11-30-2005, 02:44 PM
சோபனா, நானும் கட்டுக்கதைகளை நம்புவதில்லை. ஆனால் இவர் எமது சொந்தக்காரர். அவரது தங்கை தீடீரென இறந்தபோது அவர்களுடன் நெருங்கிய குடும்பத்தவர்கள் எல்லோருக்கும் அந்த அதிர்ச்சியிலிருந்து விடுபட பல மாதங்கள் ஆகின. அதன் பிறகுதான் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. நான் அப்போது சிறு பையன். எனது அம்மாவும் மற்றவர்களும் பேசிக்கொண்டதிலிருந்துதான் நானும் அறிந்துகொண்டேன். இது கட்டுக்கதையல்ல என்பதை நான் இப்போதும் நம்புகிறேன்.

