Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருத்துச்சுதந்திரத்தின் எல்லை என்ன?
#3
[Image: people1.gif][size=16]கருத்துச் சுதந்திரம் என்பதை விட , பொதுவான ஒரு இடத்துக்கு உரிய முறையில் எழுதும் நாகரீகம் என்று நினைத்தால் அது எவ்வளவோ நல்லது செய்யும்.

ஒரு மனிதன், தனது வீட்டில் இருப்பது போல வெளியில் நடமாடுவதில்லை.அது போல்தான் எழுதும் இடங்களும்..............

இவை தனிப்பட்ட ஒரு மடலாக அல்லது தொலைபேசி உரையாடலாக இருக்குமானால் அதில் தமது சொந்தப் பிரச்சனைகளை எப்படி வேண்டுமானாலும் எழுதி தீர்த்துக் கொள்ளலாம். அது ஒன்றும் சம்பந்தப் பட்ட எவரையும் பாதிக்காது. (இங்கு எழுதுபவரையும் சேர்த்துதான் குறிப்பிடுகிறேன்.)

இது வெளியே தெரியாத கணவன்-மனைவி விரிசல்கள் போல என்று சொல்லலாம்.சில வீடுகளுக்குள் நடைபெறும் உள் பிரச்சனைகளை வெளியே காட்டிக் கொள்ளாமல் குடும்பம் நடத்துவது போன்றது. சில வேளை இது ஒரு நடிப்பாகக் கூட தெரியலாம். ஆனால் இருவருக்குள் தீர வேண்டிய ஒரு பிரச்சனையை தெருவுக்கு கொண்டு வந்து தீரா பகையாக்கிக் கொண்டவர்கள் போன்ற நிலைக்கு தம்மை ஆக்கிக் கொள்ளக் கூடாது.

தனிப்பட்ட ரீதியில் ஒருவரது மனதை பாதிப்படையச் செய்ய,ஒருவரை கிளர்ந்தெழச் செய்யும் கருத்துகளை மறைமுகமாக வைத்தாலும் அது ஒரு நாள் எழுதுவோரைத் தாக்குவது உறுதி.

இவற்றை வெளியில் இருந்து பார்ப்போர் ,ஒருவர் மேல் கொண்ட காழ்ப்புணர்ச்சி, பொறாமையால் ஏற்பட்ட சண்டை என்றுதான் காண்பார்கள். இது ஒரு போதும் ஒருவர் முன் வைக்கும் நியாயமான கருத்தாக கணக்கிட மாட்டார்கள்.

அடுத்தவன் வீட்டுச் சண்டையில் மகிழ்ச்சியடையும் ஒருவருக்கு வேண்டுமானால் இப்படியான எழுத்துகள் தற்காலிக சுகமாகலாம். ஆனால் ஒரு நாள் இவர்களது கருத்தை அடுத்தவர் , வாசிக்காத காலம் வரும் போதுதான் அதற்கான பிரதி பலனை அவர்கள் உணருவார்கள். அது அவர்களை நிச்சயம் வருத்தும்.

கருத்துகளை எழுதும் போது கூட , எதிரியாக இருந்தாலும் , அவரது மனது புண்படாது நமது கருத்திலும் நியாயம் இருக்கிறது என்ற விதத்தில் கருத்துகள் முன் வைக்கப் பட்டால் அதுதான் வெற்றி.

எனக்கு சில ஆசான்கள் சொல்லித் தந்த ஒரு சில துளிகளை முன் வைத்துள்ளேன்.அதை விரும்புவோர் மட்டும் யோசித்து முடிவெடுக்கலாம்.

________________________________________________அஜீவன்

[size=10]என்னால் செய்ய முடியாததை அடுத்தவன் செய்கிறானே என கோபப்படாதே. அதுபோல ஆவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று யோசி. பின்னர் செயலாற்று. உன்னை நீ வெல்வாய். பின்னர் உலகத்தையே நீ வெல்வாய்.
-யாரோ
Reply


Messages In This Thread
[No subject] - by Paranee - 12-04-2003, 05:40 AM
Re: கருத்துச்சுதந்திரத - by AJeevan - 12-04-2003, 08:23 AM
[No subject] - by anpagam - 12-04-2003, 01:08 PM
[No subject] - by anpagam - 12-04-2003, 01:18 PM
[No subject] - by kuruvikal - 12-04-2003, 02:20 PM
[No subject] - by vasisutha - 12-04-2003, 03:37 PM
[No subject] - by vanathi - 12-04-2003, 06:07 PM
[No subject] - by kuruvikal - 12-04-2003, 08:11 PM
[No subject] - by vanathi - 12-04-2003, 10:23 PM
[No subject] - by anpagam - 12-04-2003, 11:42 PM
[No subject] - by vasisutha - 12-05-2003, 12:35 AM
[No subject] - by shanmuhi - 12-05-2003, 06:56 AM
[No subject] - by P.S.Seelan - 12-05-2003, 12:25 PM
[No subject] - by mohamed - 12-05-2003, 03:53 PM
[No subject] - by vanathi - 12-05-2003, 05:00 PM
[No subject] - by shanmuhi - 12-07-2003, 11:19 AM
[No subject] - by yarl - 12-07-2003, 10:15 PM
[No subject] - by vasisutha - 12-07-2003, 10:20 PM
[No subject] - by yarl - 12-09-2003, 10:54 AM
[No subject] - by vasisutha - 12-09-2003, 04:03 PM
[No subject] - by Guest - 12-18-2003, 08:31 PM
[No subject] - by anpagam - 12-19-2003, 12:11 AM
[No subject] - by tamilini - 02-11-2004, 12:38 PM
[No subject] - by pepsi - 02-12-2004, 07:56 AM
[No subject] - by rajani - 02-13-2004, 02:54 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)