11-29-2005, 09:28 PM
பாட்டி -
புனைக் கதைகள் பல படித்துரைப்பாள்
புத்தக எழுத்துக்கள் புரியாத வயதினிலே
நினைவுகளாய்ப் படிந்த இளவயது அனுபவமும்
நித்தம் நித்தம் சொல்லிச் சிரிப்பார்
அம்மா மெல்ல கோபம் கொள்கையிலே
'சும்மாயிரு சிறு பிள்ளைதானே' என்றதட்டுவாள்
அப்பா புருவமுயர்த்திப் பார்க்கும் வேளையிலும்
'சொப்புத்தானே, சிறுபெண்ணுக்கு' வாங்கினாலென்னென்பார்
'அத்தை வீடுதானே அவளும் வரட்டுமே' என்றெப்போதுமே
அவள் செல்கையிலெல்லாம் அழைத்துச் செல்வாள்
மெத்தை இருக்கை கொண்ட கண்ணாடிப் பேருந்தில்
மென்று கொண்டே போக ஏதாவது கிடைக்கும்.
சுருங்கிய தோலென்றாலும்-அம்மாவைப் பிறர் வீட்டிலும்
நெருங்கியது போலவே இருக்கும் அவளரவணைப்பில்.
ஆனாலும் செல்லம் கொஞ்சம் மறைந்து போகும் அடுத்தவர் வீட்டிலே
அம்மாவும் அப்பாவுமாய் அவளே அதட்டுவாள்.
இதுதான் இப்படத்திலிருக்கிறாளே
உன் அம்மாவின் பாட்டி என்றால்
'இல்லை. விடுமுறைக்கு வீட்டுக்குப் போனால்
பொம்மை வாங்கித்தருவாளே அவள்தான் பாட்டி' என்கிறாள்
'தனிவீடு இல்லாமல் தன்மகன் வீட்டில் தங்குவாளா பாட்டி'
என்றே வியக்கும்
என் மகள்!