Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆரோக்கிய வாழ்வுக்கு யோகாசனம்
#29
<b><span style='color:green'>பூரண அமைதி- ஆனந்தத்தை தரும் ஆசனங்கள்

மனிதர்களுக்கு அமைதியையும், நிலைத்த ஆனந்தத்தையும் கொடுக்கும் ஆசனங்களே பவன முக்தாசனம். அவர்களை ஆரோக்கியமான பாதைக்கு அழைத்துச் செல்பவை. ஆசனங்களைப் பற்றி ஒன்றுமே தொpயாத கத்துக்குட்டிகள் கூட இந்த ஆசனத்தை செய்யலாம். நல்ல பலன் கொடுக்கும். என்ன நோய் வந்தாலும் காப்பாற்றும். பவன முக்தாசனம் உடம்பை சிக்கென்று இளமையாக வைத்திருக்கும்.

பவன முக்தாசனத்தை 45 நிலைகளாக பிரித்துக் கொண்டு செய்ய வேண்டும். அதில் ஒவ்வொரு வகையையும் குறைந்து 3 அல்லது 4 முறை செய்தால் போதுமானது. இந்த 45 வகையான ஆசனங்களையும் செய்து வரும் மனிதர்கள் தெளிந்த சிந்தனை, பூரண நலம், முகப்பொலிவுடன் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று தமிழ் யோகாசன நூல்கள் கூறுகின்றன. இது தவிர ஆஸ்துமா, இதய நோய்கள், நீரழிவு, மூலம், தசைவலிகள் உள்ளிட்ட நோய்களையும் இந்த ஆசனம் அறவே அகற்றி விடுகிறது.

45 வகை பவன முக்தாசனங்களையும் ஒழுங்காக செய்யும் பட்சத்தில் உடம்பில் உள்ள எல்லா நரம்பு மண்டலங்களும், பித்த நாடி, கபநாடி, வாத நாடி முதலான அனைத்து நாடிகளும் சீரடைந்து ஒழுங்காக மனிதனுக்கு அடங்கி வேலை செய்வதானால் ரத்த ஓட்டம் சீராக அமையும். ஆகையால் சாதாரண மனிதர்களுக்கு மிகச்சிறந்த பலன் கிடைக்கும்.

என்னடா இது, பவன முக்தாசனத்தை பற்றி இவ்வளவு தூரம் சொல்கிறார்களே* ஆசனம் செய்யும் முறை பற்றி சொல்லவில்லையே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இதோ பவன முக்தாசனம் செய்யும் முறை.
<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/apr/bavan_4.jpg' border='0' alt='user posted image'>
1. சாதாரணமாக காலை நீட்டியபடி உட்கார்ந்து கொள்ளுங்கள்

2. பிறகு கால் விரல்களை மட்டும் முன்னால் வளையுங்கள்

3. கால் விரல்களை மட்டும் பின்னால் வளைக்கவும்

4. கால் பாதங்களை முன்னால் வளையுங்கள்

5. கால் பாதங்களை பின்னால் வளைக்கவும்

6. வலதுக்காலை இடது தொடை மீது வைத்து பாதத்தை மட்டும் கைகளால் முன்னும் பின்னும் மெதுவாகத் திருகி விடுங்கள். அதேப் போன்று வலக்காலையும் திருகி விடவும்.

7. கால்களை இடது பக்கமும், வலது பக்கமும் மெதுவாகத் திருப்பவும்

8. இடதுக் காலையும், வலதுக் காலையும் மாறி மாறி மெதுவாக பிருஷ்ட பாகம் நோக்கி இழுக்கவும்

9. கைகளைத் தொடையில் அண்டக் கொடுத்துக் கொண்டு கால்கள் ஒவ்வொன்றையும் மெதுவாக மேலே மாறி மாறி தூக்கி இறக்குங்கள்

10. கால்களை அகலமாக விரித்துக் கொண்டு கைகளை பக்கவாட்டில் நீட்டி இடது கால் பெருவிரலை வலதுக் கையால் தொடுங்கள்

11. கைகளை நேராக நீட்டி, கை விரல்களைப் பின் பக்கமாக வளைக்கவும்

12. விரல்களை இறுக மூடுங்கள். இப்போது உடலின் மற்ற பாகங்கள் தளர்வான நிலையில் இருக்கட்டும்

13. இரு கைகளையும் நீட்டிய நிலையில் முன்னும் பின்னும் நன்றாக சுற்றவும்.

14. விரல்களை மூடியவாறு (மணிக்கட்டு வரை) முன்னும் பின்னும் வளைக்கவும். பின்னர் பக்கவாட்டில் சுற்றவும்

15. கை விரல்களை நன்றாக மூடிக் கொண்டு முன் பக்கமும், பின் பக்கமும் மடக்கி நீட்டவும்.

16. கைகளை, விரல்களை மூடிய நிலையிலேயே மடக்கி தோள் பட்டை பக்கமாக முன்னும் பின்னும் தள்ளவும்

17. கைகளை மூடி மடக்கிய நிலையிலேயே உடலை இப்போது பின்னே சாய்க்கவும்

18. கைகளை முன்னால் நீட்டி முன்புறமாகக் குனிந்திடுங்கள்.

19. உடம்பை இடது பக்கமும், வலது பக்கமும் வளைத்துக் கொள்ளுங்கள்

20. கழுத்தை வலதுப் பக்கம் திருப்புங்கள்

21. கழுத்தை முன் பக்கமும், பின் பக்கமும் சாதாரணமாக வளைக்கவும்,
[b]அவசரப் பட வேண்டாம். நிதானமாக செய்தால் போதும். எல்லா ஆசனங்களையும் மூச்சிழுத்தபடியே செய்யுங்கள்</b>

22. தலையை பின்னால் வளைத்து மூச்சை உள்ளே இழுக்கவும். அதே நிலையில் 2 நொடிகள் இருந்திடுங்கள்.

23. தலையை இப்போது நிதானமாக முன்புறம் வளைத்து மூச்சை வெளியிடவும். அப்படியே 2 நொடிகள் இருக்கவும்.

24. கைகளை முன்புறம் நீட்டியபடி கால்களை (ஒரு காலை முன்பக்கமும், மறுகாலை பின்பக்கமும் மடக்கி) மூச்சை வெளியிட்டு, தரையில் படுக்கவும்

25. ஒரு காலை மடக்கி மறுகாலை நீட்டி, கைகளை நீட்டிய நிலையில் மூச்சை வெளியே விட்டபடியே விரிப்பின் மேலே படுத்துக் கொள்ளுங்கள்

26. இரு கால்களையும் முன்புறம் மண்டியிட்டு அமர்ந்து கொண்டு கைகளை மேலே உயர்த்திக் கொண்டே மூச்சை வெளியே விட்டவாறு முன்புறம் குனிந்து படுக்கவும். பின் மூச்சை உள்ளே இழுத்தவாறு அதே நிலையில் எழுந்திருங்கள்.

27. கால்களை பின்னால் நீட்டி கைகளைப் பக்கத்தில் வைத்து, தலையை பின்னால் வளைத்து மூச்சை உள்ளே இழுக்கவும்

28. குழந்தை தவழுவது போல கைகளையும், முழங்காலையும் அமைத்துக் கொண்டு மூச்சை வெளியே விட்ட நிலையில் முதுகெலும்பை சற்றே வளைக்கவும்

29. உடலை அமைத்துக் கொண்டு மூச்சை வெளியே விட்டபடியே வயிற்றை உள்ளிழுத்துக் கொண்டு முதுகெலும்பை மேல்புறமாக வளைக்கவும்

30. கால்களை ஒரு சேரத் தூக்கி மூச்சை தம் கட்டுங்கள்.

31. கால்களை தூக்கி நிலையில் கால் பெருவிரல் கைகளில் இறுகப் பிடித்து படுக்கவும்

32. வலது காலை மடக்கி அதைக் கைகளால் வயிற்றுடன் இறுகக் கட்டவும். பின்னர் மூச்சை வெளி யிடவும். அதே போல இடதுக் காலையும் மடக்கி கட்டவும்

33. இரு கால்களையும் முன்பு செய்தது போல சேர்ந்தே வயிற்றுடன் கைகளால் இறுகக் கட்டவும். (இதனால் தொந்தி கரையும்)
<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/apr/bavan_3.jpg' border='0' alt='user posted image'>
34. பிறகு குத்திட்டு உட்கார்ந்த நிலையில் கால்களைப் படத்தில் காட்டியபடி இறுக கட்டவும். இப்போது மூச்சை வெளியே விடவும்

35. மண்டியிட்டு அமர்ந்த நிலையில் கால் மூட்டுக்களின் மேல் கைகளை வைத்து (தொடைகளை சற்று அகட்டி வைத்து கொள்ளுங்கள்) மூச்சை வெளியிட்ட நிலையில் வயிற்றை மெதுவாக எக்கி எக்கி விடவும் ( வயிற்று சதைகள் இளக்கம் கொடுக்கும்)

36. மண்டியிட்டு உட்கார்ந்த நிலையில் நாக்கை முடிந்த அளவு வெளியே நீட்டிப் பின்னர் உள்ளே இழுக்கவும். ( இதற்கு 3 நொடிகள் எடுத்துக் கொள்ளலாம்)

37. மண்டியிட்டு உட்கார்ந்து கைப் பாதங்களைத் தரையில் ஊன்றி, தலையைப் பின்னால் வளைத்து மூச்சை உள்ளே இழுக்கவும். பிறகு தலை நிமிர்த்தி மூச்சை வெளியே விடவும்.
<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/apr/bavan_2.jpg' border='0' alt='user posted image'>
38. அதே நிலையில் (மண்டியிட்டு) அமர்ந்து கைகளைக் கும்பிட்டபடி தலையை மட்டும் பின்னால் வளைத்து மூச்சை வெளியே விடவும்

39. மண்டியிட்டு அமர்ந்து தலையை நேராக நிமிர்த்தி மூச்சை வெளியே விட்டபடி கைகளைக் கீழே தாழ்த்தி வைக்கவும்

40. மண்டியிட்ட அதே நிலையில் கைகளை உயர்த்தியபடி மூச்சை உள்ளே இழுக்கவும்

41. தலையை மட்டும் குனிந்து கைகளைக் கீழே இறக்கி மூச்சை வெளியே விடவும்

42. குனிந்தபடி நின்று மூச்சை வெளியே விட்டபடி கைகளால் தரையைத் தொடவும். பின்பு மூச்சை உள்ளே இழுத்தவாறு நேராக நிமிரவும்
<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/apr/bavan_1.jpg' border='0' alt='user posted image'>
43. வலது காலில் நின்று கொண்டு கைகளை உயரேத் தூக்கி கும்பிடவும் (நெற்றிப் பொட்டில் மனதை ஒருமுகப்படுத்தி ஓம் என்று ஒருநிலைப்படுத்துங்கள். பிறகு இடது காலை மடக்கி குதிகாலை ஆசன வாயில் படும்படி மடக்கி வைக்க வேண்டும். பின்பு இடதுக் காலில் நிற்கவும்

44. வலது காலில் நின்று கொண்டு கைகளை உயர்த்தி கும்பிட்ட நிலையில் நிற்கவும், மூச்சிழுக்கவும். பின்பு இடது காலை கீழிறக்கி வலது தொடையின் மீது அழுத்தி மடக்கி வைத்துக் கொள்ளுங்கள். மூச்சை வெளியிட்டவாறே பிறகு காலை ஊன்றி கையைக் கீழே மெதுவாக இறக்கவும். பின்பு இதேபோல இடது காலில் நில்லுங்கள்.

45. முதலில் குப்புறப் படுத்துக் கொள்ளுங்கள். பிறகு மூச்சை முழுவதும் வெளியே விட்ட நிலையில் உடல் முழுவதையும் நன்றhக தளர்;த்தி விட்டுக் கொண்டு இளக்கி அழகுற இளைப்பாறவும். இந்த கடைசி ஆசனத்தை அனைவரும் அவசியம் செய்ய வேண்டும்.

<b>மேற்கண்ட அனைத்து வகையான ஆசனங்களை செய்யும் போது உடலின் எல்லா பாகங்களையும் தளர்வாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.</b>

இந்த 45 வகை ஆசனங்களையும் செய்வதற்கு 25 நிமிடங்கள் வரை ஆகலாம். இந்த ஆசனத்தை பெண்களும், சிறுவர்களும் எளிதாக செய்யலாம்.</span>

நன்றி: தினகரன்
Reply


Messages In This Thread
[No subject] - by samsan - 10-31-2005, 05:44 PM
[No subject] - by samsan - 10-31-2005, 05:45 PM
[No subject] - by samsan - 10-31-2005, 05:47 PM
[No subject] - by RaMa - 10-31-2005, 06:08 PM
[No subject] - by Rasikai - 10-31-2005, 07:41 PM
[No subject] - by AJeevan - 11-09-2005, 02:50 PM
[No subject] - by Rasikai - 11-09-2005, 07:09 PM
[No subject] - by Vishnu - 11-10-2005, 03:00 PM
[No subject] - by AJeevan - 11-12-2005, 08:30 PM
[No subject] - by AJeevan - 11-15-2005, 12:16 AM
[No subject] - by RaMa - 11-16-2005, 02:11 AM
[No subject] - by Rasikai - 11-16-2005, 08:59 PM
[No subject] - by AJeevan - 11-18-2005, 11:34 PM
[No subject] - by vasisutha - 11-19-2005, 12:07 AM
[No subject] - by AJeevan - 11-19-2005, 06:21 PM
[No subject] - by அனிதா - 11-19-2005, 07:48 PM
[No subject] - by கீதா - 11-19-2005, 09:48 PM
[No subject] - by ப்ரியசகி - 11-20-2005, 08:23 PM
[No subject] - by AJeevan - 11-20-2005, 09:53 PM
[No subject] - by paandiyan - 11-21-2005, 03:35 AM
[No subject] - by AJeevan - 11-22-2005, 01:17 AM
[No subject] - by AJeevan - 11-22-2005, 11:23 PM
[No subject] - by AJeevan - 11-23-2005, 12:01 AM
[No subject] - by AJeevan - 11-23-2005, 03:30 PM
[No subject] - by Rasikai - 11-23-2005, 11:36 PM
[No subject] - by RaMa - 11-24-2005, 07:27 AM
[No subject] - by AJeevan - 11-24-2005, 09:46 PM
[No subject] - by AJeevan - 11-28-2005, 02:05 PM
[No subject] - by AJeevan - 12-04-2005, 11:38 PM
[No subject] - by AJeevan - 12-18-2005, 11:54 PM
[No subject] - by Rasikai - 12-19-2005, 04:01 PM
[No subject] - by AJeevan - 12-22-2005, 10:29 PM
[No subject] - by Eelathirumagan - 12-23-2005, 02:49 AM
[No subject] - by Eelathirumagan - 12-23-2005, 02:49 AM
[No subject] - by Eelathirumagan - 12-23-2005, 02:50 AM
[No subject] - by RaMa - 12-23-2005, 05:40 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)