12-03-2005, 11:15 PM
தடை நீக்கப் படுவதால் நாங்கள் இந்திய,தமிழ் நாட்டு மக்களிடம் எமது அரசியல் நியாயத்தை எடுத்துச் செல்லலாம்.தடை நீக்கத்தால் எமக்கு அனுகூலமே தவிர ,கெடுதல் இல்லை.அத்தோடு இந்திய மக்கள் எமது அயலவர்.அத்தோடு இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு.எமது அயலுறவுக் கொள்கை தவிர்க்கமுடியாதபடி புவியியல் காரணிகளால் இந்திய பாதுகாப்போடு பின்னிப் பிணைந்தது.எமது போராட்டத்தை இந்தியா நசுக்காத வரை ,எமக்கும் இந்தியாவுக்கும் எவ்வித பகையும் கிடயாது.
கடந்தகால கசப்புணர்வுகளை மறந்து இந்தியா தமிழ் ஈழத்தை அங்கீகரித்து ,தனது பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்.சிங்கள இனவாதத்தின் தற்போதய நெருக்கடிக்கு இந்தியா அபயமளித்து,தனது நீண்ட கால நலங்களுக்கு குந்தகம் விளையும் வண்ணம் தலயீட்டை மேற்கொள்ளும் மாகில் அது நீண்டகால நோக்கில் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே அமையும்.தற்போதய நெருக்கடியில் இருந்து மீண்டதும் சிங்கள இனவாதம் முன்னரைப் போல் இந்தியாவிற்கு எதிராகவும் திரும்பும்.ஏற்கனவே ஜாதிக கெல உருமய இதனைக் கோடிட்டுக் காட்டி உள்ளது.
நாம் இந்திய கொள்கை வகுப்பாளரையும் இந்திய, தமிழ் நாட்டு மக்களையும் ஒரே கண்ணோட்டத்தோடு பார்ப்பது தவறு. நீண்டகால நோக்கில் இந்திய ,தமிழ் நாட்டு மக்களுடன் எமது உறவை வலுப் படுத்த வேண்டும்.அது தடை நீக்கத்தினால் சாத்தியப் படும்.