11-29-2005, 07:44 PM
அதனை நடுங்கும் கைகளில் வாங்கிப் பார்த்த ஆறுமுகம் ஆசிரியருக்கு அப்போதுதான் இதயத்தின் படபடப்பு அடங்கியது. கிண்டல் மன்னன் மூலப்பிரதி என்று நீட்டியதை வாங்கிப்பார்த்தபோது அது அண்மையில் வெளிவந்த ஒரு சினிமா பாடல் புத்தகம் என்பதை அவர் அப்போதுதான் புரிந்துகொண்டார். மீண்டும் எல்லா மாணவர்களும் ஒரே நேரத்தில் உரத்துச் சிரித்தனர். கிண்டல் மன்னன் தனது பட்டப் பெயருக்கேற்ப தன்னைக் கிண்டல் செய்கிறான் என்பதை ஆசிரியர் புரிந்துகொண்டார். அப்போது வகுப்பறையின் முன்னால் அவசரமாக யாரோ நடந்துவரும் சத்தம் கேட்டது.

