Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தேசியத்தலைவரை வாழ்த்துங்கள்
#32
<img src='http://img459.imageshack.us/img459/2678/leader420in.jpg' border='0' alt='user posted image'>
<b>பிறந்தநாள் காணும் மேதகு தலைவன்!</b>

இருபத்தி யோராம் இலங்குநு}ற் றாண்டின்
பிரபா கரமெனும் போரியல் ஆக்கம்
நிலத்தே இருந்து நீள்நிலம் முழுதும்
பலமாய் விடியற் பண்ணாய் மலர்ந்தது
மரபும் படையும் மறவர் கொடையும்
உரமொடு இயற்றும் பிரபா கரத்தை
நாடுகள் அரசு நாயகம் அனைத்தும்
ஏடுகள் போற்றும் இயல்கண் டதுவே!

மானமார் மறவர் மாதர் படையணி
தானை கடற்புலி தரைவான் என்றே
ஆனதோர் வேங்கை அணித்தமிழ் ஈழம்
சேனை கண்டதால் சிலிர்த்தான் தமிழன்!

வல்லைக் கடலலை வயப்பில் நின்றவன்
செல்லும் இராணுவச் செருக்கை உணர்ந்தான்
வல்லதோர் அரச வாதையாய் அழியும்
வெல்லத் தமிழரின் வீழ்ச்சியோ டந்த
ஆண்டதோர் இனத்தை அழித்துச் குதறும்
நீண்டதோர் சிங்க(ள) நீசர் குகையிலே
மாண்ட தமிழரும் மண்ணும் மரிப்பும்
து}ண்டிய துயரின் சோகமும் கண்டான்
தடைமுகாம் தோறும் படையாய் சிங்கள
முடையால் கதறும் மூதா தையரை
சின்னதோர் வயதில் செறிகண் ஊடே
மன்னவன் பிரபா மனதினில் எடுத்தான்
தந்தை செல்வா தாங்கிய நகர்வை
கந்தையாய் அழித்த கயமமைச் சிங்கள
வலிமைத் தனத்தின் வரலா றுணர்ந்தான்
புலியாய் ஆகிப் பெற்றதாய் மண்ணை
காக்கா தழிந்தால் கதியெலாம் இழந்து
போக்காய் போகும் பிறந்தகம் என்றே
உள்ளம் தனிலே ஏற்றதோர் எழுச்சி
வெள்ளம் எனவே வீறுகொண் டதுவே!

மாணவர் சில்லோர் மறவராய் எழுந்து
காணா மறையாய் களத்தை ஆக்கினர்
இளைஞர் பலராய் எழுந்த இயக்கம்
விளைநிலம் முழுதும் வேரோ டியதே!
புலிகள் இயக்கம் பிரபா யுகமாய்
வலிமைத் தமிழன் வரலா றானது.
சிங்கள அரசம் இந்திய நகர்வும்
பங்கம் படைத்த பாதையில் தமிழர்
நுங்குச் சீவலாய் நிலத்தில் உதிரும்
பொங்கும் தமிழரைப் புலிகள் காத்தனர்!

பிரபா கரமாய் பேசிய பிரபா
உரவே கத்துள் எழுந்தது வேங்கை
பிரபா விழியில் பேசிய மொழிகள்
வரமெனப் பாய வாலிபர் யுவதிகள்
அண்ணன் ஆணை அமுதமாய் ஏற்றனர்
நண்ணிய எதிரி நாயாய் ஓடினான்
கரும்புலி என்ற களத்தின் ஆயுதம்
தரும்கொடை தன்னில் தானை எழுந்தது

பிரபா பேசினால் போதும் ஆணையை
சிரசில் எடுத்துச் செங்களம் ஆடினர்
உலகமா யுத்தம் ஓங்கிய பக்கம்
அலசியா ராயினும் அங்கே காணாக்
களமுனை யுக்தி கணிதம் தந்திரம்
உளமுனை வீரம் உத்தியில் வென்ற
ஆனை யிறவு அரும்போர் அழகு
தானை படைத்த தரணியில் எங்கும்
காணாச் சரித்திரம் கரிகாற் சோழன்
அன்புத் தம்பி அண்ணன் எனத்தகு
மன்னன் பிரபா மதிப்புலம் வரித்த
போரில் இந்தியப் புல்லரின் கொடுமை
நேரில் நின்று நெறிப்படுத் தியவன்

அமைதிப் படையாய் அணிநிலம் வந்து
இயமப் படையாய் ஏகிய இந்திய
வல்லதோ ரரக்க வஞ்சனை வென்றான்
சொல்லும் செயலும் செந்தமிழ் ஈழம்
தன்னை உரைத்து தந்தமா வீரரை
அன்னை நிலத்து ஆலயம் ஆக்கினான்
தமிழீழ மென்னும் தரணியின் நாடு
அழகுக்கு எல்லாம் அணித்தாய் ஆக்கினான்

வாகை மரமும் வலிமைச் சிறுத்தையும்
மோகச் செண்பகம் முத்தமிழ் கார்த்திகைப்
புூவும் கொண்ட புதுத்தமிழ் நிலத்தை
மேவிப் பரவும் மேதினி வைத்தான்
இராணுவ நகர்வு இராச தந்திரம்
புராண காலமும் பேசிடாக் களமும்
பிரபாத் தலைவன் பிறந்துவந் ததினால்
உரமாய் தமிழன் உலகமீ தெழுந்தான்

கலைகள் செழித்தன கனித்தமிழ் பாட்டு
இசைகள் மலர்ந்தன காதல் மணிநிலம்
விளைநில மாகியே விதம்விதப் பயிர்கள்
வளம்கொழ நிறைந்து மலர்ந்தது தேசம்
பதிணெண் ணாயிரம் பதித்துயிர் வீரர்
சிதையின் கோவில் சிலிர்த்தது நிலமே
மாவீரர் கோவில் வணங்கி எழுவோம்;
புூவைப் பொழிந்து பொற்பதம் தொழுவோம்!

மாவீரர் கொடையை மதித்துப் புலிகள்
காவிய மாகிய களநிலம் நெஞ்சில்
நித்திலம் எண்ணும் நிகரிலாத் தலைவன்
கைத்தலம் பற்றக் கனிந்தது தேசம்!

கார்த்திகைப் புூக்கள் மலரும் கார்த்திகை
இருபத்தி யாறில் எங்கள் தலைவன்
பிறந்த நாளிலும் பெட்புயர் வீரர்
சிறந்த நாளிலும் செந்தமிழ் ஈழம்
விடியல் பிறந்த வேளையில் புலிகள்

<b>புதிய பாரதி (கனடா)</b>

நன்றி தமிழ்நாதம் http://www.tamilnaatham.com/poems/others/20051125.htm
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply


Messages In This Thread
[No subject] - by iruvizhi - 11-12-2005, 06:05 PM
[No subject] - by cannon - 11-13-2005, 01:25 AM
[No subject] - by Mathuran - 11-13-2005, 11:50 AM
[No subject] - by Mathuran - 11-13-2005, 03:01 PM
[No subject] - by Birundan - 11-13-2005, 07:52 PM
[No subject] - by iruvizhi - 11-14-2005, 09:14 PM
[No subject] - by tamilini - 11-14-2005, 09:42 PM
[No subject] - by Sriramanan - 11-15-2005, 02:32 AM
[No subject] - by adithadi - 11-15-2005, 03:25 AM
[No subject] - by Mathuran - 11-19-2005, 02:27 AM
[No subject] - by iruvizhi - 11-21-2005, 12:13 AM
[No subject] - by inizhaytham - 11-22-2005, 07:30 AM
[No subject] - by வினித் - 11-22-2005, 09:17 AM
[No subject] - by iruvizhi - 11-22-2005, 03:00 PM
[No subject] - by வன்னியன் - 11-22-2005, 04:59 PM
[No subject] - by Rasikai - 11-23-2005, 04:44 AM
[No subject] - by RaMa - 11-23-2005, 04:56 AM
[No subject] - by vasisutha - 11-23-2005, 04:00 PM
[No subject] - by iruvizhi - 11-23-2005, 09:38 PM
[No subject] - by kuruvikal - 11-24-2005, 11:13 AM
[No subject] - by selvanNL - 11-24-2005, 11:47 AM
[No subject] - by வியாசன் - 11-24-2005, 12:30 PM
[No subject] - by sinnappu - 11-24-2005, 10:20 PM
[No subject] - by eelapirean - 11-24-2005, 10:25 PM
[No subject] - by Selvamuthu - 11-24-2005, 11:48 PM
[No subject] - by தூயவன் - 11-25-2005, 05:07 AM
[No subject] - by Aravinthan - 11-25-2005, 05:33 AM
[No subject] - by iruvizhi - 11-25-2005, 09:58 AM
[No subject] - by sri - 11-25-2005, 12:16 PM
[No subject] - by suddykgirl - 11-25-2005, 02:09 PM
[No subject] - by iruvizhi - 11-25-2005, 09:29 PM
[No subject] - by Niththila - 11-25-2005, 11:31 PM
[No subject] - by தூயா - 11-26-2005, 03:51 AM
[No subject] - by ragavaa - 11-26-2005, 05:01 AM
[No subject] - by jeya - 11-26-2005, 09:30 AM
[No subject] - by aathipan - 11-26-2005, 09:46 AM
[No subject] - by மகேசன் - 11-26-2005, 09:56 AM
[No subject] - by shobana - 11-26-2005, 10:01 AM
[No subject] - by manimaran - 11-26-2005, 10:40 AM
kavithai - by kavithaa - 11-26-2005, 12:52 PM
[No subject] - by samsan - 11-26-2005, 01:05 PM
[No subject] - by Birundan - 11-26-2005, 01:33 PM
[No subject] - by Netfriend - 11-26-2005, 02:16 PM
[No subject] - by iruvizhi - 11-26-2005, 10:13 PM
[No subject] - by adsharan - 11-27-2005, 12:27 AM
[No subject] - by Birundan - 11-27-2005, 12:05 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)