06-22-2003, 09:45 AM
சனாதிபதி பாதுகாப்புப் பிரிவு
'சட்டபுூர்வமான' ஒரு வன்முறைக் கும்பல்
சிறீலங்காவின் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு பாதுகாப்பு வழங்கும் சனாதிபதி பாதுகாப்புப் பிரிவுக்கு எதிராக அவர்கள் மேற்கொண்ட குற்றச் செயல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளப் போவதாக புதிய அரசாங்ம் அறிவித்திருக்கிறது. ஊடகவியலாளர் கொலை, அவர்கள் மீதான கொலை மிரட்டல்கள், அரசியல்வாதிகள் மீதான தாககுதல்கள் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் அப்பிரிவினர் மீது ஏற்கனவே சுமத்தப்பட்டு வந்துள்ள போதும் சனாதிபதி சந்திரிகாவின் ஏவலுக்கு ஏற்ப அவர்கள் நடந்து வந்தமையால் அவர்கள் மீது விசாரணை மேற்கொள்ள எவரும் துணியவில்லை.
சனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவு சிறீலங்கா பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் 1700க்கு மேற்பட்ட ஆளணியைக் கொண்டதாக இப்பொழுது இருக்கிறது. சனாதிபதி முன்னாள் சனாதிபதிகள் அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் ஆகியோருக்கு பதுகாப்பு வழங்குவது இவர்களது பணியாகும். பொலிஸ் திணைக்களத்தினால் இவர்கள் பொலிசாரிலிருந்து தெரிவு செய்யப்பட்டு நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்குத் தனியான இடத்தில் விசேட பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் தெரிந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட தொகையினருக்கு அமெரிக்காவிலும், பிரான்சிலும் பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது.
பொலிஸ் திணைக்களத்தால் இவர்கள் நியமிக்கப்பட வேண்டியவர்களாயிருந்த போதும் உண்மையில் இவர்கள் பொலிஸ் திணைக்களத்தின் ஒழுங்கு விதிகளுக்கு உட்பட்டு இணைக்கப்பட்டவர்கள் அல்ல என்றும் முக்கிய நபர்களின் சிபாரிசின் அடிப்படையில் இணைக்கப்பட்டவர்கள் என்றும் பாதுகாப்புத் தொடர்பான போதிய விளக்கமோ அனுபவமோ இல்லாத இவர்கள் இந்தப் பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்டது 'ஒரு விபத்து' என்றும் அப்பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
சனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளராக, பொறுப்பதிகாரியாக பதவி வகிக்கும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிகால் கருணாரட்ண, முன்னாள் சனாதிபதி பிரேமதாசாவின் காலத்தில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரேமதாச உடுகம்பொலவின் தலைமையில் இயங்கிய விசேட நடவடிக்கைப் பிரிவில் கடமையாற்றியவர் (பிரேமதாச உடுகம்பொல பல சிங்கள இளைஞர்களின் படுகொலைகளுக்குக் காரணமானவர் எனக் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது) பின்னர் டி. பி. விஜயதுங்கவின் பதிவிக்காலத்தில் பதவி உயர்வு பெற்றவர்.
சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மேல்மாகாணசபை முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டபோது, அவருக்கு பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளராக நிகால் கருணரட்ண செயலாற்றி வந்தார். இவர் இவ வாறு பதிவுகளைப் பெற்றதற்கு கசினோ எனப்படும் சூதாட்ட விடுதிகள் மூலம் பெயர் பெற்ற ஜோசப் பொன்சேகா என்பவரின் சிபாரிசே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவரது உதவியாளரான பத்தேகான சஞ்சீவ என்பவருக்கு பாதாள உலகத்துடன் தொடர்பு உண்டு எனக் கூறப்படுகிறது. சஞ்சீவவின் வீட்டில் பதுங்கியிருந்த நான்கு பாதாள உலகத்தவரைக் கைது செய்ய பொலிசார் முயன்றபோது அதனை சஞ்சீவவும், நிகால் கருணாரட்ணவும் தடுத்ததாகவும் குற்றச்சாட்டு உண்டு.
1999இல் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைத் தேர்தல் நடைபெற்றபோது முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தவின் சகோதரரான கிளிபோட் ரத்வத்தவுக்கு ஆதரவாக சனாதிபதி பதுகாப்புப் பிரிவினர் சென்று எதிரணியினர் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்த வேளை, சனாதிபதிக்கு வேண்டியவரான கிளிபோட் ரத்வத்தவின் பாதுகாப்புக்காகவே தாம் அங்கு சென்றதாகவும் சனாதிபதியை மாத்திரமல்ல, சனாதிபதிக்கு வேண்டியவர்களின் பாதுகாப்புக்கும் தாமே பொறுப்பு என்றும் நிகால் கருணாரட்ண தெரிவித்திருந்தார்.
சனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் மீது கொலைக்குற்றச்சாட்டுகள், கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகள், தேர்தல் வன்முறைகள் என பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன.
குறிப்பாக மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் 2000ம் ஆண்டு சனவரி மாதம் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக சனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் மீதும் சந்தேகம் உள்ளது. அவர் உட்பட பலரின் பெயர்கள் அடங்கிய கொலைப்பட்டியல் சனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரிடம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சனாதிபதியின் தொடர்புச் சாதனத்துறைச் செயலாளராகப் பதவி வகித்த நடிகர் சனத் குணத்திலக தொடர்பாகவும் அவரின் சனல்-9 எனப்படும் தொலைக்காட்சி அலைவரிசை விற்பனை ஊழல் தொடர்பகாவும், சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கம் தொடர்பாகவும் கட்டுரைகளை எழுதி வந்தவர் 'சட்டண' எனும் சிங்கள வாரப்பத்திரிகை ஆசிரியர் ரோகண குமார. இவர் 1999ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் கொலை செய்யப்பட்ட போது சனாதிபதி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தோர்களாலேயே இது நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அத்துடன் 'சண்டே லீடர்' ஆசிரியர் வசந்த விக்கிரமதுங்க, 'ராவய' ஆசிரியர் விக்டர் ஐவன் ஆகியோரைக் கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தவிடயம் குறித்து அப்போது மறுக்கப்பட்ட போதிலும்கூட அண்மையில் பொ. ஐ. மு. விலிருந்து வெளியேறி ஐ. தே. க.வில் இணைந்துள்ள அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க பத்திரிகை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், கலைஞர்கள் மீதான தாக்குதல்கள் என்பன சந்திரிகாவின் அனுசரணையுடனேயே நடத்தப்பட்டதாகவும் சனாதிபதி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பத்தேகான சஞ்சீவவினால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள், குற்றச் செயல்கள் போன்றவற்றை சனாதிபதி அறிந்திருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இவற்றைவிட 1999 ஜூலையில் ஐ. தே. க. நடத்திய அரசுக்கு எதிரான ஊர்வலத்தில் கரு ஜெயசூரிய, காமினி அத்துக்கொறள, அஸ்வர் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு சனாதிபதி பாதுகாப்புப் பிரிவே காரணமாக இருந்தது. இத்தாக்குதலின் போது தாக்குதல் நடத்தியவர்களால் ஊடகவியலாளர் ஒருவரிடமிருந்து பறித்துச் செல்லப்பட்ட கைத்தொலைபேசி (செலு}லர்) பின்னர் சனாதிபதி பதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவரின் நண்பர் ஒருவரிடமிருந்து பொலிசாரினால் கைப்பற்றப்பட்டது.
கடந்த வருடம் நடைபெற்ற ஐ. தே. க.வின் பாதயாத்திரை மீதான தாக்குதல் உட்பட பல்வேறு தாக்குதல்களில் சனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரே சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் 1999 நவம்பரில் ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் காரியாலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இருவாரங்களின் பின்னர் ஐ. தே. க. தலைமைக்காரியாலயமாகிய சிறீகோத்தாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட பல்வேறு தாக்குதல்களில் சனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரே ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
இதனைவிட சனாதிபதி சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற தேர்தல்களின் போது வேட்பாளரை மிரட்டுவது முதல் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி கள்ள வாக்குகளை இடுவது வரையான தேர்தல் மோசடிகளில் இவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.
இதனைவிட கட்சிக்குள் ஏற்படும் உட்புூசல்களுக்கும் கூட சனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர். விளையாட்டு வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்கவை வரவேற்பது தொடர்பாக எழுந்த புூசலில் எஸ். பி. திசாநாயக்கவின் செயலாளர் இவர்களால் தாக்கப்பட்டிருப்பதை இதற்கு உதாரணமாக கொள்ளலாம்.
இவ வாறு சனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் மேற்கொண்ட பல்வேறு வன்முறைகளும் சனாதிபதியின் பாதுகாப்பு எனும் பெயரில் அவர்கள் நடத்திய கெடுபிடிகளும் சிறீலங்காவின் 'சட்டபுூர்வமான' ஒரு வன்முறைக் கும்பல் அது என்பதை வெளிப்படுத்தியதுடன் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஏவல் படையாக அவர்கள் செயற்பட்டுவந்தனர் என்பதையும் சிறீலங்கா ஊடகவியலாளர்கள் கடந்த காலங்களில் வெளிப்படுத்தியே வந்துள்ளனர்.
ஊடகவியலாளர்கள், எதிர்க்கட்சியினர் என்போர் மீது இவர்கள் நடத்திய வன்முறைகள் தொடர்பாக புதிய அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டால் சிறீலங்காவில் நடைபெற்ற பெருமளவு வன்முறைகளுக்குக் காரணமானவர்கள் யார்? என்பது வெளிவரலாம். ஆனால், இந்த வன்முறைகளில் பெருமளவில் சம்பந்தப்பட்டவர் எனக் குற்றம் சாட்டப்பட்டவரும் பாதாள உலகத்தவருடன் தொடர்புடையவரும் சனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் நிகால் கருணாரட்ணவின் உதவியாளருமான பத்தேகான சஞ்சீவ அண்மையில் நடைபெற்ற தாக்குதல் ஒன்றில் பலியாகிவிட்டமை இங்கு குறிப்பிடத் தக்கதோர் விடயமாகும். இந்தக் கொலைத் தாக்குதலுக்குக் காரணம் யார்? என்பதும் ஒரு கேள்வியாகும்.
கடந்த தேர்தலின்போது எஸ். பி. திசாநாயக்கவை கொல்ல முயன்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயுதங்களுடன் கைதான சனாதிபதி பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்கள் மீதான விசாரணை, இவர்கள் மீதான புதிய அரசின் நடவடிக்கைக்கு வித்திடலாம் எனத் தென்னிலங்கை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.