06-22-2003, 09:44 AM
ஞானரதன்
கப்டன் வாணன்ஃமைக்கலின் தந்தையால் எழுதப்பட்ட படைப்பு இது
மயிற் பறவை பற்றிய நினைவுகள் திடீரென அவனது மனவான்பரப்பில் தூசுப்படலம் விலகி வழிவிட, மீண்டும் தோற்றம்கொண்டது. ஏழெட்டு வயதிலோ அல்லது அதற்கும் முன்னரோ என அவனுக்கு ஞாபகம் வரவில்லை. மனவெளியெங்கும் நிரம்பி நீல நிறமாக அதிலிருந்து வெடித்துச் சிதறும் பல வர்ண ஒளிச்சிதறல்கள் வளைந்து நெளிந்து நர்த்தனங்கள் போலவும், ஓவியங்கள் போலவும், மாறி மாறி, புதுப்புது உருவெடுத்து, அவனது மன இருக்கையில் கொலுவீற்றிருந்தன. அது ஒரு காலம்.
அதன் பின்பு இந்த மயில் பறவை பற்றிய ஒளி அதிர்வுகள் காலத்துக்குக் காலம் இடைவெளி கூடுதலாகவும் குறைவாகவும் மனத்தின் ஞாபக மேடையில் தோன்றி மறைந்தன.
பின்னர் பல காலமாக மயில் பற்றிய நினைவுகள் அறுந்து போயின. மீண்டும் அவனது ஐம்பத்தைந்தாவது வயதில் அந்தப் பதிவுகள் உயிர்ப்பெய்தின. நீண்ட கால இடைவெளி ஒருசில நொடிப் பொழுதுகளாக மட்டுமே குறுகிவிட்டது போலிருந்தது. அப்பொழுது அவனுக்கு அளவெட்டிக் கிராமத்தின் வாசனை மணத்தது.
-
கருப்புலம் சிறுவர் பாடசாலையில் அவன் அப்பொழுது மூன்றாம் வகுப்பு. கதிரவேலுச் சட்டம்பியார் பாடி, நடித்துக் கதை சொல்வார். ஒருநாள் ஏறுமயிலேறி விளையாடும் முருகனைப் பற்றியும் சொன்னார்.
அப்போதுதான் மயிலைப் பற்றியும் சொல்லியிருக்க வேண்டும்.
நல்லூர்த் தீர்த்தத் திருவிழாவில் அவனுக்குப் பாட்டி காட்டியது வெள்ளி மயில். அந்த மயிலை உயிராகவும் பார்க்கமுடியும் எனப்பாட்டி சொல்லியிருந்தார்.
அந்த மயிலைப் பார்த்துவிட வேண்டுமென்ற ஆசை அன்றிலிருந்தே துளிர்விடத்தொடங்கியது.
அவனின் தந்தை காலை தவறாமல் கை நிறைந்த செவ வரத்தம் புூக்களோடு வந்து சூரியனைப் பார்த்துக் கும்பிட்ட பின் மாடக்குழியில் வைத்திருக்கும் முருகன் படத்துக்கும் புூக்கள் சாத்துவார். தந்தையைத் தொடர்ந்து அவனும் விபுூதி புூசிவிட்டு முருகன் படத்தைப் பார்த்தவாறு நிற்பான்.
முருகனின் கையொன்று மயிலின் கழுத்தை அணைத்தவாறு அவனுக்கு அழகின் சூட்சுமத்தைத் தொற்ற வைக்கும்.
நீல நிறம் பளிச்சிடும் அந்த நீள் வளைவுக் கழுத்தும், தோகையில் வரிசையாய் பரவி விட்ட கண்பொட்டுக்களும் அவனைப் பிரபஞ்ச வெளிக்கு அழைப்பது போலிருக்கும்.
மனமே முருகனின் மயில் வாகனம் என்பதெல்லாம் அவன் பிற்காலத்தில் உணர்ந்துகொண்டவை.
அவனின் நண்பன் விக்கி ஒரு நாள் மயிலிறகு ஒன்றை வகுப்புக்குக் கொண்டுவந்தான். பாடப் புத்தகத்தின் நடுவே வைத்துவிட்டால் 'படிப்பு வரும்' என்றும் மயிலிறகு குட்டி போடும் என்றெல்லாம் கூறினான். மயிலிறகு கண்களில் பட்டால் 'குருடனாய்ப் போய்விடுவாய்' என்றும் எச்சரிக்கை செய்தான். இவற்றையெல்லாம் அவனின் மனம் காவ முற்படவில்லை. ஆனால், மயிலிறகுக் கண்ணில் அவன் கண்ட நிறங்கள் புூமிக்குரியதாகப் படவில்லை அவனுக்கு. நீண்ட நேரமாக அதையே பார்த்துக்கொண்டிருந்தான். அவனின் விருப்பைக் கண்ட விக்கி மயிலிறகை அவனிடம் நீட்டினான். மயிலிறகின் கண்பொட்டில் தெரிந்த நிறங்கள் தனித்தும் ஒன்று சேர்ந்தும், யுகம் யுகமாகப் பரிச்சயமுள்ளதாக விரிந்தன. அவன் அதைப் பெற்றுக்கொள்ள மறுத்தது விக்கிக்குப் புரியவில்லை. அதைத் தனதாக்கிக் கொள்ள ஆசைப்படும் சிறுபிள்ளைத்தனம் அவனைவிட்டு விலகியே இருந்தது.
அவனின் தந்தை நகைத்தொழிலில் நகாசு வேலைக்காரர். வேலையில் மூழ்கிவிட்டால் உலகை மறந்துவிடுவார். பற்றவைத்த சிகரட் மேசையில் வெறுமனே புகைந்து கொண்டிருந்தது. தங்கப் பதக்கத்தில் கற்கள் பதித்துக்கொண்டிருந்தார். அந்த பதக்கத்தின் இரு பக்கவாட்டிலும் மயில்கள்தான். தோகையில் கற்கள் ஒளித்தெறிப்படைந்து நீலமாகவும் நெருப்பாகவும் மின்னல் வெட்டுகின்றன. மேசையில் இருந்த மெழுகுக்கட்டையை எடுத்துப் புரட்டிப் பார்க்கிறார். அப்போதுதான் மீண்டும் சிகரட்டை எடுத்து வாயில் வைத்து இழுத்துவிட்டு சிகரட் கட்டையைத் தூர வீசிவிட்டு மீண்டும் பார்த்து ரசிக்கிறார். அவனும் முகத்தை உள்ளே செலுத்தப்பார்க் கிறான். மயிலின் மிடுக்கான தோற்றம் அவனைத் தங்கரதத்தில பயணிக்க வைத்தது. தன்னைப்போலவே தந்தைக்கும் மயிலின் பாதிப்பு இருப்பதாகவே அவன் எண்ணினான். இவ வாறு மயில் பற்றிய பதிவுகள் அவனில் இருந்து தோற்றம் பெற்ற, உன்னத அவனின் மூன்று காலங்களுக்கும் நிரவின. அகஉலகின் பெரும் பகுதியின் விரிவுக்கு மயிலே மூலப்பொருளாயிற்று.
-
சரோஜினி மாமியின் கல்யாணம் அவனுக்கு நினைவிருந்தது. ஆனால் மனதில் இருப்புக்கொண்டது வெளிக்கூடத்தில் விரித்திருந்த மயில் படங்கள் போட்டிருந்த கம்பளங்களில் படுத்திருந்தவாறு அந்த மயில்களைக் கம்பளங்களின் மென்மையோடு தடவிப்பார்த்ததுமட்டுமே. அந்த ஞாபகம் முதுமை பெறாமல் இருந்தது.
-
செல்வச்சந்நிதி தீர்த்தத்திருவிழாவுக்குப் புறப்படக் காவடிகள் தயாராகிக் கொண்டிருந்தன. செடில் குத்தி, உருஆடியபோது காவடிகள் தோள்களில் ஏறின. ஆட்டமும், களையும், வியர்வையும் உடுக்கு, பறை, தவில் வாத்தியங்களுடன் கலந்தன. அவனும் சில நண்பர்களுடன் காவடி பார்க்க வந்திருந்தான். மயில் இறகுகள் ஈவிரக்கமற்று மிகக் கொடுமையாகக் காவடிகளுக்குள் செருகிவிடப் பட்டிருந்ததைக் கண்டபோது மயிலின் துன்பம் அவனை வாட்டியது. மயில்களின் அழகு எவ வாறு திடீரெனச் சூனியமாகிப் போயிருக்கும். அவனுக்கு அன்றைய காவடி ஆட்டம் சலனமற்ற நீரில் தோன்றிய அழகான நிழற் காட்சியொன்று குழம்பிப் போய்விட்டது போலிருந்தது.
என்றாலும் மனம் என்னும் வெண்திரையில் மயிலின் நிறங்கள் கொண்டு வரையப்பட்டிருந்த பல்லாயிரம் ஓவியங்கள், உயிரணுக்கள் போல, ஒன்று சேர்ந்து பிரிந்து, பெருகி, அழிந்து மீண்டும் பலவாக உயிர்த்து நிரந்தரமான ஓவியப் பின்னல்களாகவே குடிகொண்டிருந்தன அவனின் ஆழ்மன விரிப்பில்.
-
அவனும் நண்பன் விக்கியும் கும்பழாவழைப் பிள்ளையார் கோவிலின் வடக்கு வீதியோரம் உள்ள மகிழமரத்தில் ஏறிப் பழங்கள் தேடிக்கொண்டிருந்தபோது மயிலின் குரல்கேட்டது. 'கோயில் மயில் வந்திட்டுதடா விக்கி, இறங்கிவா பாப்பம்' என அவன் நண்பனைத் துரிதப்படுத்தினான். மயிலின் வடிவத்தைபை; பற்றி அவனின் மனதில் பதித்திருந்த பெறுமானத்தைவிட, நேரில் பார்த்தபோது கூடுதலாக இருப்பது போலவும் மாறாகக் குறைவாக இருப்பது போலவும் மனப்பதிவோடு முரண்பட்டுக்கொண்டன. மயிலின் கழுத்து அசைந்தபோது கண்ட துடிப்பு, கருநீல முத்துக்கள் வரிசையிட்ட கொண்டை, வெள்ளைச் சாயமிட்ட இமைகள், நெஞ்சுப் பகுதியின் நீலத்திரட்சி, நீல வரிகள், கபில நிற இறக்கைகள் இடைக்கிடை சில்லிட்டு உதறும் போது எழும் வண்டோசை, கூடுதலான சுமையோடு சமநிலை தழும்பும் தோகை, அவதானமாகக் கால்கள் அடியெடுத்து வைக்கும் நடையின் பவ வியம், அவனுக்குத் தரிசனமாயின அன்று. சிறிது நேரத்தில் மயில் பறந்து கோவிலின் மணிக்கோபுரத்தில் சற்றுத் தரித்துவிட்டு வானில் பறந்து மறைந்தது. இது மயிலின் தரிசனம்.
-
மயிலின் அசுர வடிவத்தின் தரிசனம் அவனுக்கு எத்தனையோ வருடங்களின் பின் கிடைத்தது. நீண்ட தோகையுடன் வானில் பறந்து சென்ற மயிலின் தோற்றம் அப்போது அழிந்து போயிற்று.
வடமராட்சியெங்கும் பறந்து, கொலை வெறிக்குரலில் வானம் அதிர்ந்திட நெருப்புச் சன்னங்களைப் பொழிந்து தள்ளிய அந்த உலங்குவானூர்தியைக் கண்டபோது அழகும், மென்மையும், இனிமையும் பொருந்திய மயில் வாழ்ந்த இடத்தை எவ வாறு மனிதனின் கொலை மயில் ஆக்கிரமித்தது! இனிய நினைவுகளோடு அவனும் அவனுடைய உறவுகளும் அவனுக்குரிய அடையாளங்களோடு வாழக்கூடாது என்பதில் குறிவைத்தது அது. பச்சை, ஊதா நிற உருமறைப்புத் தீந்தை தீட்டப்பட்டு, மயிலின் சாயலில், அவனின் வானத்தை வெடிமருந்துப்புகை கொண்டு நிறைத்தது அது. இரத்த நாளங்கள் வெடி அதிர்வுகளில் துடிதுடித்தன. செவிப்பறையில் சாவுக்கு அழைக்கின்ற மிகையொலி அது. வானில் தோன்றாத நேரங்களிலும் கேட்டது. வானூர்திகள், குண்டு வீச்சு விமானங்களின் ஒலிகளை நுண்ணியதாகக் கேட்பதில் காதுகள் தேர்ச்சிபெற்றன. வானத்திலிருந்து குண்டுகளாய் அவலம் தொடர்ந்தது. ஊர்கள், மனிதர்கள், உடமைகள் எல்லாமே சிதறிப்போயின. எத்தனை நூற்றாண்டு காலம் பொத்திப் பொத்திப் பாதுகாத்துவந்த அவனின் ஆத்ம நிலப்பரப்பில் இரத்தம் கசிந்தது.
மயில் எண்ணெய், மயில் இறைச்சி, மயில் இறகுகள் விற்பனைக்காக வந்தன.
மந்திகை வைத்தியசாலைக்கு இறந்தவர்களையும் காயப்பட்டவர்களையும் ஏற்றிச்சென்ற வாகனத்தையும் துரத்தியது. நெல்லியடி புனித இருதய கல்லூரியில், அதற்கருகே அமைந்துள்ள தேவாலயத்தில், கூட்டைச் சுற்றிய தேனீக்களாக மக்கள் வாழ்விடங்களை விட்டுத் தஞ்சம் புகுந்திருந்தனர். தேவாலய வளவில் கஞ்சிக் கிடாரத்தைச் சுற்றி புூவரசம் இலைகளைக் கோலிவைத்தவாறு நீளும் கரங்கள். சின்னஞ்சிறிய கரங்களும்தான். கஞ்சியின் சூட்டைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பதறும் பிஞ்சு விரல்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு நேரக் கஞ்சி. அப்பொழுதும் அந்த மக்கள் கூட்டத்தின் மீது குண்டுமாரி பொழிந்தது. பஞ்சசீலத்திலிருந்து உருவமைக்கப்பட்ட அந்த உலங்குவானூர்தி கஞ்சிக் கிடாரத்திலும் இரத்தம் தெறித்தது, அவலக்குரல்கள் தேவாலயமெங்கும் நிறைந்து கர்த்தரின் சிலுவையில் ஓய்ந்தன.
கிளாலிக் கடற்கரையில் வன்னிக்குப் போய்ச் சேர்ந்துவிட வேண்டுமென்று குவிந்த உரப்பை மனிதர்களில் அவனும் ஒருவன். அம்மனிதர்களின் வாழ்வின் விழுமியங்கள் யாவும் அந்த உரப்பைகளில் அடக்கமாகி, ஒரு நாகரிகமடைந்த மனித இனத்தின் வழித்தோன்றல்கள் அவமான முத்திரை குத்தப்பட்டுப் புற்றரைகளிலும், பாதைநெடுகிலும், சேறும் சகதியோடும் கிளாலிக் கடற்கரையில் காத்திருப்பதைக் கண்ட உலங்குவானூர்திகள் திருப்தியடைவதற்குப் பதிலாக மேலும் கோபம் கொண்டன. சிங்கத்தின் வாய் அப்பிரதேசமெங்கும் அனல் தெறிக்கும் சன்னங்களை வீசின.
படகுப் பாதையெங்கும் மக்கள் பதுங்கிடம் தெரியாமல் நீரிலும் நிலத்திலும் புரண்டு கதறி அழுத குரலில் கிளாலி நீரேரி அதிர்ந்து கலங்கியது. உலங்குவானூர்திகள் சுற்றிச் சுற்றித் தமது மேலாதிக்கத்தைத் தமிழனின் வான் பரப்பில் நிலை நிறுத்திக் கொண்டிருந்தன. நீரில் கரும்புகைகள் ஆங்காங்கே அடையாளமிட்டன 'இது உனக்குரிய இடமல்ல' என்று.
அவன் கிளாலிக் கடல் தாண்டி வன்னி மண்ணில் கால்பதித்தபோது, அக உலகச் சிறையிருப்புக்கே விரும்பாத அவனுக்கு இந்தப் புறச்சிறையின் பாதிப்பு, எதை முதலில் உடைக்கவேண்டுமென நன்கு உணர்த்தியது. அப்பொழுதுதான் அவனின் மயில் உயிர்க்கும்.
-
திருமலைக் கடல் அன்று நீல மயிலாக மாறியிருந்தது. ஏனிப்படி உருமாற்றம் செய்துகொண்டது? அந்தக் கடல் மயிலாகப் பறந்து செல்லப்போகிறதா?
அவன் மகனும் இன்னும் சில போராளிகளும், அலைகள் நீல வரிகள் இட்டுச்செல்ல, இரைந்து கிழித்தோடும் படகினில் பணியொன்று முடித்துத் திரும்புகையில் அந்தக் கொலை மயில் காத்திருந்தது. அவனின் மகனுடையதும், இன்னொரு போராளியினுடையதும் உயிர்களை குடித்து எக்காளமிட்டது.
அதன் பின்பு ஒரு நாள் 'நீல வரிபோட்ட' மகனுடைய படம் வீட்டுக்கு வந்தபோது நீலக்கடலும், மயிலின் நிறங்களும் மறைந்து போயின.
ஒருநாள் மட்டும் கனவாய் வந்துபோயின.
விடுபட முடியா வேதனைகள் இதயத்தின் குருதிக்குழாய்களில் குண்டூசிகள் பாய்ச்சின. அவனின் நேசிப்புக்குரிய மயில் நீல நிறம், இரத்தச் சிவப்பாக மாறி மனவெளிப் பாலைவனமொன்றின் கங்கையின் நடுவே நிறுத்தியது.
கால நகர்வின் சுடுமணலில் அவன் கால்கள் பதித்துச் சென்றுகொண்டிருந்தபோது தான் அந்தச் செய்தி அவனை வந்தடைந்தது. தமிழனின் கடற்பரப்பில் போராளிகளின் தாக்குதலில் உலங்குவானூர்தி வெடித்துச் சிதறியது என்று. அப்பொழுதுதான் அவனின் மனவெளி நீலம் பாரிக்கத் தொடங்கியது. இனி நீலமாக மாற்றம் கண்டு, மயிலின் நினைவாகவோ, அன்றி மகனின் நீல வரியின் நினைவாகவோ, அவனின் ஆத்மாவின் வேண்டுகைக்குரிய நீலமயில், அவனைச் சுற்றி விரியும் பிரபஞ்சத்தில், தோற்றம் கொள்ளும்.