06-22-2003, 09:46 AM
25வருடஆயுதப்போர்
தடங்கலும் தடையுடைப்பும்
-கு.கவியழகன்
இக்காலத்தில் தோன்றிய புதிய உலக ஒழுங்கு மாற்றத்தால் உலகில் அநேகமான தேசிய விடுதலைப் போராட்டங்கள் முடிவிற்கு வந்தன. அநேகம் முறியடிக்கப்பட்டோ, விலைபேசப்பட்டோ, கைவிடப்பட்டோ முடிவுற்றது. இதே பார்வையில் ஈழப்போராட்டமும் அதன் முடிவை எய்தும் நிலைக்கு வந்துவிட்டதாக உலகின் அரசியல் இராணுவ ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டனர். ஜே.வி.பி. கிளர்ச்சியை முறியடித்த வீராப்பிலிருந்த பிறேமதாசா அரசு, இத்தகைய சூழலில் புலிகளையும் வென்றுவிடப்போவதான மமதையில் இருந்தது. யாழ். குடாநாட்டைக் கைப்பற்றுவதற்கான ஒரு நடவடிக்கை லெப். ஜெனரல் கொப்பேகடுவ தலைமையில் உருவானது.
ஈழப்போராட்டம் அமைதியான கடலில் ஓட்டிவரப்பட்ட படகல்ல. அது பல புயல்களையும், சூறாவளிகளையும், கொந்தளிப்புக்களையும் கடந்து, பிரபாகரனால் ஓட்டிவரப்பட்ட படகு. இப்போதெழுந்த பெரும் சவால்களைச் சந்திக்க குனியாத குணம்கொண்ட தலைவர் பிரபாகரன் வியுூகங்களை வகுத்தார்.
கிளாலி நீரேரிப்பாதையைத் திறந்து, யாழ்ப்பாணம், வன்னிக்கான போக்குவரத்துப் பாதை ஏற்படுத்தப்பட்டது. அரசபடை, நாகதேவன்துறையில் கடற்படைத் தளமமைத்து அதைத்தடுத்தது. எதிர்காலத்தைக் கணிப்பிடும் பார்வையுடன், 1991 இன் பிற்பகுதியில் தொடங்கப்பட்ட கடற்புலிகளை களத்திலிறக்கி கடற்படையை எதிர்கொள்ள வைத்தார் தலைவர் பிரபாகரன். கிளாலி நீரேரி கடற்புலிகளால் காவலிடப்பட்டது. யாழ்ப்பாண முற்றுகை தகர்ந்து பொடிப்பொடியானது. புதிய பயிற்சி, புதிய போர்த் தந்திரோபாயத்தைப் புகட்டி, பல அணிகளாக களத்தில் இறக்கி துல்லியமான வேவின் மூலம் நேர்த்தியான பயிற்சி மூலம், வேகத்தாக்குதல் மூலம், சிறு இலக்கைத் தெரிந்து பேரடியைக்கொடுத்து வெற்றிகொள்வது என்ற 'மின்னல் வேகத்தாக்குதல்' முறையை தலைவர் களத்தில் செயற்படுத்தினார். இப்போர்முறை பெற வேண்டிய அறுவடை, மிகச் சொற்பமான இழப்போடு குறைந்த வெடிபொருள் பயன்பாட்டோடு தேர்ந்தெடுத்த இலக்கின் முழு இராணுவத்தைக் கொல்வதும், ஆயுத வெடிபொருட்களைக் கைப்பற்றுவதும், இத்தகைய பல தாக்குதல்களின் திரட்சி மூலம் பேரிழப்பை இராணுவத்திற்கு ஏற்படுத்திவிடுவதுமாகும்.
இத்தகைய வெற்றிகரப் போர்த்திட்டத்தின் தாக்குதல் ஒன்றில், யாழ். குடாநாட்டு நடவடிக்கையை திட்டமிட்ட லெப். ஜெனரல் கொப்பேகடுவ உட்பட்ட ஒன்பது மேலதிகாரிகள் ஒரே தாக்குதலில் கொல்லப்பட்டனர். மேலும் இப்போர் நடவடிக்கையால் 1992 இல் 1400 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 1500 இராணுவத்தினர் ஏறத்தாழ ஊனமுற்றனர். பெருந்தொகையானோர் படையைவிட்டுத் தப்பியோடினர். அத்துடன் இராணுவத்தினரை பீதிக்குள் வைத்திருக்கவம் முடிந்தது. விடுதலைப் புலிகளின் வெடிபொருள் ஆயுதக் களஞ்சியங்கள் நிரப்பப்பட்டன. உறுதி தளராத மக்களின் மனோதிடம் பேணப்பட்டது. மக்கள் புதிய உற்பத்தி சக்திகளைத் தோற்றுவித்தனர். இத்தகைய உழைப்பினதும், வளர்ச்சியினதும் முடிவாக 1993 இல் 'தவளை' நடவடிக்கை மூலம் 2000 ம் வரையான இராணுவத்தினரைக் கொண்ட புூநகரித் தளத்தை புலிகள் வெற்றிகொண்டனர். இவை எல்லாமாக இணைந்து, நெருக்கடியிலிருந்து மீண்டெழுந்த போராட்டம் புதிய உத்வேகத்தோடு, புதிய பரிமாணத்தில் பாய்ச்சலாக முன்னேறியது. தவறான அரசியல், இராணுவ கணிப்புக்கள் தவிடுபொடியாகின. மக்கள் 'தவளை' நடவடிக்கைக்காக தலைவர் பிரபாகரனுக்கு வெற்றிக்கேடயங்கள் அனுப்பிவைத்தனர்.
அரசின் மூலோபாய மாற்றமும்,
யாழில் இருந்து புலிகளின் பின்வாங்கலும்
1994இல் பதவிக்குவந்த பொ.ஐ.மு அரசிற்கு தான் கைப்பற்றிய ஆட்சிப் பீடத்தை தக்கவைப்பதற்காக முப்படைகளிலும், ஏனைய நிர்வாகத்துறைகளிலும் 17 வருடமாக ஊறிப்போன ஐ.தே.க. விசுவாசிகளை மாற்றியமைப்பதற்கான அவசியம் ஏற்பட்டது. இதற்கு ஒரு யுத்தநிறுத்தத்திற்கான தேவை அவசியப்பட்டது. இதற்காக பேச்சு முயற்சியைப் பயன்படுத்தியதோடு, போரில் வெற்றியீட்டிக்காட்டுவதற்கான போர்முனைப்புக்கு ஆயத்தப்படுத்தும் அவகாசத்தையும் பெற்றுக்கொண்டது. இத்தகைய அரசின் உள்நோக்கத்தால் பேச்சு முயற்சி தொடர்ந்து முன்னேற முடியாமல் போயிற்று.
மூன்றாம்கட்ட ஈழப்போரின் தொடக்கத்தில் திருமலைத் துறைமுகத்துள் பாய்ந்த கடற்புலிகள் இரண்டு கப்பல்களை மூழ்கடித்தனர். அவ ரோ விமானங்களை சுட்டு வீழ்த்தினர். குறைந்த இழப்போடு மண்டைதீவு இராணுவ முகாமை வெற்றிகொண்டனர். இந்தப் போர்விஸ்வரூபம் சிங்களதேசத்தை வெருட்டியது. சந்திரிகா பிடித்த ஆட்சி தளம்பும் நிலைக்குள்ளானது. அதை நிலைப்படுத்த சந்திரிக்காவிற்கு ஒரு இராணுவ வெற்றி இன்றியமையாததாயிற்று.
யாழ். நகரைக் கைப்பற்ற 'லீப்போவேட்' (முன்னேறிப்பாய்தல்) நடவடிக்கையை அது மேற்கொண்டது. புலிகளின் 'புலிப்பாய்ச்சல்' எதிர்நடவடிக்கையால் படுதோல்வி அடைந்ததுடன், காங்கேசன்துறை துறைமுகத்தில் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டதுடன் புக்காரா தாக்குதல் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது. இது தென்னிலங்கை அரசியலில் சந்திரிகாவிற்கு மோசமான சூழலைத் தோற்றுவித்தது. நிச்சயப்படுத்தப்பட்ட இராணுவ வெற்றியே சந்திரிகாவின் ஆட்சியை தக்கவைக்கும் எனும் நிலை எழுந்தது. இதனால், கிழக்கில் புலிகளை முறியடித்து அதை பல்லினவாழ் பிரதேசமாக்குவதன் மூலம் கெரில்லாப் போரியலுக்கான சாகதங்களை சிதைத்து பின் வடக்கை நோக்கி பிரதான நகர்வைச் செய்வதெனும் ஐ.தே.க. வின் மூலோபாயத்திற்கு மாறாக முதலில் யாழ். குடாநாட்டைக் கைப்பற்றுவது எனும் நிலைப்பாட்டை சந்திரிகா அரசு எடுக்கவேண்டியதாயிற்று. கிழக்கிலிருந்து இராணுவம் யாழ்ப்பாணத்தில் குவிக்கப்பட்டது. மோட்டார், பீரங்கிச்சூட்டு வலுவை உயர்நிலையில் பிரயோகிப்பதற்கான ஆயுதக்கொள்வனவு நடந்தது. வெளிநாட்டு இராணுவ உதவிகளுடனும், ஆலோசனைகளுடனும் பெரும் ஆளணி, ஆயுத சக்திகளுடனும் 'ரிவிரச' தொடங்கப்பட்டது. புலிகள் யாழ். குடாநாட்டைவிட்டு வன்னி நோக்கி ஒரு தந்திரோபாயப் பின்வாங்கலைச் செய்யவேண்டியதாயிற்று, 5 இலட்சம் மக்கள் வன்னிக்குத் தப்பிவர, 3 இலட்சம் மக்கள் இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சி சிங்கள தேசத்தை பெரும் மகிழ்ச்சிவெள்ளத்தில் ஆழ்த்தியது. தன்னை நிலைப்படுத்திக்கொண்ட சந்திரிகா அரசு, புலிகளின் இத்தற்காலிகப் பின்னடைவை போராட்டத்தின் வீழ்ச்சியாகவும், புலிகள் மீதான தோற்கடிப்பாகவும் தீவிரமாகப் பிரச்சாரப்படுத்தியது. இதன் மூலம் தனது கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் மக்களுக்கும், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கும் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்திவிட தீவிரமாக முனைந்தது. வெளியுலகமும் இதனை நம்பத்தலைப்பட்டது. இதனால் புலிகளிற்கு அரசியல், பொருளாதார, இராணுவ hPதியான பெரும் நெருக்கடிகள் எழுந்தன.
தலைவர் பிரபாகரன் தனது நேரடி நெறிப்படுத்தலில் 'ஓயாத அலைகள்-1' ஐ நிகழ்த்தி அரசின் திட்டத்தையும், எழுந்த நெருக்கடியையும் தவிடுபொடியாக்கினார். பெருங்கடலோடு அமைந்த முல்லைத்தீவுத் தளத்தை வெற்றிகொண்டு, 1200 இராணுவத்தைக் கொன்று, ஆட்லறிகள் உட்பட்ட ஆயுதங்களைக் கைப்பற்றிய புலிகள் தமது குன்றாத போர்ப்பரிமாணத்தை வெளிக்காட்டினர். தமிழீழத்தின் ஒரு நகரம் விடுவிக்கப்பட்டது. எல்லையற்ற ஒரு கடற்பரப்பைத் திறந்து புலிகள் தம்வசப்படுத்தினர். இது புலிகள் பற்றிய புதிய மதிப்பீட்டைத் தந்ததுடன், சந்திரிகாவின் யாழ்ப்பாண வெற்றியை கேள்விக்குட்படுத்தியது. நம்பிக்கையுடனான புதிய வேகம் தளத்திலும், புலத்திலும் பிறந்தது.
வன்னி மீதான இறுதிவெற்றிக்கு
இராணுவ, பொருளாதார, அரசியல் வியுூகம்
'ஓயாத அலைகள் -1' இன்பின் யாழ்ப்பாணத்திற்கான தரைவழிப்பாதையை திறப்பது, அரசிற்கு யாழ்ப்பாணம் மீதான வெற்றியை தக்கவைப்பதற்கான நிர்ப்பந்தமாகியது. இதனால் சத்ஜெய நடவடிக்கையும், பின் 'ஜயசிக்குறு' வும் சிங்களப் படைகளால் தொடக்கப்பட்டன. வன்னியின் மார்பைப்பிளந்து முன்னேறுவதால் விடுதலைப் புலிகளின் தளப்பிரதேசத்தைக் கூறுபோடவும், அதை மேலும்பல கூறுகளாக்கவும் இராணுவம் திட்டமிட்டது. இதன் மூலம் புலிகளின் இராணுவ பலத்தை நம்பகரமாகச் சிதைக்க முடியுமென அது எண்ணியது.
புலிகள் வன்னியின் அடர்ந்த காட்டினுள் எதிரியின் உண்மை வலுவை வரவழைத்து தமது பிரதேசத்தில் போரை மையங்கொள்ள வைத்து, எதிரியின் போர்வலுமீது தீர்மானகரமான சிதைவை ஏற்படுத்தத்தொடங்கினர். வெற்றிக்கான முடிவுத்தேதி அறிவித்துத் தொடங்கப்பட்ட அந்த 'ஜயசிக்குறு' வெற்றி உறுதி, பின்வாங்கமுடியாத அரசியல் சிக்கலை அரசிற்கு உருவாக்கியது. இலங்கையின் போர்வலு புலிகளின் காலடியில் பரப்பப்பட்டது. தலைவர் பிரபாகரன் வகுத்த போர்வியுூகத்தால் ஒரு வருடத்திற்கு மேலாய் அது தன் படைகளை இழந்து, இறுதியில் 'ஓயாத அலைகள்-2' என்ற கிளிநொச்சி நகர் விடுவிப்புச் சமர் மூலம் அர்த்தமற்ற படையெடுப்பாக ஆகிப்போனது. ஜயசிக்குறு கைவிடப்பட்டது.
ஜீரணிக்கமுடியாத இத்தோல்வியின் பின், இராணுவ வல்லுநர்களின் ஆலோசனையுடன் புதிய மூலோபாயத்தை வகுத்தது சிங்களப் படைத்தலைமை. இதன்படி, எழுபத்தைந்து வீதம் இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்களைக்கொண்ட வன்னியில், நிவாரணவெட்டை அரசு அமுல்ப்படுத்தியது. பொருளாதார, மருத்துவ தடைகளை அது மேலும் இறுக்கியது. வான், எறிகணைத் தாக்குதலை பரவலாக மக்கள் மீது நடத்தியது. மக்களை வாழ்வியல் நெருக்கடிக்குள் தள்ளியது. அதேநேரம், தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள்வரும் மக்களுக்கு அது நன்கொடைத் தொகைகளை வழங்கியது. நிவாரணத்தை வழங்கியது, இழப்பீட்டுத் தொகைகளை அள்ளி விசுக்கியது. மக்களை வன்னியிலிருந்து வெளியேற்றி தனது கட்டுப்பாட்டிற்குள் இழுப்பது என்ற தந்திரோபாயத்தை மக்கள் மீது சுமத்திய அவலத்தால் வெற்றிகொள்ளத் தொடங்கியது. போருக்கான, புலிகளின் ஆளணி நிரப்பீட்டை உடைப்பதே முக்கிய குறிக்கோளாகவிருந்த இந்தச் சதியிலிருந்து மக்களால் தப்பிக்க முடியவில்லை. சுமத்தப்பட்ட அவலம் அவர்களை நிர்ப்பந்தித்தது.
அதேநேரம், வன்னியைப் பிளந்து முன்னேறுவதற்குப் பதிலாக வன்னியின் நாலாபுறமும் படை நடவடிக்கையில் இராணுவம் குதித்தது. இதனால் வன்னியைச் சுற்றி காவலரண் அமைத்து தற்காப்புச் சமரில் ஈடுபடுவதற்கான ஆளணியை புலிகளால் பெற்றுக்கொள்ளவியலாது என்ற அதன் கணிப்பு பல பிரதேசங்களை அதன் கைகளில் வீழ்த்தியுமிருந்தது. இந்தப் புதிய சிக்கல் புலிகளை தற்காப்புச் சமரில் சிக்கவைப்பதுடன், வலிந்த தாக்குதலொன்றைச் செய்வதற்கான வாய்ப்பையும் அறவே ஒழித்தது. இறுதி வெற்றிபற்றி இராணுவம் நம்பிக்கைகொள்ளத் தொடங்கியது. இயற்கைக் குழப்பத்தினால் வன்னியின் நெல் உற்பத்தி இந்த ஆண்டு (1999) மோசமான பாதிப்பை உருவாக்கியது. மோசமான வாழ்வியல் நெருக்கடிக்குள் மக்கள் தள்ளப்பட்டனர். புலிகளோ இராணுவ, அரசியல், பொருளாதார hPதியாக பாரிய நெருக்கடியைச் சந்திக்க வேண்டியதாயிற்று.
போராட்டம் சந்தித்த இந்தப் புதிய சவாலுக்கு, தனது தலைமைத்துவ வல்லமையின் மூலம் புதிய வியுூகம் வகுத்தார் தலைவர் பிரபாகரன். மக்களுக்கு ஆயுதப் பயிற்சியை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்க உத்தரவிட்டார். மக்கள்படைக் கட்டுமானங்களை புலிகள் உருவாக்கினர். எல்லைப்படை வீரர்கள் வன்னியைச் சுற்றி எல்லையிட்டு தற்காத்தனர். புலிகள்சேனை பிரபாகரனின் பெரும் சமருக்கான தாக்குதல் பயிற்சியை பெறத்தொடங்கியது. தாக்குதல் எல்லைப்படை உதவிப் படையாகப் பயிற்சி பெற்றது. வன்னியின் எதிர்பாராத எழுச்சி, ஆளணி நிரப்பீட்டை அதிகரித்தது. தலைவர் பிரபாகரன்
'ஓயாத அலைகள்-3' என்ற பெரும் போர்வியுூகத்திற்குள் எதிரிப்படைகளை அடக்கினார்.
பரந்த பிரதேசத்தில் பலமுனைகளால் பல அணிகளை நகர்த்தி ஒருங்கிணைந்த ஒரு தாக்குதல் செயற்திட்டத்தில் தீர்மானகரமான ஒரு சமரைத் தொடக்கி எதிரிப்படைகளை 'டிவிசன்' களாக தோற்கடித்தனர் புலிகள். எதிரியின் முன்னணிப் படை சிதைவுற்றது. உலகின் புருவங்களை உயர்த்திய பெரும் போர் நடவடிக்கையை பிரபாகரன் நேரடியாக நெறிப்படுத்தினார். வன்னியில் நிலைகொண்ட எதிரி தோற்கடிக்கப்பட்டதுடன் ஆனையிறவு என்ற பலப்பாPட்சையைத் தீர்மானிக்கும் தளத்தின் மீது போரைத் தொடக்கி வெற்றி கொண்டனர் புலிகள். யாழ்ப்பாணத்தின் நுழைவாயில்கள் புலிகளின் கைகளில் வீழ்ந்தன. இராணுவ சமநிலையை புலிகளுக்கு சாதகமாக திசைதிருப்பியது 'ஓயாத அலைகள்-3' அது, புலிகளுக்கான நிர்ணயகரமான அரசியல் பலத்தைக் கொடுத்தது. விடுதலைப் போராட்டத்தின் இந்தப் புதிய பரிணாமம், இறுதி வெற்றிநோக்கிய புலிகளின் பயணத்தையும், அதற்கான புலிகளின் பலத்தையும் தாக்கமாகப் பறைசாற்றியது.
விடுதலைப் புலிகள் அமைப்பு தொடங்கப்பட்டு தொடரப்பட்ட இந்தக் கால்நூற்றாண்டில் தமிழரின் விடுதலைக்கெதிராக எழுந்த அனைத்து பலங்களையும் அது வெற்றி கொண்டிருக்கிறது. அனைத்து மூலோபாயங்களையும் தோற்கடித்திருக்கிறது. அனைத்து சதிமுயற்சிகளையும் அது முறியடித்திருக்கிறது. அரசியல் இராஜதந்திர வியுூகங்களை அது உடைத்தெறிந்திருக்கிறது. உள்@ர் ஆயுதத் தயாரிப்புக்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் இன்று அடைந்துள்ள வளர்ச்சிவரை தோற்கடிக்கப்பட வியலாத சக்தியாக தன்னை நிலைநாட்டியிருக்கிறது.
எமது சொந்தப் பலத்தின் மூலம் அடையப்பெற்ற இந்தப் போர்வலிமை சிங்கள அரசிற்கு தாங்கவியலாத அரசியல் பொருளாதார இராணுவ நெருக்கடியை இன்று ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டம் அலட்சியம் செய்யவியலாத அரசியற் பலத்தை சர்வதேச அரசியல் அரங்கில் பெற்றுக்கொண்டுள்ளது. தமிழருக் கிழைத்த மானுட அநீதிக்கெதிராக எழுந்த இப்போராட்டம் மனித ஆற்றலாலும், மனித தியாகத்தாலும் வளர்த்தெடுக்கப்பட்டது போல் இறுதி வெற்றியையும் அவ்வாறே நிகழ்த்தியாகும்.
(முற்றும்) ளு