11-26-2005, 02:48 PM
தாய் நான்
தமிழ் தாய் நான்
பத்து மாதம் சுமந்தேன்
என் கண்ணின் மணிகளாய் ஐவரை
சிறுவயதில் காலன் பறித்து
கொண்டது ஒருவன்
பள்ளி செல்ல வேண்டிய வயதில்
இந்திய ராணுவ நாய்களின்
கொட்டத்தை பார்த்தவன்
என் பார்த்தீபன்
சொல்லிவிட்டு தான் சென்றான்
"தாயே உன்னை போலவே
நேசிக்கிறேன் தமிழீழ தாயை
சென்று வருகீறேன்" என கூறி
கண்களில் நீர் வழிந்த போதும்
பெற்ற மகனின் வீரம்
கண்ட பின் தயக்கமேது
ஒரு தாய்க்கு
போனவன் போர்வீரனாகி
பின்னர் மாவீரனாகிவிட்டான்
என் தலைமகன்
தாய்நாட்டை காத்தவன்
அண்ணனின் வாரிசாய் அடுத்தவன்
களம் சென்றான்
இடையே வீடு வரும் அண்ணன் பார்த்து
தன்னையும் இணைத்து கொண்டான்
என் செல்ல மகன்
அவன் பிரிவை தாங்குவது?
பெத்த மனம் பித்தல்லவா
இருந்தாலும் என் மனம்
பெருமை தான் கொண்டது
அடுத்தடுத்து சமரிலே
அண்ணனும் தம்பியும்
மூத்தவன் மடிசேர
அழுது புரளவில்லை
நான் மனமுடைந்து
போகவில்லை
மூத்தவன் தொடங்கிய
வேள்வி இறுதி நேரத்தில்
நின்று போகலாமா?
என் கண்மணிகள்
சிந்திய குறுதி?
உன் அண்ணன்களை சாய்த்த
அரக்கர்களை அடியோடு அழித்துவா
சொல்லிவிட்டேன் எஞ்சி இருந்தவனுக்கு
தாய் சொல்லை தட்டாத மகன் அவன்
ஊரிலே ஏய்த்தார்கள்
"கிழவிக்கென்ன விசரா என்று"
என் உடம்பில் ஓடுவது
தமிழ் ரத்தம்
ஊருக்காக எதற்கு நான்
போட வேண்டும் வெளி வேசம்?
நான்கு குழந்தைகளுடன்
என் கணவர் கயவர்களால்
அழிந்த போது இவர்களா வந்தார்கள்?
எமக்கென்ன என நாங்கள்
அனைவரும் நினைத்துவிட்டால்?
30 வருடங்களுக்கு முன்
எம் தலைவன் நினைத்திருந்தால்?
இன்று நாம் எங்கு?
நினைத்து பார்க்கையில்
மனம் பொங்கி எழுகிறது
நால்வரை கொடுத்தது
போதுமா? இல்லை
நான் தவறு செய்துவிட்டேன்
இன்னும் சில வீரர்களை
பெறாமலே தவறு செய்துவிட்டேன்
இதோ எடுத்திட்டேன் ஆயுதம்
அன்னையால் அன்பை காட்டவும் முடியும்
அரக்கனை அழிக்கவும் முடியும்
தாய் நான் தமிழ் தாய் நான்
வழிகாட்ட நம் தலைவன் இருக்கிறான்
வாருங்கள் ஒன்றாவோம் தமிழர்களாய்
வாருங்கள் ஒன்றாவோம் தமிழர்களாய்......
தூயா
27/11/05
தமிழ் தாய் நான்
பத்து மாதம் சுமந்தேன்
என் கண்ணின் மணிகளாய் ஐவரை
சிறுவயதில் காலன் பறித்து
கொண்டது ஒருவன்
பள்ளி செல்ல வேண்டிய வயதில்
இந்திய ராணுவ நாய்களின்
கொட்டத்தை பார்த்தவன்
என் பார்த்தீபன்
சொல்லிவிட்டு தான் சென்றான்
"தாயே உன்னை போலவே
நேசிக்கிறேன் தமிழீழ தாயை
சென்று வருகீறேன்" என கூறி
கண்களில் நீர் வழிந்த போதும்
பெற்ற மகனின் வீரம்
கண்ட பின் தயக்கமேது
ஒரு தாய்க்கு
போனவன் போர்வீரனாகி
பின்னர் மாவீரனாகிவிட்டான்
என் தலைமகன்
தாய்நாட்டை காத்தவன்
அண்ணனின் வாரிசாய் அடுத்தவன்
களம் சென்றான்
இடையே வீடு வரும் அண்ணன் பார்த்து
தன்னையும் இணைத்து கொண்டான்
என் செல்ல மகன்
அவன் பிரிவை தாங்குவது?
பெத்த மனம் பித்தல்லவா
இருந்தாலும் என் மனம்
பெருமை தான் கொண்டது
அடுத்தடுத்து சமரிலே
அண்ணனும் தம்பியும்
மூத்தவன் மடிசேர
அழுது புரளவில்லை
நான் மனமுடைந்து
போகவில்லை
மூத்தவன் தொடங்கிய
வேள்வி இறுதி நேரத்தில்
நின்று போகலாமா?
என் கண்மணிகள்
சிந்திய குறுதி?
உன் அண்ணன்களை சாய்த்த
அரக்கர்களை அடியோடு அழித்துவா
சொல்லிவிட்டேன் எஞ்சி இருந்தவனுக்கு
தாய் சொல்லை தட்டாத மகன் அவன்
ஊரிலே ஏய்த்தார்கள்
"கிழவிக்கென்ன விசரா என்று"
என் உடம்பில் ஓடுவது
தமிழ் ரத்தம்
ஊருக்காக எதற்கு நான்
போட வேண்டும் வெளி வேசம்?
நான்கு குழந்தைகளுடன்
என் கணவர் கயவர்களால்
அழிந்த போது இவர்களா வந்தார்கள்?
எமக்கென்ன என நாங்கள்
அனைவரும் நினைத்துவிட்டால்?
30 வருடங்களுக்கு முன்
எம் தலைவன் நினைத்திருந்தால்?
இன்று நாம் எங்கு?
நினைத்து பார்க்கையில்
மனம் பொங்கி எழுகிறது
நால்வரை கொடுத்தது
போதுமா? இல்லை
நான் தவறு செய்துவிட்டேன்
இன்னும் சில வீரர்களை
பெறாமலே தவறு செய்துவிட்டேன்
இதோ எடுத்திட்டேன் ஆயுதம்
அன்னையால் அன்பை காட்டவும் முடியும்
அரக்கனை அழிக்கவும் முடியும்
தாய் நான் தமிழ் தாய் நான்
வழிகாட்ட நம் தலைவன் இருக்கிறான்
வாருங்கள் ஒன்றாவோம் தமிழர்களாய்
வாருங்கள் ஒன்றாவோம் தமிழர்களாய்......
தூயா
27/11/05
[b][size=15]
..
..

