மோசமான விளைவுகள் ஏற்படும்.
சிங்கள பேரினவாதிகளாகவும் தமிழர்களுக்கு எதிராகவும் பேசிவருகிற கொட்டகதெனியா, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போன்ற கடும்பாக்காளர்களை அரசாங்கப் பொறுப்புக்களில் மகிந்த ராஜபக்ச நியமித்துள்ளார். போருக்கு அரசாங்கம் தயாரானால் அது பிரபாகரனின் தவறு அல்ல. விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்கு அழைப்பதாகக் கூறுவது எளிது. ஆனால் எந்த அடிப்படையில் மகிந்த ராஜபக்ச பேசப் போகிறார்? என்று சுரேஸ் பிரேமசந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
http://www.eelampage.com/index2.php?cn=22240