06-22-2003, 09:39 AM
வாசல் திறந்தபோது
-செந்தணல்
"அம்மா, பசிக்குது" அமுதன் சமயலறைக்குள் வந்து அங்கு கிடந்த பலகைக்கட்டையில் அமர்ந்தபடியே வழமையான பல்லவியைத் தொடங்கினான். அவனருகே ஈரமண் தரையில் தவழ்ந்து விளையாடிய வதுசனும் கையைச் சூப்பியும், சப்புக் கொட்டியும் தனது பசியுணர்வை வெளிப்படுத்தினான்.
"செல்லம் கொஞ்சம் பொறுங்கோ, அம்மா பிள்ளைகளுக்கு கஞ்சி காச்சித் தாறன்" என்றவாறே அங்கிருந்த மூடிய பழைய பானையைத் திறந்து பார்த்தாள் பவளம். ஒரு சிறங்கை பச்சையரிசி மட்டுமே அங்கு எஞ்சியிருந்தது. பக்குவமாய் அதைக் கழுவி உலையிலிட்ட பவளம், மதியத்திற்கு என்ன செய்வம் எனச் சிந்தித்தாள்.
ஒருகிழமை தொடர்ச்சியாகப் பெய்த மழையினாலும் உடல்நலக்குறைவினாலும் வேலைக்குப் போகமுடியவில்லை. நீண்ட நாட்களக மெழுகாதிருந்த குடிசையில் ஆங்காங்கே கறையான் புற்றுக்கள் தென்பட்டன. பொத்தல் பொத்தலாக தெரிந்த கூரையை மூடியிருந்த பழைய தறுப்பாள்கள், பொலித்தீன் பைகள், உரப்பைகள் எல்லாவற்றையும் மீறி சிந்திய ஒழுக்கு நீரால் தரை சேறும், சகதியுமாயிருந்தது.
இந்தச் சேற்றுக்குள்ள, இந்தப் பிஞ்சுகளையும் வைத்துக் கொண்டு என்னதான் செய்வது, ஏலாததால விறகு பொறுக்கக்கூடக் காட்டுக்குப் போகேலாமப் போச்சுது. என்ன செய்யிறது. தொடராய் அவளுள் எழுந்த கேள்விகள் அவளது மன ஆழத்திலுள்ள வேதனையைக் கிளறிவிட்டன.
எப்படி ராசாத்தி மாதிரி வீட்டில இருந்தனான். பாழும் விதி இவ வளவு கொடியதா? சொந்தங்களில் இருந்து பிரிந்து தனியே பிள்ளையளோட இப்படியெல்லாம் கஸ்டப்பட வேண்டுமென்று தலையில் எழுத்துப்போல.
அவளது நெஞ்சிலிருந்து எழுந்த ஆழமான பெருமூச்சுடன் கூடவே தகதகவென கோபக்கினியும் சுவாலை விட்டெழுந்தது.
"எங்கள இப்படிக் கஸ்டப்பட விட்டுவிட்டு அவரால மட்டும் எப்படி இவ வாறு இருக்க முடியுது? கடமைகளை மறந்து விட்டேற்றியாக வாழ அவரால மட்டுந்தான் ஏலும்"
நான்கு வீடுகள் தள்ளி மறுமணம் புரிந்து வாழ்ந்து வரும் அவளது கணவனைப் பற்றி நினைக்கையில் அவளது தேகம், கோபத்தினால் ஏற்பட்ட வேதனை தாங்காமல் நடுங்கியது.
அவளும் சராசரிப் பெண்களைப் போலத்தான் நெஞ்சம் நிறையக் கனவுகளோடு ராஜகுமாரன் வரவுக்காகக் காத்திருக்கும் தேவதைப் பெண்போன்று வாழ்ந்திருந்தாள். உண்ண, உடுக்க குறைவில்லாத குடும்பத்தில் பெண்ணாக வளர்ந்த அவள் விழிகளுக்கு, அவள் வீட்டின் முன்னேயிருந்த தேநீர்க்கடையில் நின்றிருந்த வாட்டசாட்மான சிவராசா ராஜகுமாரன் போன்று தென்பட்டது வியப்பில்லைத்தான். பெற்றோரது பலத்த எதிர்ப்பையும் மீறி இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.
வலிகாம இடப்பெயர்வின் போது, ஏழுமாதக் கருவை மட்டும் சுமந்து உடுத்த உடைகளோடு கணவன் கரம் பற்றி வன்னிமண் வந்தேறினாள் பவளம். ஆரம்பத்தில் வசந்தகாலமாகத் தென்பட்ட வாழ்வு யதார்த்தத்தின் அராஜகத்தினால் சோபையிழந்து போனது.
கூலி வேலையிலும் ஈடுபட்ட சிவராசா நாளடைவில் குடிப்பழக்கத்திற்கும் அடிமையனான். வறுமை, பற்றாக்குறை, நோய்களோடு, அவனது அடி உதையும் பழகிப்போயிற்று பளத்திற்கு.
மழை மற்றும் பனிக்காலங்களில் தொடர்ச்சியாக ஏற்பட்ட மலேரியா, சளித் தொல்லைகளினால் பவளத்தின் பிள்ளைகள் துயருற்றனர். மருந்தற்ற மருத்துவமனைகளில் து}ங்கி வழிந்த மக்களோடு மக்களாகப் பவளமும் பிள்ளைகளின் உயிரைத் தக்கவைக்கப் பேராடினாள். ஒருவாறு உயிர்தப்பிய போதிலும் தக்க போசாக்கான உணவின்மையால் எலும்பும் தோலுமானர்கள் அவர்கள்.
நிவாரணம் ஓரளவில் அவர்களது கால்வேளைப் பசியைப் போக்க உதவிடினும் கிராமசேவகர்களது மீளாய்வு நடவடிக்கைகள் பல சமயங்களில் பல மைல்கள் வெறுவயிற்றோடு செல்லுவித்து வெறுங்கையுடனே திரும்பி வரச் செய்தும் விடும்.
குழந்தைகளின் பசி போக்குவதற்காக நாலைந்து வீடுகளில் மாவிடித்துக் கொடுத்துக் கூலி பெற்றாள் பவளம். சிறிது நாளில் வீட்டுக்கு வருவதையே குறைத்துக் கொண்ட சிவராசா எப்படியோ நான்கு வீடுகள் தள்ளி வசித்து வந்த கனகத்தை மறுமணம்.
தன்னந்தனியே வறுமையோடும், தீராத நோய்களோடும் போராடி வாழ்க்கையை ஓட்டி வந்த பவளமும், குழந்தைகளும் அடிக்கடி தன்னிலையை சுயமதிபபீடு செய்து கொள்வாள் பவளம்.
ஐயா அம்மாவிடமே யாழ்ப்பாணத்திற்குச் செல்வோமா என நினைப்பாள் அவள். இல்லையில்லை என் வழியில் வந்துவிட்டு சிலுவை சுமக்கையில் மட்டும் சுயமரியாதையைக் கைவிட்டு அவர்களிடம் போகக்கூடாது எனவும் எண்ணுவாள் பவளம்.
கசப்பையும் வேதனையையும் மாற்றவல்ல, ஒளியை நோக்கிச் செல்லவல்ல காலம் வராமற் போகாது என்பது அவளது ஆழந்த நம்பிக்கை.
அன்று வழமைபோன்று விறகு பொறுக்கிவர கால்நடையாகக் கட்டுக்குச் சென்று கொண்டிருந்தாள் பவளம். அவளுக்கு முன்னே சென்ற இரு பெண்களினது உரையாடல் அவளது கவனத்தை ஈர்த்தது.
"விசாலி உனக்குத் தெரியுமே, துணைப்படைக்கு பெண்களையும் சேர்த்துக் கொள்வினமாம். குடும்பப் பெண்கள்கூடப் போகினமாம்" என்றாள் ஒருத்தி.
"உண்மையிலே அப்ப தேசத்திற்கான பெண்களின் கடமைகள் இன்னமும் இருக்கத்தான் செய்யுது என்ன" என்றாள் விசாலி.
"பின்ன எங்கட மண்ணில இருக்கிற ஒவ வொருவருக்குமே தேசத்திற்காகப் போராடும் உரிமையிருக்குது. அதுக்குக் குடும்பப் பெண்கள், வீட்டுப் பெண்கள் மட்டும் விலக்கே" என்றாள் முதலாமவள்.
அப்ப உதவியில்லாததுகளின்ரை பிள்ளையள யார் பார்க்கிறது. அதுவும் பெரிய விசயம்தானே என்று வினாவினாள் மற்றவள்.
"அதுக்கு வசதி குறைந்த, படிக்க வாய்ப்பில்லாத பிள்ளையளைப் பராமரிக்க, படிப்பிக்க தமிழர் புனர்வாழ்வு நிலையங்கள் நடாத்துகிற குருகுலங்கள் ஒவ வொரு பிரதேசத்திலும் இருக்குத்தானே"
பவளத்திற்கு அவர்களது உரையாடல்கள் வயிற்றில் பாலை வார்த்தது போலிருந்தது. அப்படியானால் அவளது வாழ்விற்கும் அர்தத்மிருக்குத்தானே. ஒளி பொருந்திய நம்பிக்கை அவளுள் முகை கொண்டது.
'தேசத்தின்ர விலையோடு, சமூகச் சிக்கல்களிற்கும் எனது பங்களிப்பு உதவுமானால், அது எல்லோருக்கும் பயனுடையதாய் இருக்கும். என்னைப்போல பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ வொருவரும் இதை உணர்ந்து தேசத்தின் விடுதலைக்காக உதவ முன்வரவேண்டும்'
அவளது சிந்தனையில் ஏற்பட்ட தெளிவுடன், நடையிலும் புது நிமிர்வுடன் கலந்த வேகம் தென்பட்டது. இனி அவளது திசை நோக்கிய புதிய பவளங்கள் வரத்தான் போகிறார்கள்.