Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
`Col.' Karuna for Indian mediation
#5
அந்த முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதேசத் தலைவர் குறித்து செய்தித்தாள்கள் மற்றும் இணையங்கள் வெளியிடும் செய்திகள் எனக்கு உண்மையில் வியப்பினை வரவழைக்கும்.

காரணம்

1) இவருக்கு கேணல் தரத்தை வழங்கியது விடுதலைப் புலிகள் அமைப்பு. அந்தனை அவர் இன்றுவரை தனது பெயரின் முன் போட்டுக்கொள்வது எதனைக் காட்டுகிறது? சுயமாக இந்தத் தரத்தை அல்லது இதனை விடய உயர் பதவிகளை அடையக்கூடிய ஆற்றல் இவருக்குக் கிடையாது என்பதைத்தானே!

2) இவருடைய இயக்கத்தின் பெயரையே சுயமாகச் சிந்தித்து புதிதாக உருவாக்கத் தெரியாதவராகத்தானே இவர் இருக்கிறார்?

3) இவருக்கென (அல்லது இருப்பதாகச் சொல்லப்படும் இவரது அமைப்புக்கென) ஒரு தனியான சீருடையைக் கூட வடிவமைக்கத் தெரியாது முன்னர் தாம் இருந்த அமைப்பின் சீருடையிலேயே தோன்றுவது எதனைக் காட்டுகிறது? இவரது ஆளுமையின் எல்லை எது என்பதையா

மொத்தத்தில் மேலே சுட்டிக்காட்டிய விடயங்களில் இருந்து இவர் ஒரு '0" என்பதும் பிரபாகரன் என்ற '1" ற்கு முன்னால் இருக்கும்போதுதான் அதற்கு மதிப்பு என்பதும் வெள்ளிடைமலையாகத் தெரிகிறதே?

இவரா தமிழ்மக்களுக் விடிவைக்காட்டப்போகிறார். முதலில் தனக்கு விடிவுதேடிக்கொண்டுஇ சுயமாக ஒரு பாதையை அமைத்துக்கொண்டு பின்பு மக்களை வழிநடத்துவது பற்றி அவர் கதைக்கலாம்.

இன்னும் சில வினாக்கள் என்னுள் எழுவது வழக்கம்

4) இவரது அந்தத் தராதரத்தை விடுதலைப் புலிகள் அமைப்பு மீளப்பெற்ற பின்னரும் இவரை 'கேணல்" என்று அடையிட்டு அழைப்பது எதனைக் காட்டுகிறது?

5) தற்போது விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள கேணல்கள் வெளியிடும் கருத்துகள் இதே பத்திரிகைகளில் வெளியாகும்போது இவ்வாறு அவர்களது பெயர்களுக்கு முன்னால் 'கேணல்" என்று குறிப்பிடப்படாதது ஏன்?

6) விடுதலைப் புலிகள் அமைப்பு வழங்கும் பதவிநிலைகள் சட்டவிரோதம். அதனால் குறிப்பிடுவதில்லை என்பது வினா 5 ற்கான பதிலாயின் மேலே விவரித்த நபரின் முன்னால் போடும் கேணல் பதவிநிலை எந்த நாட்டின் சட்டபூர்வ இராணுவத்தினால் வழங்கப்பட்டது என்று சம்பந்தப்பட்ட ஊடகத்தினர் அறியத்தர முன்வருவார்களா?

<b>அன்புடன் திரு</b>
Reply


Messages In This Thread
[No subject] - by Birundan - 11-28-2005, 12:52 PM
[No subject] - by tamilini - 11-28-2005, 04:59 PM
[No subject] - by வியாசன் - 11-28-2005, 11:27 PM
[No subject] - by thiru - 11-29-2005, 01:06 AM
[No subject] - by kurukaalapoovan - 11-29-2005, 11:23 AM
[No subject] - by Danklas - 11-29-2005, 02:48 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)