![]() |
|
பிரித்தானியாவில் வீடு வேண்டலாம்? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: பிரித்தானியாவில் வீடு வேண்டலாம்? (/showthread.php?tid=2227) |
பிரித்தானியாவில் வீடு வேண்டலாம்? - kurukaalapoovan - 11-30-2005 ஐரோப்பாவில் உள்ளவர்கள் பிரித்தானியாவில் வீடு வேண்டலாம், 100 வீதக் கடனோடும் வேண்டலாம் என்று சில முகவர்கள் விளம்பரம் போடுகிறார்கள். இது உண்மையில் சாத்தியமா? ஜரோப்பாவில் வேலை செய்வதற்கான ஆதாரங்கள், நிரந்தரமான வருமானம் மற்றும் வங்கி ஆதாரங்களை பிரத்தானியாவில் தகுதிவாய்ந்த ஆவணங்களாக ஏற்றுக் கொள்கிறார்களா? வழமையாக இவை சார்ந்த ஒரு நாட்டின் ஆவணங்கள் இன்னொரு நாட்டில் சொந்த நாட்டின் அளவிற்கு பெறுமதி மதிப்பு கிடைப்பதில்லை. - narathar - 11-30-2005 உது பற்றி விபரமாத் தெரியாது,ஆனா லண்டனில எங்கட ஆக்கள் வீடு வேண்டுறது டொஜி(dodgey mortgage) மோட்கேஜில.அதாவது பொதுவா வங்கிகள் கடன் குடுக்கிறது ஒரு வரின் சம்பளத்தில ஆகக் கூடிய வரயில் 3.5 மடங்காகும்.லண்டனில சராசரி வீட்டின் பெறுமதி 175,000 என்றால்,ஒருவரின் சராசரி வருமானம் 25,000 என்றால் அவரால் ஆகக் கூடிய தொகையாக ஒரு 87,500 தான் வங்கியில எடுக்க முடியும்.ஆனால் பலர் வீடு வேண்டுகிறார்கள் .அனேகமாக முகவர்களினூடாக (agents) சுய வருமான அறிவுறுத்தலினூடாக (self certification).இதில் தங்களது சம்பளத்தைக் கூடக் காட்டி வீடு வாங்கிப் போட்டு பிறகு அறைகளை வாடகைக்கு விட்டு கடனைக் கட்டுகிறார்கள்.வீடு விலைகள் கூடிக் கொண்டு போன காலத்தில் வங்கிகளும் இதனைக் கண்டு கொள்ளவில்லை.வீட்டின் பெறுமதி கடனை விட பொதுகாவக் கூட வாக இருந்ததானால், வங்கிகள் வீட்டை எடுக்க கூடியதாக இருக்குந்தது.ஆனால் இதனை பல பேரும் செய்யத் தொடங்க வீட்டு விலை கட்டுக் கடங்காமல் கூடி சந்தை பெருத்துவிட்டது.அதன் பின் இப்போது இதனைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.பிரதான காரணம் வீட்டு விலை அவ்வளவாக ஏறாததே. நான் பார்த்தவரையில் இங்கிலாந்தில் வீட்டு விலை ஏற்றமே மக்களிடம் பணப் புழக்கத்தைக் கூட்டி ,பொருளாதாரத்தை ஒரளவு கொண்டு சென்றது.இனி இது எவ்வாறு சாத்தியப் படும் என்று தெரியவில்லை.ஏனெனில் இப்போது இருக்கும் விலயில் வீடு வாங்கக் கூடியவர்கள் குறைவே.மேற்குறிப்பிட்ட விளம்பர தாரருடன் கதைத்து பார்த்தாலே அவர்கள் என்ன மாதிரிச் செய்கிறார்கள் என்று தெரியும்.மேலும் கடன் பொவுன்ட்ஸிலா அல்லது யுரோவிலா இருக்கும்.பொவுண்டிஸில் இருந்து உங்கள் ஊதியம் யுரோவில் எண்டால் ,பண மாற்று வீதத்தில் நிகழும் மாற்றங்களும் தாக்கம் செலுத்தும்.100 வீதக் கடனுக்கு பொதுவாக அதிக வட்டியோ அன்றி அதனோடு சேர்ந்த காப்புறுதிக் கட்டணமோ இருக்கும்(mortgage ideminitiy premium).இப்படியான கடன்களுக்கு நீங்கள் அதிக பணம் கட்ட வேண்டி இருக்கும். வடிவாக ஆராந்து செய்வதே சிறந்தது, உந்த விளம்பரங்களில் இருக்கும் வில்லங்கங்கள் கண்ணுக்குத் தெரியாத எழுத்தில இருக்கும்.(small print) - kurukaalapoovan - 11-30-2005 எனக்கும் அவர்களுடைய விளம்பரம் அடிப்படைகளுக்கு முரணாக இருந்தது போல இருந்தது. அது தான் இஞ்சை போட்டனான். பிரித்தானியாவில் நிலத்தட்டுப்பாடு இருக்கிறபடியால், சனத்தொகை பிறப்பாலும் வந்தேறு குடிகளாலும் கூடிக் கொண்டிருப்பதால் குடிமனை மதிப்பு ஏறிக்கொள்ள மற்றய ஜரோப்பிய நாடுகளோடு ஒப்பிடும் போது சாத்தியம் அதிகம். ஆனாலும் தற்போதைய பொறுமதியில் ஓரளவானது hype ஆல் வந்தது என்றால் அதை வேலை வாய்பு அதிகரிக்காத பொருளாதார வழர்ச்சியால் (jobless growth) வட்டி வீதம் ஏற தொடங்கும் போது தக்கவைத்துக் கொள்ளலாமா? - narathar - 11-30-2005 நான் முன்னர் கூறியது போல் பிருத்தானியாவில் இப்போது சொந்தமாக வீடு வைத்திருப்போர் சனத்தொகையில் கூடிய சதவிகிதமானோர்(60 இல்லாட்டி 70 வீதம் என்று நினைக்கிறேன்) ஒருவரின் வருமானத்தில் பெரும் பங்கு வீட்டு கடுனுக்கே செல்லுகிறது இந்த நிலயில் வட்டி விகிதம் அதிகரித்தால் ஒரு வரின் வருமானத்தில் பெரும் பங்கு வீட்டுக் கடனுக்குப் போக அவரிடம் மீதம் இருக்கும் தொகயில் அவர் சீவிப்பது கஸ்ட்டம்.அதனால் அரசாங்கம் வட்டி விகிதத்தைக் குறைவாகவே வைத்திருக்கும் அல்லது அது அரசியல் ரீதியாக அரசாங்கத்திற்கு பிரச்சினயாக இருக்கும்.பிருத்தானியப் பொருளாதரத்தின் எதிர்காலம் கேள்விக் குறியானது அது பெரும் பாலும் அன்னிய பண வருகையினாலும் ,வீட்டு விலயினால் உந்தப்பட்ட நுகர்பொருள் கொள்வனவுகளினாலுமே கொண்டு செல்லப் பட்டது.தற்போதய மந்தக நிலமயை ஈடு செய்வதற்காக அரசாங்கம் பெரும் முதலீட்டுத் திட்டங்களை கொண்டு வரவுள்ளது.மொதத்தில் பொருளாதார வளர்ச்சி என்பது மிகவும் கஸ்ட்டமான நிலமயே.பொருள் உற்பத்திகள் சீன முதலிய ஆசிய நாடுகளுக்க்கே சென்று விடுகின்றன.கணணி மற்றும் அது சார்ந்த வேலை வாஇப்புக்கள் இந்தியா முதலிய நாடுகளுக்கு சென்று விடுகின்றன. மேலும் வட கடலில் இருந்து பெறப்பட்ட எண்ணை உற்பத்தியும் குறைந்து வருகிறது.பொருளாதார ரீதியாக இது நெருக்கடிகளை உண்டாக்கலாம். ஆனால் லண்டனில் எந்த வித பயமும் இன்றி பல வீட்டு மனைகளை கடனுக்கு வாங்கி இருக்கும் ஈழத்தவரும் இந்தியரும் உண்டு.வீட்டு விலைகள் கடந்த சில வருடங்களுக்கு முன்னரே அசுர கதியில் ஏறிய படியால் இபோது இவர்களின் வீடுகளின் பெறுமதி பல மடங்கு அதிகம்,கடனுடன் ஒப்பிடுகையில். |