06-22-2003, 09:37 AM
போராட்டம் மீது பற்றுக் கொண்டும் அதனால் ஈர்க்கப்பட்டும் தாயக விடுதலைக்காகப் போராளிகளானவர்கள் ஆயிராயிரம் இளைஞர் யுவதிகள். அதேவேளை தம் சொந்த வாழ்க்கை, குடும்பம் பின்னணிகளால் முழு நேரப் போராளியாக மாற முடியாமல், தீவிர ஆதரவாளர்களாகப் பயிற்சி பெறாத பகுதிநேரப் போராளிகளாக இருந்தவர்கள் இந்த மண்ணில் அநேகம்பேர். அத்தகையவர்களில் ஒருவராக முப்பத்தொன்பது வயது சின்னையா முத்துராசா அவர்களைக் குறிப்பிடலாம். காலஒட்டம் 'சப்போட்டர்ஸ்' என்ற நிலையிலிருந்தவர்களையும் ஆயுதப் பயிற்சி பெற்ற வீரர்களாக மாற்ற முனைந்த போது சின்னையா முத்துராசா எல்லைப் படை வீரரானார்.
இளைஞர் யுவதிகள் மட்டும் களமுனைக்கு என்றான நிலைமாறி தமிழர்கள் அனைவருமே களம் நோக்கிச் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் சிங்கள அரசால் திணிக்கப்பட்டபோது ஆறு குழந்தைகளாலோ, அன்புக்குரிய மனைவியாலோ தடுக்கப்பட முடியாததாயிருந்தது, அந்த வீரனின் போராட்டப் பயணம்.
சிறந்த விவசாயியாக, வாகனச்சாரதியாக, கட்டிட மரவேலைத் தொழிலாளியாக, வியாபாரியாகப் பல திறமைகளைத் தன்னகத்தே கொண்டிருந்த முத்துராசாவுக்குப் போர்த் தொழிலும் விரைவாகப் பழகிப்போயிற்று. விடுதலை என்ற உயரிய பெறுமானத்தைப் பெற அந்த வீரன் தேர்ந்தெடுத்த அந்தப் போர்த் தொழில் முழுமையாகவே அவனை ஈர்த்துக் கொண்டது. ஏழு தடவைகளுக்கு மேல் எல்லைக்குப் போய் வந்தாலும் குடும்பத்துக்கான தேவைகளை அவ வப்போது கவனித்துக் கொண்ட அவனது பெரும்பாலான நேரம் போராளிகளுடனேயே கழிந்தது.
அடுத்தடுத்து ஆறு குழந்தைகளைப் பெற்றுக் கொண்ட பார்வதிக்கு, சொந்த அத்தை மகனையே விரும்பித் திருமணம் செய்து கொண்ட பார்வதிக்கு, கணவனின் எல்லைகாக்கும் பணி விருப்பத்திற்குரியதாக இல்லாத போதும் அவனின் செயற்பாடுகளுக்குத் தடை விதித்தல் என்பது முடியாத ஒன்றாகவே இருந்தது. விடுதலைக்கான தேவையை, சேவையை மறுக்காத அந்த இளம் தாய்க்கு, குடும்பமும் குழந்தைகளின் எதிர்காலமும் எப்போதும் முதன்மையாகத் தோன்றினாலும் கணவனின் போராட்டப் பங்களிப்பை மட்டுப்படுத்த அவளால் முடிவதில்லை. அவனது பதில்கள் அவளை மௌனமாக்கி விடுகின்ற போதுகளில் சலித்துக் கொண்டாலும் கணவனது ஒவ வொரு செயலும் சொல்லும் அவளைப் பெருமை கொள்ளவே வைக்கும்.
தான் வசிக்கும் பகுதியைத் தவிர வேறெந்த இடமும் தெரியாத பார்வதிக்கு அயலில் உள்ள சிறு நகரமோ, கிராமமோ எப்படி இருக்குமென்றும் தெரியாது. "இப்படியே இருங்கோ, தற்செயலா எனக்கேதும் நடந்திட்டால் அதுக்குப்பிறகு ஒன்றும் தெரியாமல் முழுசேக்க தெரியும்" என அடிக்கடி சொல்லும் கணவனுக்கு, "ஆறு பிள்ளைகளின் தேவைகளையும் கவனிச்சு முடிச்சு வெளியில போய் இடங்கள் பார்க்கிறதுக்கு எனக்கெப்படி நேரம் வரும்" என்றோ "உங்கட வெளி வேலைகளோட மட்டும் நிற்காமல் என்னையும் அங்க இஞ்சை என்று கூட்டிக் கொண்டுபோய்க் காட்டுங்கோ" என்றோ பதில் சொல்லத் தெரியாத அல்லது பதில் சொல்ல முடியாத அவளுக்கு இப்போதெல்லாம் தனக்கான, தன் குடும்பத்திற்கான தேவைகளைத் தானே போய்க் கவனிக்க வேண்டிய கட்டாயம். நிலைமைகளை ஓரளவு வளர்ந்த பிள்ளைகளின் உதவியோடு சமாளித்தாலும் கூட அவள் கடக்க வேண்டிய து}ரம் அதிகம்தான்.
அவர்கள் வசிக்கும் பகுதியில் இவர்களின் கிணற்றில் மட்டுமே நல்ல தண்ணீர் கிடைக்கும். ஆனால், இவர்களும் தோட்டம் செய்வதால் தண்ணீர் வேகமாக வற்றத் தொடங்கியது அந்த வேளையில் "உனக்கு வருமானம் வேண்டாம். அதுகள் தாகத்துக்கு தவிக்காமல் இருக்கட்டும். நீ தோட்டம் செய்யாமல் விடு" என்ற கணவனின் உயர் குணத்தை விழிகளில் வழியும் நீரோடு மீட்டுப் பார்க்கும் பார்வதிக்கு , இப்போதும் ஓர் கைக்குழந்தை. அந்த ஆண் குழந்தை பிறந்த போது அந்த வீரன் எம்மோடு இல்லை. து}ளியில் உறங்கும் அந்த மழலைக்குத் தந்தையின் வீரப்பாடல்தான் தாலாட்டோ?
சர்மதி யசோதரனுக்குத் துணைப்படை பயிற்சிக்கான ஆள்சேர்ப்பு முகாமில் என்ன வேலை? திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி விட்ட பின்னும் கூட பயிற்சித்தள நினைவில் வேகமாக இயங்கிக் கொண்டிருப்பவளினுள் கனல்வது எந்த உணர்வாக இருக்கக்கூடும்? தாயாக, மனைவியாகத் தனது காலங்களைக் கழித்தவள். துணைப்படை வீராங்கனையாகத் தயாராகி கள முனைக்கனவோடு சுழல்வது இந்த மண்ணிற்கேயுரிய பெருமையான நிகழ்வு எனக் கூறலாமா?
"தேசத்திற்காக நீ என்ன செய்தாய்"? என்ற கேள்விக்குச் சிறிதளவு பங்கையேனும் செய்தேன் நான் என்ற திருப்தியோடுகூடப் பதில் சொல்ல முடியாத நிலையில் ஏராளம் இளைஞர், யுவதிகள் இந்த மண்ணில் வாழ்ந்து (?) கொண்டிருக்க, சர்மதி தன் வாழ்வையே தந்துவிட்ட பின்னும்கூட சிரித்தபடி களப்பயிற்சிக் கனவில்லு}..
யசோதரனும் சர்மதியும் காதலர்கள். பதினைந்து வயதில் காதலித்தவள். யசோதரனைக் கைப்பிடித்தபோது பதினாறு வயதுதான்.
கடற்றொழிலே வாழ்வுக்கு ஆதாரமான அந்தச் சிறிய குடும்பத்தில் இன்னும் இரண்டு சிறிய புூக்கள்.
லக்ஸிகா - லக்ஸனா.
தாயைவிடவும் தந்தையையே ஆழமாக நேசித்த பிஞ்சுப் புூக்கள், போராட்ட காலத்துள் பிறந்துவிட்ட அந்தப் பிஞ்சுகளுக்கும் சோதனைகள் தான். உணவில், உடையில் வாழ்விற்குத் தேவையான வளத்தில் பற்றாக்குறையேதும் இல்லைதான். ஏனெனில் அவர்களின் தந்தை சிறந்த உழைப்பாளி. அவன் வெறும் உழைப்பாளியாக மட்டும் இருந்துவிடாமல் தேசப் பற்றாளனாகவும் தன்னை வரித்துக் கொண்டாவனாதலால் அந்தப் பிஞ்சுகளுக்கும் சோதனை.
தந்தையை ஐந்தாறு நாட்கள் தொடர்ந்து பார்க்காதுவிட்டால் அந்தப் புூக்கள் காய்ச்சலில் சுருண்டுபோகும். தந்தையையே தேடி வாய்கள் அரற்றும். கடந்த ஒரு வருடமாக மாதத்திற்கொருமுறை பத்து நாட்களேனும் எல்லைக் காவலுக்கெனச் செல்லும் ஒவ வொரு தடவையும் இதுவேதான் நிலைமை. என்றோ ஒரு நாள் பத்துமாதமேயான மழலை ஒன்று விமானக்குண்டுவீச்சில் சிதறிக் கிடந்ததைப் பார்த்ததன் விளைவோ என்னவோ அவனுக்கும் தன் போராட்டப் பணியே முதன்மையாகத் தெரிந்திருக்க வேண்டும்.
தன் உதிரிப் புூக்களின் உயிர்கள் அவன் நினைவில் நிழலாடியபடியே இருந்திருக்க வேண்டும். அதுதான் அவனை ஓயாது களமுனை நோக்கி இழுத்திருக்க வேண்டும். விருப்பத்திற்குரிய களமுனையிலேயே நிரந்தரமாகக் கண்மூடி அவன் மாவீரனாகச் சட்டமிடப்பட்டு வீடு வந்தபோது அந்த மழலைகள் மகிழ்ந்துகொண்டன. தந்தை தம்முடனே நிரந்தரமாகத் தங்கிவிட்ட மகிழ்வில் திளைத்துப் போயின. கேட்பவர்கள் அனைவருக்கும் தந்தையின் படத்தைக் காட்டி தந்தையை அறிமுகப்படுத்திக் கொண்டன.
துணைப்படையின் உருவாக்கம் கணவனின் இழப்பின் வேதனையில் இருந்து தன்னை மீட்கவும் கணவனின் பணியைத் தொடர்ந்து செய்யவும் சர்மதிக்குப் பேருதவியாக அமைந்திருக்குமோ என்னவோ? ஆனால், தவிர்க்கமுடியாத புறச் சூழல்களால் துணைப்படை அணியுடன் இணைவதை இடைநிறுத்தி மீண்டும் வீடுவந்து குழந்தைகளோட வாழும் சர்மதிக்கு வருங்காலம் வசந்தம் துளிர்க்கும் காலமாகும் என்ற நம்பிக்கைகளே இன்றுவரைக்கும் துணை.
"தகப்பனில்லாமல் ஆண்குழந்தைகளை எப்படி வளர்க்கிறது? வளர வளர எங்கட சொல்லுக்குள் அடங்குங்களா அதுகள்"
பெண்ணிடம், அதுவும் ஒரு தாயிடம் உள்ள ஆளுமையைப் பற்றிய கேள்வியை, ஆண் - பெண் குழந்தைகளின் இருவேறு வளர்ப்புமுறையை எனப்பலவாறான விரிவான தேடல்களை இந்தக் கூற்று உருவாக்கிவிடினும் அவற்றை அப்பால் விடுத்து நாம் இன்றைய நடப்புக்குள் வருவோம். 4 வயது விதர்சனும் 2 வயது சிகரனும் முற்றத்து மர நிழலில் விளையாடிக் கொண்டிருக்க, ராதாலு}.. 22 வயது நிரம்பிய மெலிந்த அந்த உருவம் தனது வீட்டுக்குப் புதிதாய் ஒரு மண்குந்து வைப்பதில் ஈடுபட்டிருந்தது.
அந்த வீட்டுக்குள் குழந்தைகள் விளையாடத்தான் அந்த மண் குந்தோ என நினைத்தபடி எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம். யோகேஸ்வரனும், வசந்தகுமாரியும் ஒருவரை ஒருவர் விரும்பி, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டவர்கள். விதர்சனின் மழலை சத்தம் கேட்ட மகிழ்வில் இருந்து விடுபட எண்ணியதுபோல 3 நாள் காய்ச்சலில் வசந்தகுமாரி மரணத்தைத் தழுவிக் கொள்ள, குழந்தையோடு தனித்து நின்ற யோகேஸ்வரனுக்கு வசந்தகுமாரியின் பெற்றோரே அவரின் தங்கையான ஜெயக்குமாரி (ராதா)யை மறு திருமணம் செய்து வைத்தனர். அதிக வசதியுமில்லாத, வறுமையுமில்லாத வாழ்வோட்டம் சீராகவே போய்கொண்டிருந்தது. 2 ஆண் குழந்தைகளோடு ராதாவின் வாழ்வு.
தினை விதைக்க பனை உயரப் போர் வீரர்கள் தோன்றி தமக்கு வெற்றியீட்டித் தந்ததாக கிரேக்க நாட்டுப் பழங்கதைகள் கூறுகின்றனவாம்.
அப்படி ஏதும் தோன்றி வெற்றி பெற்றுத்தர, மண்ணை மீட்டுத்தர, பாதுகாக்க முடியாத காரணத்தால் போராடும் இளைஞர், யுவதிகளின் பாரச்சிலுவைகளுக்கு குடும்பத்த வர்களும் தோள் கொடுக்க வேண்டிய கட்டாய நிலை. ஊரெங்கும் தாயக விடுதலைக்கான அறைகூவல் ஓங்கி ஒலித்தபோது துரை என்றழைக்கப்படும் யோகேஸ்வரனும் சிலுவை சுமக்கத் தயாரானவர்களில் ஒருவராகலு}..
அந்த வீரன் எல்லைக்குப் போய் பணி முடித்துத் திரும்புவது வழமையாய் இருந்தபடியாலோ என்னவோ அடுத்ததடவை எல்லைக்கென போராளிகள் அழைத்தபோதும் அந்த வீரன் தயாரானான்.
மகனின் பிறந்தநாள் படங்களைப் பார்க்கும் ஆவல் மனதில் கொப்பளிக்க, அது வந்துசேர நாட்கள் பிடிக்கும் என்ற உண்மை அந்தஆசையை அடக்க , ஆறுதலாக வந்து பார்ப்போம், என நினைத்தபடி எல்லைக்குப் புறப்பட்டவன், "நான் போயிட்டுக் கெதியில வந்திடுவன். நீங்கள் என்னைக் கேட்டு ஒரு இடமும் போக வேண்டாம்" என மனைவியிடம் கூறிவிட்டே சென்றான். இரண்டாயிரமாம் ஆண்டு செப்ரெம்பர் பதினேழாம் திகதி அந்த வீரன் இந்த மண்ணுக்காக வீழ்ந்த அச் செய்தி ராதாவின் காதடைந்தபின், துயிலுமில்லம் தேடிச் சென்றவளின் இரு கரங்களிலும் இரண்டு எதிர்காலங்கள். கணவன் இன்றி அவனது காதல் இன்றி கண்ணிரண்டில் நீரும், கையிரண்டில் புூக்களுமாய் நிற்கும் ராதாவின் வாழ்வு விடியலுக்காய் காத்திருக்கின்றது