Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொறுமைக்கும் எல்லையுண்டு
#1
<b>வீதிகள் தோறும்
அடாவடித் தனத்துடன்
அலரிமாளிகை
ஆட்களின் சத்தம்.

ஐயோ என ஒரு குரல்
அப்பாவித்தனமாய்
அலறிய போதும்
அத்து மீறி அப்பாவித் தமிழரின்
மேனியில்
ஆணவத்தோடு
சிங்களச்சிப்பாயின் கால்கள்
மேய்ந்து பதம் பார்க்கும்.

பாதகரின் கண்கள்
தமிழ் பாவயர் என்பதால்.
மேலும் கீழுமாய்
வெறியுடன் அலையும்.
அந்த போக்கிரி
சிங்கள சிப்பாயின் கைகள்
.ஐயகோ....
சொல்ல முடியாது மௌனித்து போகின்றேன்.
காறி அவன் முகத்தினில்
உமுழ்வதை தவிர
எனக்கு வேறு வெளி ஒன்ரும் தெரியவில்லை.

கொடுமைகள் பல இங்கு
நடந்தாலும்.
மௌனாமாய் அனைத்தையும்
தாங்கிடும்
சடப்பொருட்களாய் இருந்திட வேண்டுமாம்.
இல்லையெனில் பயங்கர வதி
என எம்மையும் அழைப்பாராம்.
இது சில மேலாண்மை நாடுகளின்
ஒப்பாரிக் கூச்சல்.
இதென்ன நியாயமைய்ய?

ஒரு இனத்தின் பிறப்புரிமை
மீறப்படும் போது
அவன் வாழ்ந்தென்ன
செதென்ன?

உலகம் புரியாது போனாலும்
உன் உரிமை உனக்குமா புரியவில்லை?
பாவிகளாய்
வாழ்ந்தது போதும்!

புறப்படுவோம்
பொறுமைக்கும்
எல்லையுண்டு.

வேடதாரிகளை
விரட்டி.
தமிழ் ஈழமெனும்
ஞாலமதை
காண்போம் வாரீர்...</b>
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply


Messages In This Thread
பொறுமைக்கும் எல்லையுண்டு - by iruvizhi - 12-04-2005, 09:11 PM
[No subject] - by Vishnu - 12-04-2005, 09:22 PM
[No subject] - by iruvizhi - 12-04-2005, 10:37 PM
[No subject] - by RaMa - 12-04-2005, 10:45 PM
[No subject] - by Eelathirumagan - 12-05-2005, 03:38 AM
[No subject] - by அருவி - 12-05-2005, 08:46 AM
[No subject] - by iruvizhi - 12-05-2005, 10:02 PM
[No subject] - by tamilini - 12-06-2005, 11:12 AM
[No subject] - by Vishnu - 12-06-2005, 01:26 PM
[No subject] - by Mathan - 12-06-2005, 01:36 PM
[No subject] - by தூயவன் - 12-06-2005, 01:52 PM
[No subject] - by iruvizhi - 12-10-2005, 05:48 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)