Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாவீரர்களுடன்..
#4
நான் கடந்த தடவை தாயகம் சென்றபோது, முறிகண்டிப் பிள்ளையாரை தரிசித்து விட்டு, ஒரு ஓரமாக உட்காந்திருந்த போது, என் பக்கத்திலிருந்த ஒரு வயோதிப தம்பதிக்கள், என்னுடன் ....

"மகன் வெளிநாட்டிலிருந்தோ?"

"ஓமோம்.. அப்பு! லண்டனிலிருந்து வந்திருக்கிறன்..."

எனக்கு அவர்களின் தமிழ் உச்சரிப்பிலிருந்து தென் தமிழீழத்தவர் ...

"அப்பு! நீங்கள் மட்டக்களப்போ??"

"ஓமோம் மகன்! என்ரை மூத்தவனும், இளையவளும் இங்கைதானிருக்கினம்!! அதுதான்..."

"எத்தனை பிள்ளைகள் உங்களுக்கு அப்பு?"

"என்ரை செல்வங்கள் அந்த இரண்டும்தான்!!"

"ஓ.. அடிக்கடி வாறனீங்களோ?"

"ஓம் மகன்! வருசத்திலை இரண்டு மூண்டு தடவையெண்டாலும் வந்திடுவம்..."

.... இப்படி எமது சம்பாசனை முடிந்து நானும் விடை பெற்று எனது பயணத்தை தொடங்கிவிட்டேன்! அன்று மாலை வன்னியிலுள்ள ஓர் மாவீரர் துயிலுமில்லம் சென்ற என் கண்கள் கண்ட காட்சி .... எனது பயனத்தில் சந்தித்த அந்த வயோதிப தம்பதிகள்!! ஓர் கல்லறையை நீரினால் கழுவி பூக்களால் அலங்கரித்துக் கொன்டிருந்தார்கள்! .... அவர்கள் இங்கிருப்பதாக கூறிய அவர்களின் செல்வங்கள் இந்தக் கல்லறைகளில் உறங்கிக் கொண்டிருந்தார்கள்!!

இதுதான் தமிழீழத்தின் இன்றைய யதார்த்தம்! இந்த மாவீர தெய்வங்களைப் பெற்றவர்கள் மட்டுமன்றி ஒவ்வொரு மானத்தமிழனுடனும் இத்தெய்வங்கள் வாழ்கிறார்கள்!! என்றென்றும் வாழ்வார்கள்!!!
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by selvanNL - 11-25-2005, 07:40 PM
[No subject] - by RaMa - 11-25-2005, 08:38 PM
[No subject] - by Nellaiyan - 11-25-2005, 08:49 PM
[No subject] - by Mathuran - 11-25-2005, 09:04 PM
[No subject] - by suddykgirl - 11-25-2005, 09:54 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)