11-23-2005, 04:49 AM
கேட்டது காலடி ஒசை மட்டும் அல்ல அவளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் விதியின் ஒசையாக இருந்தது. அவசர அலுவலாக வந்த அம்மா அவள் எதோ குழப்பத்தில் இருப்பதாக அறிந்தாள். "கீதா நானும் அப்பாவும் எவ்வளவோ கஸ்டப்பட்டுத்தான் உங்களை படிக்க வைத்துக்கொண்டிருக்கின்றோம். உனது அக்கா எமது கஸ்டத்தை எல்லாம் உணராமால் தனக்கென்று ஒரு வாழ்வை தானே தேடிக்கிட்டு பட்ட கஷ்டம் எல்லாம் உனக்கு தெரியும் தானே. அவா எடுத்த முடிவால் அவாவின் வாழ்க்கையே இன்று முடிந்து விட்டுது. அதைப்போல் எனது மற்ற மகளின் வாழ்வும் பாழக நான் விரும்பலை. எமது அறியாமையினால் உன் அக்காவை தான் இழந்து விட்டோம். இனியும் ஒரு இழப்பை எனக்கோ உனது அப்பாவிற்கோ தாங்கும் சக்தி இல்லை." என்று கையெடுத்து கும்பிட்டார் அவளின் அன்னை. "அம்மா அம்மா என்ன இது? நான் உங்களின் மகள் அம்மா. எனக்கு உங்க இலட்சியங்கள் தான் முக்கியம். உங்களின் மெய்யான அன்பிற்கு முன்னால் என்னுடைய காதல் தூசு தான் அம்மா. என்னுடைய ஒவ்வொரு ஆசைகளையும் பார்த்து பார்த்து நிறைவேற்றி வைக்கும் உங்களுக்காக இந்த ஒரு ஆசையை நிறைவேற்ற கடவுள் தந்த பாக்கியமாகவே கருதுகின்றென். அம்மா எனது மனம் ஒரு நாள் அலைபாய்ந்தது உண்மை தான் அம்மா. ஆனால் அந்த காதலை திரும்பவும் நான் நினைக்கப்போவதில்லை. நீங்களாக வந்து என் மனதை கவர்ந்தவனை ஒப்படைக்கும் மட்டும் நான் உங்கள் இலட்சியங்களை நிறைவேற்றிக் கொண்டு இருப்பேன் என்று உறுதியுடன் தாயின் கையைப்பற்றி கூறினாள். மகளின் உறுதியை கண்ட தாய் கண்ணை துடைத்துக்கொண்டே அடுக்களை பக்கம் போனாள்.
ஒரே நாளில் புத்து அந்நாளிலே கருகின தனது காதலுக்காக கடைசியாக ஒரு சொட்டு கண்ணீர் வடித்தாள் கீதா. அந்த சொட்டுக் கண்ணீர் அவள் ஆசைப்பட்டதெல்லாவற்றையும் ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்யும் பெற்றோர் இவளின் காதலுக்கு மாரியாதை காட்டுவார்கள் என்பதை கூறி நிலத்தில் விழுந்து தெறித்தது
முற்றும்
ஒரே நாளில் புத்து அந்நாளிலே கருகின தனது காதலுக்காக கடைசியாக ஒரு சொட்டு கண்ணீர் வடித்தாள் கீதா. அந்த சொட்டுக் கண்ணீர் அவள் ஆசைப்பட்டதெல்லாவற்றையும் ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்யும் பெற்றோர் இவளின் காதலுக்கு மாரியாதை காட்டுவார்கள் என்பதை கூறி நிலத்தில் விழுந்து தெறித்தது
முற்றும்

