Yarl Forum
மாவீரர்களுடன்.. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19)
+--- Thread: மாவீரர்களுடன்.. (/showthread.php?tid=2279)



மாவீரர்களுடன்.. - selvanNL - 11-25-2005

<span style='font-size:23pt;line-height:100%'><b>அன்பான யாழ்கள நண்பர்களே,

வெற்றியின் விளிம்பில் எவனுக்கும் அஞ்சாது துணிவுடன் இவ் பாரிலே தமிழனை தலை நிமிர்ந்து வாழ வைக்க தங்களையே ஆகுதி ஆக்கிய 17,903 மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 25,26,27 ஆகிய தினங்களில் மாவீரர்களை பற்றி அவர்கள் செய்த தியாகங்களைபற்றி சற்று மீட்டுப்பார்ப்போமா, உங்களிற்கு தெரிந்த அல்லது உங்கள் சகோதரர்கள், உறவினர்கள், உயிர் நண்பர்கள் எவராவது மாவீரராக இருந்தால் அவ் மாவீரர்களை பற்றி சக உறுப்பினர்களுக்கு அறியத்தாருங்கள், மாவீரர்கள் நினைவாக அவர்களை மனதில் போற்றி அவர்களுக்காக உங்களால் முடிந்த சிறு ஆக்கங்களை இங்கே பிரசுரியுங்களேன்.அவை எந்த வகையில் இருக்கலாம்,

<img src='http://img112.imageshack.us/img112/8815/photo14bz.jpg' border='0' alt='user posted image'>

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்,,</b></span>

<span style='font-size:16pt;line-height:100%'>பி.கு: இங்கே, தகவலுக்கு நன்றி எண்ட வார்த்தைகளையோ அல்லது பயனுள்ள தகவல் எண்ட சொற்களை தவிர்க்குமாறும், தனிய மாவீரர் பற்றிய ஆக்கங்களை பிரசுரிக்குமாறு தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன், உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி</span> Idea


- selvanNL - 11-25-2005

[b]முதாலவதாக தாய் மண் காக்க தலைவனின் மடியில் உயிர் துறந்த மாவீரன் லெப்.சங்கருக்கு சூரியத்தேவன் அக வணக்கம் செய்வதை..
<img src='http://img4.imageshack.us/img4/5820/228ze.jpg' border='0' alt='user posted image'>


[b]மூன்று மாவீரர்களின்
<img src='http://img412.imageshack.us/img412/6681/200511250039bp.jpg' border='0' alt='user posted image'>


- RaMa - 11-25-2005

பல மாவீரார்கள் தங்கள் இன்னுயிரை நமக்காக துறந்திருந்தாலும் என்னுடன் கூடி விளையாடி பாடி திரிந்த நண்பர்களும் இந்த மாவீரார்கள் வரிசையில் இருக்கின்றார்கள்
அன்பு: எனது பக்கத்துவீட்டுக்காரன்.. எப்பவும் சுறு சுறுப்பு கொண்டவன். அவனுக்கு அண்ணக்கள் வைத்த பட்டப்பெயர் "எறும்பு" தாய் தந்தையை சிறு வயதிலே இழந்தவன். தமிழீழ போரட்டத்திற்காக தன்னை இளம் வயதிலேயே இனைத்து கெரண்டவன்... ஒரே குழப்படியாக தெரிந்த அன்பு இயக்க அமைபிலிருந்து ஒரு முறை லீவுக்கு வரும்போது எல்லோருக்கும் ஆச்சரியம். எங்கள் குழப்படி அன்பா இப்படி அமைதியாக இருக்கிறான் என்று. அந்த அன்பு ஆனையிறவு சமரில் வீரமரணம் அடைந்த மாவீரார்களுடன் ஓருவர் ஆகிவிட்டான். அவனுக்கு எனது சீரம் தாழ்த்தி வணங்கின்றேன்..

சயந்தி:
தாயகத்தில் இருக்கும்போது மாவீரார் நாள் தீயாகி திலிபன் அண்ணாவின் நினைவு நாள் என்றால் எமக்கு சந்தோசம்.. என்னென்றால் பல பேச்சுபோட்டிகள் கட்டுரை போட்டிகள் என்று நடக்கும். அப்போது எனக்கு போட்டியாக வருபவள் தான் சயந்தி. சோடி பிள்ளைகளாக பிறந்தவள் அம்மாவிற்காக நீ இரு சகோதரியிடம் கூறி நான் நாட்டுக்காக போகின்றேன் என்றவள். பாடசாலையில் படிக்கும்போதே மாவீரார் நாளுக்கு மேடை ஏறி அபிநயம் பிடித்தவள். ஒரு முறை "எரியும் விழி நெருப்பில் அழைப்பை ஏத்தாயோ வீரார்களை மறப்பாயோ தமிழா எரிமலையாய் எழுந்த" என்ற பாடலுக்கு தீப்பந்தங்களுடன் ஆடியவை தான் கண்களுக்குள் வருகின்றது. இன்று அவளுக்கும் சேர்த்து எத்தனை பாடசாலை மாணவர்கள் தீபம் எந்தி அவர்களை நினைவு கூறுகின்றார்கள்.. சயந்தி ஐயக்கிச்சிறு நடவடிக்கையில் வீரமரணம் அடைந்தவள்.. இவளுக்கும் எனது சீரம் தாழ்ந்த வணக்கங்கள்

நிசாந்தன் அண்ணா...
இவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் வடிவாக தெரியாது.. ஆனாலும் இவர் ஆனையிறவு முதல் அடிபட்டில் வீரமரணம் அடைந்தவர்... இவரின் நினைவாக எமது வீதிக்கு இவரின் பெயரை இட்டிருக்கிறார்கள். அத்துடன் ஓரு விளையாட்டு கழகமும் உண்டு. அவருக்கும் எனது சீரம் தாழ்ந்த வணக்கங்கள்.


- Nellaiyan - 11-25-2005

நான் கடந்த தடவை தாயகம் சென்றபோது, முறிகண்டிப் பிள்ளையாரை தரிசித்து விட்டு, ஒரு ஓரமாக உட்காந்திருந்த போது, என் பக்கத்திலிருந்த ஒரு வயோதிப தம்பதிக்கள், என்னுடன் ....

"மகன் வெளிநாட்டிலிருந்தோ?"

"ஓமோம்.. அப்பு! லண்டனிலிருந்து வந்திருக்கிறன்..."

எனக்கு அவர்களின் தமிழ் உச்சரிப்பிலிருந்து தென் தமிழீழத்தவர் ...

"அப்பு! நீங்கள் மட்டக்களப்போ??"

"ஓமோம் மகன்! என்ரை மூத்தவனும், இளையவளும் இங்கைதானிருக்கினம்!! அதுதான்..."

"எத்தனை பிள்ளைகள் உங்களுக்கு அப்பு?"

"என்ரை செல்வங்கள் அந்த இரண்டும்தான்!!"

"ஓ.. அடிக்கடி வாறனீங்களோ?"

"ஓம் மகன்! வருசத்திலை இரண்டு மூண்டு தடவையெண்டாலும் வந்திடுவம்..."

.... இப்படி எமது சம்பாசனை முடிந்து நானும் விடை பெற்று எனது பயணத்தை தொடங்கிவிட்டேன்! அன்று மாலை வன்னியிலுள்ள ஓர் மாவீரர் துயிலுமில்லம் சென்ற என் கண்கள் கண்ட காட்சி .... எனது பயனத்தில் சந்தித்த அந்த வயோதிப தம்பதிகள்!! ஓர் கல்லறையை நீரினால் கழுவி பூக்களால் அலங்கரித்துக் கொன்டிருந்தார்கள்! .... அவர்கள் இங்கிருப்பதாக கூறிய அவர்களின் செல்வங்கள் இந்தக் கல்லறைகளில் உறங்கிக் கொண்டிருந்தார்கள்!!

இதுதான் தமிழீழத்தின் இன்றைய யதார்த்தம்! இந்த மாவீர தெய்வங்களைப் பெற்றவர்கள் மட்டுமன்றி ஒவ்வொரு மானத்தமிழனுடனும் இத்தெய்வங்கள் வாழ்கிறார்கள்!! என்றென்றும் வாழ்வார்கள்!!!


- Mathuran - 11-25-2005

ம்ம் இந்த வீரர்களின் தீரத்தினை நினைக்கயில் கண்கள் குளமாகின்றன்ன. பாருங்கள் அவர்களின் தன்னலமற்ற சிந்தை தனை. றமா மிகவும் உணர்வு பூர்வமான நினைவுகளை பகிந்து கொண்டீர்கள். அவர்களால் தமிழீழம் சிறப்படைகின்றது.

வாய் விட்டு பெயர் சொல்லி அழ முடியாது
வரும் வார்த்தைகளால் உம்மை தொழ முடியாது என்னும் புதுவை அண்ணனின் பாடல்வரிகள் தான் எனக்கு எப்பவும் நினைவிற்கு வரும்.


- suddykgirl - 11-25-2005

எனது நண்பன் செல்வறாஐ;
இவன் தனது உயிரை 2000 ஆம் ஆண்டு எமது தாய் மண்ணுக்காக ஈர்த்தான் அவனுக்கு எனது மனமார்ந்த அஞ்சலியைத்தெலிவிக்கின்றேன்.


என் நண்பன், என் கடவுள் - தூயா - 11-26-2005

எம் உயிர்காத்த கடவுள்கள் அவர்கள்
வணக்கங்கள்