12-03-2005, 11:54 AM
போர் நிறுத்த உடன்படிக்கையை திருத்தும் யோசனையை விடுதலைப் புலிகள் நிராகரிப்பு
முறையாக அமுல்படுத்துவது குறித்து பேசத்தயாரென அறிவிப்பு
போர் நிறுத்த உடன்பாட்டில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தாங்கள் சம்மதிக்கப் போவதில்லையெனவும் இந்த உடன்பாட்டை அமுல்படுத்துவது குறித்துப் பேசத் தயாராயிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஹக்ரப் ஹொக்லண்ட் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கிளிநொச்சியில் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனைச் சந்தித்த போதே தமிழ்ச்செல்வன் இதனைத் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்த உடன்பாட்டை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பாகப் பேசுவதற்கு தாங்கள் தயாராயிருப்பதாகவும் ஆனால், அதனைத் திருத்தியமைக்க தாங்கள் சம்மதிக்கப் போவதில்லையெனவும் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
எனினும், போர் நிறுத்த உடன்பாட்டில் திருத்தங்களைச் செய்ய புதிய அரசு விரும்புகிறது. இது தொடர்பாக கண்காணிப்புக் குழுவுக்கும் அரசு தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை நடைபெற்ற சந்திப்பில் அரசின் நிலைப்பாடு குறித்து கண்காணிப்புக் குழுத் தலைவர், தமிழ்ச்செல்வனுடன் பேசியுள்ளார். எனினும், புலிகள் இதற்கு சம்மதிக்கவில்லை.
இதேநேரம், அரசுடன் உடனடியாக சமாதானப் பேச்சுகளை ஆரம்பிக்கத் தயாராயிருப்பதாகவும் யுத்தத்திற்கு செல்லும் எண்ணமெதுவும் தங்களுக்கு கிடையாதெனவும் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
சமாதானப் பேச்சுகளை எந்த அடிப்படையில் ஆரம்பிக்கலாமென்பது குறித்து யோசனை ஒன்றை முன்வைப்பதற்கு அரசுக்கு கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
தமிழ்ச்செல்வனுடனான இந்தச் சந்திப்பு தொடர்பாக கண்காணிப்புக் குழு நேற்று அரச தரப்பைச் சந்திக்கவிருந்தது.
http://www.thinakural.com/New%20web%20site...Important-4.htm