Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பனிப்பாறைகள் உருகுவதால் உலகின் சிலபகுதிகள் மூழ்கும் ஆபத்து!
#7
<b>ஓசோன் படலத்தில் ஓட்டை: பூமி வெப்பம் உயர்வால் கொட்டுது புயல் மழை- அதிர்ச்சி தரும் அறிவியல் தகவல் </b>

ஒரு வருடம் கூட சரியாக மழை பெய்ய மாட்டேங்கிறதே என்று இவ்வளவு காலமும் நாம் புலம்பி கொண்டிருந்தோம்.

ஆனால் இந்த ஆண்டு நல்ல மழை பெய்து இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது இப்போது எல்லை மீறி சென்று அவை துன்ப அதிர்ச்சியாக மாறி இருக்கிறது.

ஏன் இப்படி மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டிருக்கிறது. வாழ்நாளில் இப்படி ஒரு மழையை நான் பார்த்தது இல்லையே வரலாறு காணாத மழையாக அல்லவா இருக்கிறது என்று தான் ஒவ் வொருவரும் புலம்பிக் கொண் டிருக்கிறார்கள்.

இப்படி அளவுக்கு அதிகமாக மழை கொட்டுவது தமிழ் நாட்டில் மட்டும் அல்ல. உலகம் முழுவதுமே இதே நிலைதான் ஏற்பட்டு இருக்கிறது. கேதரீனா, ரீட்டா, வில்மா என அமெரிக்காவை அடுத்தடுத்து புயல் தாக்கி வெள்ளக்காடாக்கியது. இந் தியாவில் பீகாரிலும், மும்பையிலும் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டு திக்கு முக்காட வைத்தது. இப்போது தமிழ்நாடு அதன் பிடியில் சிக்கி இருக்கிறது.

இயற்கையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு விட்டதா? இதனால்தான் இப்படி மழை கொட்டுகிறதா? என்று கேள்விகள் எழுந்து விஞ்ஞானிகள் மண்டையை குடைந்து கொண்டிருந்தது.

அமெரிக்க விஞ்ஞானிகள் இதுபற்றி ஆய்வு நடத்திய போது அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன.

நாம் பயன்படுத்தும் எரி பொருட்களினால் காற்று மண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட்டு சூரியனின் வெப்பம் பூமியை அதிகமாக தாக்குவதாக ஏற்கனவே விஞ்ஞானிகள் ஆராய்ந்து சொல்லி இருந்த னர். இதன் காரணமாக அண்டார்டிகாவில் உள்ள பனி படிவங்கள் மற்றும் இமயமலை போன்ற பகுதிகளில் படிந்திருக்கும் பனிகள் உருகி கடல் மட்டம் உயரும். இதனால் பல தீவுகள் மூழ்கி விடும். கடற்கரை பகுதி களும் அழியும் என்று அவர்கள் கூறினார்கள்.

இப்போது ஏற்படும் புயல் மற்றும் மழைக்கு கூட இந்த வெப்ப நிலை மாற்றம்தான் காரணம் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர்.

பூமியில் வெப்பம் அதிகரித்து இருப்பது கடல் பகுதியையும் பாதித்து உள்ளது. அதாவது 1990க்கு பிறகு கடல் பகுதியில் 0.5 டிகிரி வெப்பம் அதிகரித்து இருக்கிறது. எனவே கடலில் இருந்து தண்ணீர் ஆவியாவது அதிகரித்து உள்ளது.

பொதுவாக குளிர் கடல் பகுதிகளில் தண்ணீர் ஆவியாவது குறைவாக இருக்கும். வெப்ப நிலை உயர்வால் அங்கேயும் கடல் நீர் அதிகமாக ஆவியாகிறது.

அவை மேக கூட்டமாக உருமாறி காற்றழுத்தத்தை உருவாக்குகின்றன. அதன் மூலம் புயல் ஏற்பட்டு மழை கொட்டுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தண்ணீர் அதிகமாக ஆவியாவதால் அந்த புயல்களின் வீரியமும் அதிகமாக இருப்பதாக அவர்கள் சொல்கின்றனர்.

உலகின் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இனி இது போன்ற புயல்களையும், வெள்ளத்தை யும் அடிக்கடி சந்திக்க வேண்டியது வரும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

Maalaimalar
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Thala - 11-25-2005, 12:35 AM
[No subject] - by தூயவன் - 11-25-2005, 04:58 AM
[No subject] - by RaMa - 11-25-2005, 05:03 AM
[No subject] - by aathipan - 11-25-2005, 10:50 AM
[No subject] - by அருவி - 11-25-2005, 11:38 AM
[No subject] - by Vaanampaadi - 11-26-2005, 08:49 AM
[No subject] - by ப்ரியசகி - 11-26-2005, 09:02 PM
[No subject] - by MUGATHTHAR - 11-27-2005, 08:45 AM
[No subject] - by SUNDHAL - 11-27-2005, 02:41 PM
[No subject] - by RaMa - 11-28-2005, 03:14 AM
[No subject] - by தூயவன் - 11-28-2005, 05:36 AM
[No subject] - by MUGATHTHAR - 11-28-2005, 05:43 AM
[No subject] - by ப்ரியசகி - 11-29-2005, 06:23 PM
[No subject] - by தூயவன் - 12-02-2005, 06:28 AM
[No subject] - by ப்ரியசகி - 12-03-2005, 12:04 PM
[No subject] - by தூயவன் - 12-05-2005, 06:05 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)