12-04-2003, 06:07 PM
kuruvikal Wrote:கருத்துச் சுதந்திரம் மற்றவரின் வாழ்வுரிமையை பாதிக்காதவரை எல்லை கொள்ளலாம்....ஆனால் சிறிய ஒரு தாக்கமான கருத்தும் மற்றவரின் மனநிலைக்கேற்ப அவரின் வாழ்வுரிமையைப் பாதிக்கலாம் என்பதும் கவனிக்கத்தக்கது...!:?:
ஆனால் வைக்கப்படும் கருத்துக்கெல்லாம் கருத்தாளன் மட்டும் பொறுப்பேற்க முடியாது...காரணம் பல கருத்துக்கள் அவதானங்களில் இருந்து பிறப்பனவே தவிர முழுவதும் சுய சிந்தனையின் வழி வருவதில்லையே.....!
சந்தர்ப்பங்களுக்கும், சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்களும் கருத்தை பகர்பவருடன் கருத்துக்கான பொறுப்பை ஏற்க வேண்டும்....!

