12-04-2005, 11:12 PM
சிறிலங்கா அரசு விரிக்கும் நயவஞ்சக வலையில் விழ வேண்டாம்: இந்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை!
[ஞாயிற்றுக்கிழமை, 4 டிசெம்பர் 2005, 20:01 ஈழம்] [ந.ரகுராம்]
இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியாவைத் தலையிட வைக்க சிறிலங்கா அரசு விரிக்கும் நயவஞ்சக வலையில் விழ வேண்டாம் என்று இந்திய அரசுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை ஊடகவியலாளர்களுக்கு வைகோ நேற்று சனிக்கிழமை அளித்த நேர்காணலில் கூறியதாவது:
சிறிலங்கா அரச தலைவர் ராஜபக்சே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்துகளின் மூலம் தமிழர்களுக்கு அடிப்படை உரிமைகூட கிடைக்காது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்தும் முயற்சியில் நோர்வேக்கு முக்கியத்துவம் அளிப்பதைவிட இந்தியாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறுவது நயவஞ்சகமான கருத்தாகும்.
நார்வேதான் இந்த விவகாரத்தில் உண்மையாக செயல்பட்டது. ராஜபக்சேயின் உள்நோக்கம் குறித்தும் சிறிலங்கா அரசு விரிக்கும் நயவஞ்சக வலையில் விழ வேண்டாம் என்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ராணுவ அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரிடம் நான் எச்சரித்து இருக்கிறேன் என்றார் வைகோ.
http://www.eelampage.com/index2.php?cn=22241