12-03-2005, 08:40 PM
களம் முழுவதும் படிப்பதற்கான நேரம் எனக்கில்லை... இணைவதற்கு முன்பு குறிப்பாக கடந்த ஒருவார காலமாக உங்கள் முகப்புப்பகுதியில் இருந்த சில கள இணைப்புக்களை சொடுக்கிபோது வந்த சில கருத்துக்களை படித்தேன்... அத்தனையும் ஏளனக்கருத்துக்கள்... அதற்கு என்னை பொறுப்பாக்காதீர்கள்.... உங்கள் கருத்துக்களம்.... உறுப்பினர்கள் கருத்துக்கள்...
Sukumaran Wrote:உங்களுக்கு ஆட்சேபனையில்லையென்றால்.... எனது கருத்துக்கு பலம்சேர்க்க உங்கள் களத்திலிருந்து மேற்கோள்காட்டி பல உதாரணங்களை முன்வைக்கிறேன்... சம்மதமா.....?
இராவணன் Wrote:[quote=Sukumaran]
உள்அனுமதிக்கு இத்துனை தடைகள்.. விதிகள்.. இருக்குமென்று கனவிலும் நினைத்திருக்கவில்லை..
காலம் மாறிவிட்டது.. இத்தனை தடைகளையும் மீறி கருத்து எழுதுவது அவசியமா.. அப்படி எழுதினாலும் அதை அனுமதிப்பார்களா..? என்று எத்தனையோ கேள்விகள்..
எழுதியிருக்கும் கருத்துக்கள் பலவற்றை படித்துப்பார்த்தபோது பலதும் கருத்தாகப்படவில்லை.... ஏளனம் செய்வதற்காகவே கருத்துக்களை முன்வைப்பதாகவே தெரிகின்றது..
பல கருத்துக்களில் ஒத்துப்பாட்டு மிக உச்ச ஸ்தாயியில் கேட்கிறது... <b>சிறிது அவகாசம் கொடுங்கள்... இயன்றவரை படித்துவிட்டு ஒரு அறிக்கை தருகிறேன்..</b>
.
பரவாயில்லையே அதற்குள்ளே களம் முழுக்க
படித்துவிட்டீர்கள் போல இருக்கு..
நீங்களும் விதிமுறைகளை படித்துவிட்டுத்தான்
இணைந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்...
களத்தில் சில கருத்துக்கள் தனிநபர் தாக்குதல்களாக
தோன்றலாம்.. பலமுறை எச்சரித்தும் சிலர் இவ்வாறு
எழுதத்தான் செய்கிறார்கள்..
அத்துடன் எல்லாக்கருத்துகளையும் படித்து தணிக்கை
செய்வது என்பது முடியாத காரியம்..
8

