Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் ஒரு இந்தியத் தலை ஈடா?
#16
ஈழத் தமிழர் பிரச்சனையில் தாய்த்தமிழகத்தின் ஆறு கோடி தமிழர்கள் ஆழ்ந்த கவலை கொண்டிருக்கிறார்கள் என்பதை மன்மோகன் அரசு மறந்துவிடக் கூடாது : தினமணி நாளேடு எச்சரிக்கை!!
[ஞாயிற்றுக்கிழமை, 4 டிசெம்பர் 2005, 00:09 ஈழம்] [ம.சேரமான்]
ஈழத் தமிழர் பிரச்சனையில் ஆறு கோடி தாய்த் தமிழகத் தமிழர்கள் ஆழ்ந்த கவலை கொண்டிருக்கிறார்கள் என்பதை மன்மோகன் அரசு மறந்துவிடக் கூடாது என்று தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தினமணி நாளேடு எச்சரிக்கை விடுத்துள்ளது.


தினமணி நாளேட்டின் தலையங்கம்:

தில்லிக்கு வந்து பிரதமரைச் சந்தித்துப் பேசிய இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் சமரவீரவிடம், "இலங்கையில் போர் நிறுத்தம் நீடிக்க வேண்டிய அவசியத்தை'' மன்மோகன் சிங் வற்புறுத்தியிருக்கிறார்.

அதேசமயத்தில், "போர்நிறுத்த உடன்படிக்கையை மதித்து நடப்பதென புதிய அதிபர் மகிந்த ராஜபட்சய உறுதி பூண்டிருப்பதாகவும்'' சமரவீர தெரிவித்திருக்கிறார்.

அதற்கு முன், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ. அகமதுவைச் சந்தித்து கலந்துரையாடிய அவர், "ஈழப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண்பதற்காக பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு'' விடுதலைப் புலிகளுக்கு அதிபர் அழைப்பு விடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

"அப் பேச்சுவார்த்தைகள் திறந்த மனத்துடன், ஒளிவுமறைவுக்கு இடமில்லாமல் நடைபெற வேண்டும்'' என்று அதிபர் விரும்புவதாகவும் அப்படி நடந்தால் மட்டுமே அதில் எட்டக்கூடிய உடன்பாடுகளை நாடே ஏற்றுக்கொள்ளுமாறு செய்ய முடியும் என்பதும் அதிபருடைய கருத்து என்றும் சமரவீர விளக்கியிருக்கிறார்.

ஆனால் ஈழப்பிரச்சினையின் நிரந்தரத் தீர்வுக்கு இந்த அணுகுமுறை போதுமானதாகத் தோன்றவில்லை. போர் நிறுத்தம் நான்கு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. இச் சூழ்நிலையில், ஈழப் பிரச்சினை தீர்வுக்கான திசையில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்றால் இல்லையென்றே பதிலளிக்க வேண்டியிருக்கிறது.

இதற்கு முதன்மையான காரணம் - தீர்வுக்கான திட்டத்துக்கு சிங்களர் இடையே செல்வாக்குப் பெற்றுள்ள சந்திரிகாவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் - எதிர்க்கட்சியான ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியும் எக்காலத்திலும் ஒருமுக ஆதரவு காட்ட முன்வராததேயாகும்.

இதற்கு அடிப்படைக் காரணம் - ஈழத் தமிழர்களுடைய கோரிக்கையின் அடிப்படையையே புதிய ஆளும் சக்தி அங்கீகரிக்க மறுப்பதுதான்.

"கூட்டாட்சி' அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டுமென்ற சித்தாந்தத்தையே புதிய ஆட்சியாளர் ஏற்க மறுத்து வருகிறார்கள். பிறகு எப்படி திறந்த மனத்துடன் பரஸ்பர நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பு இருக்க முடியும்?

ஈழப் பிரச்சினையில் சர்வகட்சிகளின் ஒத்துழைப்புடன் வாஜ்பாய் அரசு வடித்த தேசியக் கொள்கையையே மன்மோகன் அரசும் பின்பற்றுவதாக நாடாளுமன்றத்தில் சில காலத்துக்கு முன் அறிவிக்கப்பட்டது. இக் கொள்கை நான்கு அம்சங்களைக் கொண்டது.

அதில் முக்கியமான அம்சம் என்னவெனில், "ஒன்றுபட்ட இலங்கைக்குள் - கூட்டாட்சிக் கட்டமைப்பு ஆட்சி முறை மூலம் ஈழப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும்'' என்பதாகும்.

அதிலும் குறிப்பாக 2003 அக்டோபரில் - தில்லியில் வாஜ்பேயியும் பிரதமர் விக்கிரமசிங்கவும் வெளியிட்ட கூட்டறிக்கையிலும் இந்த அம்சம் வற்புறுத்தப்பட்டிருக்கிறது.

"இலங்கையின் ஒற்றுமைக்கு ஊறு ஏற்படாத வகையில் தீர்வு அமைந்திருப்பது எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு கூட்டாட்சிக் கட்டமைப்பு ஆட்சி முறையும் பிரச்சினையின் தீர்வுக்கு அத்தியாவசியம்'' என்ற வாசகம் அக் கூட்டறிக்கையில் எடுப்பாக இடம்பெற்றிருந்தது.

ஆனால் இப்பொழுதோ அந்த அடிப்படைக் கொள்கையையே ஏற்க மறுக்கும் அரசு - இந்தியாவுடன் பொருளாதார உடன்படிக்கை காண விரும்புகிறது.

இக் கட்டத்தில் "கூட்டாட்சி அடிப்படையிலேயே தீர்வு' என்ற அடிப்படைக் கொள்கையை ராஜபக்ச அரசிடம் வலியுறுத்திக் கூற இந்திய அரசு தயங்கக் கூடாது.

ஏனெனில் ஈழப் பிரச்சினை 30 லட்சம் தமிழர்களின் வாழ்வுரிமை, சமத்துவக் குடியுரிமை, கலாசாரப் பாதுகாப்புரிமை சம்பந்தமானது.

இப் பிரச்சினையில் தாய்த்தமிழகத்தின் ஆறு கோடி தமிழர்கள் ஆழ்ந்த கவலை கொண்டிருக்கிறார்கள் என்பதை மன்மோகன் அரசு மறந்துவிடக் கூடாது என்று அந்தத் தலையங்கம் எச்சரித்துள்ளது.

http://www.eelampage.com/index3.php?cn=22225
" "


Messages In This Thread
[No subject] - by Nellaiyan - 12-03-2005, 01:50 AM
[No subject] - by தூயவன் - 12-03-2005, 04:04 AM
[No subject] - by narathar - 12-03-2005, 11:54 AM
[No subject] - by vasanthan - 12-03-2005, 02:32 PM
[No subject] - by Thala - 12-03-2005, 02:47 PM
[No subject] - by sinnakuddy - 12-03-2005, 07:20 PM
[No subject] - by kurukaalapoovan - 12-03-2005, 08:31 PM
[No subject] - by Eelathirumagan - 12-03-2005, 09:06 PM
[No subject] - by narathar - 12-03-2005, 09:23 PM
[No subject] - by kurukaalapoovan - 12-03-2005, 09:55 PM
[No subject] - by narathar - 12-03-2005, 11:15 PM
[No subject] - by cannon - 12-04-2005, 12:02 AM
[No subject] - by narathar - 12-04-2005, 12:46 AM
[No subject] - by தூயவன் - 12-04-2005, 05:30 AM
[No subject] - by cannon - 12-04-2005, 10:45 AM
[No subject] - by Thala - 12-04-2005, 01:29 PM
[No subject] - by narathar - 12-04-2005, 11:12 PM
[No subject] - by narathar - 12-04-2005, 11:12 PM
[No subject] - by narathar - 12-04-2005, 11:13 PM
[No subject] - by sinnakuddy - 12-04-2005, 11:44 PM
[No subject] - by Thala - 12-04-2005, 11:50 PM
[No subject] - by Vaanampaadi - 12-04-2005, 11:52 PM
[No subject] - by Thala - 12-05-2005, 12:05 AM
[No subject] - by narathar - 12-05-2005, 12:37 AM
[No subject] - by Vaanampaadi - 12-05-2005, 12:55 AM
[No subject] - by Thala - 12-05-2005, 01:14 AM
[No subject] - by Danklas - 12-05-2005, 01:19 AM
[No subject] - by Vaanampaadi - 12-05-2005, 02:05 AM
[No subject] - by Danklas - 12-05-2005, 02:09 AM
[No subject] - by Thala - 12-05-2005, 02:19 AM
[No subject] - by இராவணன் - 12-05-2005, 02:31 AM
[No subject] - by Vaanampaadi - 12-05-2005, 03:10 AM
[No subject] - by Danklas - 12-05-2005, 03:12 AM
[No subject] - by இராவணன் - 12-05-2005, 03:19 AM
[No subject] - by தூயவன் - 12-05-2005, 05:16 AM
[No subject] - by தூயவன் - 12-05-2005, 05:43 AM
[No subject] - by narathar - 12-05-2005, 12:08 PM
[No subject] - by kurukaalapoovan - 12-05-2005, 02:10 PM
[No subject] - by Danklas - 12-05-2005, 02:36 PM
[No subject] - by தூயவன் - 12-05-2005, 02:48 PM
[No subject] - by Birundan - 12-05-2005, 03:08 PM
[No subject] - by kuruvikal - 12-05-2005, 04:38 PM
[No subject] - by kurukaalapoovan - 12-05-2005, 04:55 PM
[No subject] - by Danklas - 12-05-2005, 05:24 PM
[No subject] - by Birundan - 12-05-2005, 07:58 PM
[No subject] - by narathar - 12-05-2005, 08:13 PM
[No subject] - by cannon - 12-05-2005, 09:58 PM
[No subject] - by sinnappu - 12-05-2005, 11:32 PM
[No subject] - by sinnappu - 12-05-2005, 11:36 PM
[No subject] - by vasisutha - 12-05-2005, 11:43 PM
[No subject] - by nallavan - 12-06-2005, 03:38 AM
[No subject] - by தூயவன் - 12-06-2005, 06:10 AM
[No subject] - by Vasampu - 12-06-2005, 07:31 AM
[No subject] - by sinnappu - 12-06-2005, 08:27 AM
[No subject] - by Thala - 12-06-2005, 08:58 AM
[No subject] - by தூயவன் - 12-06-2005, 01:42 PM
[No subject] - by தூயவன் - 12-06-2005, 01:49 PM
[No subject] - by nallavan - 12-06-2005, 03:50 PM
[No subject] - by sinnakuddy - 12-06-2005, 08:30 PM
[No subject] - by Thala - 12-06-2005, 10:19 PM
[No subject] - by Thala - 12-07-2005, 12:29 PM
[No subject] - by sinnakuddy - 12-07-2005, 06:35 PM
[No subject] - by kurukaalapoovan - 12-07-2005, 06:50 PM
[No subject] - by sinnakuddy - 12-07-2005, 07:40 PM
[No subject] - by நர்மதா - 12-08-2005, 03:23 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)