Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிரித்தானியாவில் வீடு வேண்டலாம்?
#2
உது பற்றி விபரமாத் தெரியாது,ஆனா லண்டனில எங்கட ஆக்கள் வீடு வேண்டுறது டொஜி(dodgey mortgage) மோட்கேஜில.அதாவது பொதுவா வங்கிகள் கடன் குடுக்கிறது ஒரு வரின் சம்பளத்தில ஆகக் கூடிய வரயில் 3.5 மடங்காகும்.லண்டனில சராசரி வீட்டின் பெறுமதி 175,000 என்றால்,ஒருவரின் சராசரி வருமானம் 25,000 என்றால் அவரால் ஆகக் கூடிய தொகையாக ஒரு 87,500 தான் வங்கியில எடுக்க முடியும்.ஆனால் பலர் வீடு வேண்டுகிறார்கள் .அனேகமாக முகவர்களினூடாக (agents) சுய வருமான அறிவுறுத்தலினூடாக (self certification).இதில் தங்களது சம்பளத்தைக் கூடக் காட்டி வீடு வாங்கிப் போட்டு பிறகு அறைகளை வாடகைக்கு விட்டு கடனைக் கட்டுகிறார்கள்.வீடு விலைகள் கூடிக் கொண்டு போன காலத்தில் வங்கிகளும் இதனைக் கண்டு கொள்ளவில்லை.வீட்டின் பெறுமதி கடனை விட பொதுகாவக் கூட வாக இருந்ததானால், வங்கிகள் வீட்டை எடுக்க கூடியதாக இருக்குந்தது.ஆனால் இதனை பல பேரும் செய்யத் தொடங்க வீட்டு விலை கட்டுக் கடங்காமல் கூடி சந்தை பெருத்துவிட்டது.அதன் பின் இப்போது இதனைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.பிரதான காரணம் வீட்டு விலை அவ்வளவாக ஏறாததே. நான் பார்த்தவரையில் இங்கிலாந்தில் வீட்டு விலை ஏற்றமே மக்களிடம் பணப் புழக்கத்தைக் கூட்டி ,பொருளாதாரத்தை ஒரளவு கொண்டு சென்றது.இனி இது எவ்வாறு சாத்தியப் படும் என்று தெரியவில்லை.ஏனெனில் இப்போது இருக்கும் விலயில் வீடு வாங்கக் கூடியவர்கள் குறைவே.மேற்குறிப்பிட்ட விளம்பர தாரருடன் கதைத்து பார்த்தாலே அவர்கள் என்ன மாதிரிச் செய்கிறார்கள் என்று தெரியும்.மேலும் கடன் பொவுன்ட்ஸிலா அல்லது யுரோவிலா இருக்கும்.பொவுண்டிஸில் இருந்து உங்கள் ஊதியம் யுரோவில் எண்டால் ,பண மாற்று வீதத்தில் நிகழும் மாற்றங்களும் தாக்கம் செலுத்தும்.100 வீதக் கடனுக்கு பொதுவாக அதிக வட்டியோ அன்றி அதனோடு சேர்ந்த காப்புறுதிக் கட்டணமோ இருக்கும்(mortgage ideminitiy premium).இப்படியான கடன்களுக்கு நீங்கள் அதிக பணம் கட்ட வேண்டி இருக்கும். வடிவாக ஆராந்து செய்வதே சிறந்தது, உந்த விளம்பரங்களில் இருக்கும் வில்லங்கங்கள் கண்ணுக்குத் தெரியாத எழுத்தில இருக்கும்.(small print)
Reply


Messages In This Thread
[No subject] - by narathar - 11-30-2005, 08:59 PM
[No subject] - by kurukaalapoovan - 11-30-2005, 09:30 PM
[No subject] - by narathar - 11-30-2005, 10:04 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)