06-22-2003, 09:44 AM
மாற்றமின்றித் தொடரும்
இராணுவக் கெடுபிடிகள்
தமிழர் மத்தியில் சந்தேகத்தை விதைக்கின்றன
புதிய அரசும், அதன் படைகளும் தமிழ்மக்களின் விடயத்தில் கடைப்பிடித்து வரும் கொள்கைகளில் எந்தவிதமான மாற்றங்களையும் இதுவரை அவதானிக்க முடியவில்லை. முன்பு சந்திரிகா அரசு தமிழ் மக்கள் மீது கடைப்பிடித்து வந்த அதே நடைமுறைகளும் கொள்கைகளும், கெடுபிடிகளும் மாற்றம் இன்றித் தொடர்கின்றன.
-அனிக்கிலஸ்
சிறீலங்காவில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றுள்ள போதிலும் தமிழ்ப் பிரதேசங்கள் மீதான கெடுபிடிகளோ தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகளோ இன்னமும் குறைந்தபாடில்லை. முன்னர் இருந்து வந்த அதே நடைமுறைகள் தொடர்ந்தும் இருந்து வருகின்றன. இது தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவே இருந்து வருகிறது.
சிறீலங்காவில் ஐக்கிய தேசிய முன்னணி புதிதாக அரசு அமைத்து ஒரு மாத காலத்தைக் கடந்துள்ளது. இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர தமிழ் மக்கள் தொடர்பாக ஆட்சியாளர்கள் மனங்களில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகத் தெரியவில்லை. புதிய அரசும், அதன் படைகளும் தமிழ் மக்களின் விடயத்தில் கடைப்பிடித்துவரும் கொள்கைகளில் எந்தவிதமான மாற்றங்களையும் இதுவரை அவதானிக்க முடியவில்லை. முன்பு சந்திரிகா அரசு தமிழ் மக்கள் மீது கடைப்பிடித்து வந்த அதே நடைமுறைகளும் கொள்கைகளும், கெடுபிடிகளும் மாற்றம் இன்றித் தொடர்கின்ற. தமிழ் மக்களின் தாயகப் பிரதேசமான வடக்குக் - கிழக்கில் சிறீலங்கா இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் சிறீலங்காப் படையினரும் அவர்களுக்குத் துணை நிற்கும் தமிழ்க் குழுக்களும் தமது வழமையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்கின்றனர். அதேபோன்று இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீதான கெடுபிடிகளும் தடைகளும் முன்னர் இருந்தன போன்றே உள்ளன.
குறிப்பாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகள் என்று பார்க்கும் இடத்து யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் படையினரின் சோதனைக் கெடுபிடிகள் முன்பு காணப்பட்டது போன்றே உள்ளது. என்பதைவிட மேலும் இறுக்கம் பெற்றுள்ளன. சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக பொலிசார் நிறுத்தப்பட்டிருந்த சோதனை நிலையங்களில் இன்று நவீன ஆயுதங்கள் தாங்கிய படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இவற்றைவிட சுற்றிவளைப்புகளும் தேடுதல்களும் விசாரணை என்ற பெயரில் கைதுகளும் மற்றும் மக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன. அத்தோடு படையினர் நேரடியாகப் படுகொலைச் சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர தடைகளும் இறுக்கமடைந்துள்ளன. இரவில் நடமாடுவதற்கு தடைகள் உள்ளன. சில பகுதிகளுக்கு மக்கள் செல்ல முடியாது. மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இவ வாறு தடுக்கப்பட்டுள்ளனர். அத்தோடு தொழில் hPதியான தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மீன்பிடி மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான தடைகள் அப்படியே உள்ளன. இவற்றை தளர்த்துவதற்கு படைத்தரப்புக்கு அனுமதியளிக்கப்படவில்லை. ஆகமொத்தத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப எந்தவிதமான வழிவகைகளும் ஏற்படுத்தப்படவில்லை. அதாவது இப்பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் முன்பு அனுபவித்த அதே இன்னல்களையும் துன்பங்களையும் தொடர்ந்து அனுபவிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று இராணுவக் கட்டுப்பாடற்ற பிரதேசங்களுக்குமான நிலைமைகள் உள்ளன. பொருளாதாரத் தடை மற்றும் கட்டுப்பாடற்ற பகுதிகளில் இருந்து வரும் மக்கள் மீதான அனுமதிக் கெடுபிடிகள், விசாரணைகள், கைதுகள், தடுத்து வைப்புக்கள் என்பன தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றன.
நல்லெண்ண அடிப்பைடயில் சமாதானச் சூழலொன்றை தோற்றுவித்துப் பேச்சுவார்த்தை மூலமான தீர்வொன்றைக் காணும் பொருட்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி நள்ளிரவு முதலாக ஒருதலைப்பட்சமான முறையில் ஒரு மாதகால யுத்தநிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டும் வருகிறது. இதற்கு சிறீலங்கா அரசும் தனது நல்லெண்ணத்தைக் காட்டும் வகையில் ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தத்தை அறிவிக்கவில்லை. இருந்தபோதிலும் ஒரு மாதகால மோதல் தவிர்ப்பு நிலையொன்றை கடைப்பிடிப்பதாக மாத்திரம் அறிவிப்பு விடுத்திருந்தது. சமாதானத்தை உருவாக்கும் ஒரு நல்லெண்ண சூழ்நிலையை உருவாக்கும் நோக்கில் சிறீலங்கா அரசாங்கத் தரப்பு எடுத்த முதல் நடவடிக்கையான இந்த அறிவிப்பு கூட பெரிதளவான முன்னேற்றகரமானதாக இருக்கவில்லை. அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த யுத்த நிறுத்தத்துக்கும் சிறீலங்கா அரசாங்கம் கடைப்பிடிப்பதாக அறிவித்த மோதல் தவிர்ப்பு நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஒருதரப்பு முற்றாக மோதல்களை நிறுத்தி அமைதி பேணுவதாக அறிவித்து அதனை நல்ல முறையில் கடைப்பிடித்துவரும் நிலையில் மறுதரப்போ அதற்கு இசைவாக செயற்படாது மோதல்களைத் தவிர்ப்பதாக மாத்திரம் அறிவித்துள்ளது.
மேலும், சிறீலங்காப் படையினர் மோதல் தவிர்ப்புக் காலத்தில் தமது வழமையான செயற்பாடுகளில் ஈடுபடுவர் என்றும் அவர்கள் முகாம்களில் முடங்கி இருக்கமாட்டார்கள் தேடுதல்கள், சோதனைகள் நடவடிக்கைகள் வழமைபோல் இடம்பெறும் என்றும் சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சனத் கருணாரட்ன மோதல் தவிர்ப்பு நிலை அறிவிப்பின் பின்னான பத்திரிகையாளர் மாநாட்டில் கூறியிருந்தார். புலிகள் தமது நடவடிக்கைகளை முற்றுமுழுதாக நிறுத்தி சமாதானம் பேணும் நிலையில் சிறீலங்கா அரசும் அதன் படைகளினதும் இத்தகைய செயற்பாடுகள் ஏன்? இத்தகைய மோதல் தவிர்ப்புக் காலத்தில் அரசினால் அறிவிக்கப்பட்டமாதிரியாக படையினர் தமது செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். நாளாந்தம் படையினர் புரியும் கெடுபிடிகள் வெளிவந்த வண்ணமேயுள்ளன. இது படையினர் அதிகாரத்தை தமது கையில் எடுத்து செயற்படுகின்றனர் எனக் கூறமுடியாது. அதற்கான அங்கீகாரத்தை சிறீலங்கா அரசே வழங்கியுள்ளது என்றே கூறலாம்.
கொழும்பு போன்ற சிங்களப் பகுதிகளில் இன்று சோதனைக் கெடுபிடிகள் தளர்த்தப்பட்டுள்ளன. வீதித்தடைகளும் நீக்கப்பட்டு போக்குவரத்துக்களும் இலகுபடுத்தப்பட்டுள்ளன. இது ரணில் விக்கிரமசிங்க அரசு பதவியேற்ற கையோடு அவசர அவசரமாக செய்யப்பட்ட ஒரு நடவடிக்கையாகும். சிங்களப் பிரதேசங்களில் இவ வாறு உடனடியாக செயற்பட முடியுமென்றால் ஏன் தமிழ்ப் பிரதேசங்களில் செயற்படுத்த முடியாது? இத்தகைய செயற்பாடுகளை பார்க்கும்போது சிங்கள மக்களின் மத்தியில்தான் இயல்பு நிலையை தோற்றுவிக்க வேண்டும் என்று அரசு எண்ணுகின்றதுபோல் உள்ளது. உண்மையில் இரு தேசிய இனங்களுக்கு இடையில் பிரச்சினைகள் இருக்கும் நிலையில் அதுவும் தமிழ் மக்கள் சிறீலங்கா ஆட்சியாளர்களால் மிகப் பெரியளவில் இன்னல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கு முகம் கொடுத்து நிற்கும் இவ வேளையில் இவற்றுக்கான தீர்வைக்காண முக்கியத்துவம் தருவதற்கு முற்படாது, சிங்களப் பிரதேசங்களில் இயல்புநிலை தோன்ற முக்கியத்துவம் அளிக்க முனைந்தமையும் இந்த விவகாரங்களை இனிவரும் நாட்களில் அரசு எவ வாறு கையாளப்போகின்றது என்ற சந்தேகத்தை பலமாக எழுப்புவதாகவும் உள்ளது.
இது அதாவது ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு உண்மையில் நல்லெண்ண சூழலை ஏற்படுத்தவோ அதனைத் தொடர்ந்து எடுக்கப்படும் முக்கியமான செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயற்படுமா என்பது சந்தேகத்துக்குரியதாகவே உள்ளது. இந்தவகையில் முன்னைய ஆட்சியாளர்கள் போன்று தற்போதைய அரசும் செயற்பட முனைந்தால் சிறீலங்கா தேசமும் அரசும் அரசியல் பொருளாதார மற்றும் போரியல் hPதியில் மிகப் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்படும் என்பதே உண்மையாகும்