11-29-2005, 07:01 PM
எனது நெருங்கிய இனத்தவர் ஒருவருக்கு குழந்தைப் பிரசவத்தின்போது ஏற்பட்ட சிக்கல்களினால் அவர் இரண்டு மணி நேரம்வரை மயக்க நிலையிலே இருந்தார். டாக்டர்களும் தாதிமார்களும் அவரை மயக்கம் தெளிவிப்பதற்கு பலவழிகளில் முயற்சி செய்தார்கள். இறுதியில் மயக்கம் தெளிந்து எழுந்தபோது, தான் இதுவரை நேரமும் சில வருடங்களுக்கு முன்னர் குழந்தைப் பிரசவத்தின்போது இவ்வுலகை விட்டுப்பிரிந்த தனது தங்கையுடன் ஓர் அமைதியான வெளியில் இரு நாற்காலிகளில் அமர்ந்துகொண்டு; பேசிக்கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டார். தாங்கள் மட்டுமே அங்கே இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
பிறந்ததிலிருந்து ஒன்றாக வளர்ந்த தங்கையைக் கண்டு பேசியது அவருக்கு ஒரு மனநிறைவைக் கொடுத்திருந்தது. பல நாட்களாக அதனைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். இப்போது பல வருடங்களாகிவிட்டன. அவர் தற்போதும் நன்றாகவே இருக்கின்றார்.