11-30-2005, 06:59 AM
நடந்து வந்தது வேறு யாருமல்ல அதிபர் தான். மாணவர்களின் சிரிப்பைக் கேட்ட அவர் வகுப்பில் ஆசிரியார் ஒருவரும் இல்லை என்றா எண்ணத்தில் உள்ளே நுழைந்தவுடன் தான் சினிமா புத்தகத்துடன் நின்ற ஆறுமுக வாத்தியாரைக் கண்டார்.... ஓ மாஸ்டர் நீங்கள் நிற்கிறிர்களா? இவங்கடை சத்தத்தை கேட்டு ஓருவரும் இல்லை என்று இரண்டு சாத்து சாத்துவோம் என்று வந்தனான் என்றார்.. ஆறுமுக வாத்தியாருக்கு என்ன சொல்வது என்றே தெரியலை. அப்போது கிண்டல் மன்னன் தான் எழும்பி இல்ல சேர் ஆறுமுகம் சேர் உண்மையாக நாம் அனுபவித்து எழுதும் கவிதைக்கும் மற்றவர்களின் கவிதையை திருடி எழுதினால் எப்படி இருக்கும் என்பதைப்பற்றி நகைச்சுவையுடன் சொல்லி கொண்டிருந்தார் என்று சொன்னான். அவனின் பதிலைக்கேட்ட அதிபர் விஞ்ஞான வாத்தி ஏன் கவிதை எழுதுவது பற்றி பிள்ளைகளுக்கு படிபிக்கிறார் என்று நினைத்தபடியே திரும்பி போய் விட்டார். மீண்டும் கிண்டல் மன்னனின் கை உயர்ந்தது....

