11-28-2005, 01:31 AM
கணவனை இழந்தேன்
கடிமலர் திலகமும் இழந்தேன்
கைம்பெண் ஆனேன்.
மணவினைப் பயனால் வந்த
மக்களை இழந்தேன்
மாவீரர் ஆனார்.
துணை எனக்கில்லை என்ற
துயர் எனக்கில்லை
தமிழிச்சி நானே.
இணையிலா எம் மண்ணின்
எதிரியைச் சாட என்கையில்
துப்பாக்கி கொண்டேன்.
படத்தைப் பார்த்தேன்
பிறந்த கவிதையை எழுதினேன்.
போட்டிக்காக எழுதாத பாடல் இது.
கடிமலர் திலகமும் இழந்தேன்
கைம்பெண் ஆனேன்.
மணவினைப் பயனால் வந்த
மக்களை இழந்தேன்
மாவீரர் ஆனார்.
துணை எனக்கில்லை என்ற
துயர் எனக்கில்லை
தமிழிச்சி நானே.
இணையிலா எம் மண்ணின்
எதிரியைச் சாட என்கையில்
துப்பாக்கி கொண்டேன்.
படத்தைப் பார்த்தேன்
பிறந்த கவிதையை எழுதினேன்.
போட்டிக்காக எழுதாத பாடல் இது.

