Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகத்து அரசியல் கட்டுரைகள்
#98
தி. தவபாலன்

சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல புூமியின் ஒரு சிறு துண்டுமே அதன் உயிர்ப்புக்கு ஆதாரமானது. அதனால், ஒவ வொரு சிறுபகுதியும் தம் தம் சூழலைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்


மனிதனின் அறிவுக்கும் - ஆய்வுக்கும் எட்டியபடி உயிர்ப்பான ஒரே உலகம் உயிரிழந்து வருகின்றது. உயிர்கள் உருவாக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை பலகோடி ஆண்டுகளின் முன் (கார்ல சாகனின் கருத்துப்படி உயிரின உற்பத்தி 400 கோடி ஆண்டுகளின் முன் நிகழ்ந்தது). உயிரினங்கள் உற்பத்தியாகக் கூடிய சூழலைப் பெற்றிருந்த ஒரே உலகம் புூமி. சுயாதீனமாக ஒரு வளிமண்டலத்தைப் பெற்று ஒடுக்கம் மூலம் கடல்கள் உருவாக - கடலின் ஆழத்தில் முதல் உயிரினம் பிறப்பெடுத்தது. பரிணாமங்கள் பல நிகழ்ந்து இன்றைய நவ உலகம் உருவாகி நிற்கின்றது.
இந்த உலக உருவாக்கம் இயற்கையின் கட்டமைவினால் ஏற்பட்டதேயன்றி மனித சிந்தனையால் ஏற்படவில்லை. புூமியை பொறுத்தமட்டில் இதன் இடத்துக்கிடம் தனித்தன்மை கொண்ட உயிர்கள் உருவாகின. இந்த உருவாக்கம் சூழல் நிலையைப் பொறுத்து அமைந்தது. மனிதனின் பரிணாமம் நிகழ்ந்த போது காலநிலை சூழல் ஆகியவற்றுக்கு இசைவாக வாழும் தகவுடன் தனித்துவ இனங்கள் உருவாகின. மத்திய கோட்டுப் பகுதியில் வெப்பநிலையைத் தாக்குப்பிடிக்கக் கூடியதாக நீக்ரோ இனம் போன்ற கறுப்பின மனிதர்களும் - மங்கோலிய வகை மனிதர், அவர்கட்குரிய காலநிலைக்கீடாகவும் - வெள்ளையர்கள், அவர்கட்குரிய சூழலுக்கு அமைவாகவும் பரிணமித்தனர். தம் தம் சூழல் காலநிலைக்கு ஏற்றதாகவே இனமனிதரின் வாழிடம், வாழ்வு முறைமை - கலை - பண்பாடு என்பன அமைந்தன. இந்த இயற்கை மாறுதலடையும் போது தனித்துவ இனங்களின் வாழ்வு முறையில் மாறவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. வாழ்வு முறைமை மாற்றம் அவனது தனித்துவங்களை அழிக்கின்றது - அல்லது இழக்கச் செய்கின்றது. வாழ்வு முறைமை மாற்றம் ஒரு கட்டத்துக்கு மேல் இயலாது போகவே இனஅழிவே ஏற்படும் ஆபத்து நிலமையும் உண்டு.
இந்த ஆபத்து நிலைமைக்கு அடிப்படை சுற்றுச் சூழலில் ஏற்படும் மாற்றம் தான். புூமியின் உயிர்ப்புக்கு அது கட்டமைந்த இயற்கைச் சூழலே காரணம். இந்த இயற்கையில் மாற்றம் ஏற்படுத்தப்படுவது அழிவுக்கான அடிப்படையாகின்றது.
அபிவிருத்தி என்ற போர்வையில் பசுமை அழிக்கப்பட்டு வருகின்றது. பசுமையே புூமியின் உயிருக்கு ஆதாரம் - உயிரின் வாழ்வுக்கு ஆதாரமான நீரை வடித்தெடுத்து வழங்குவது பசுமை மரங்கள்தான். எப்படிப்பட்ட மரங்களானாலும் அதுதன் சூழலுக்கு உயிர்வழங்கும் தகவமைப்பைக் கொண்டதாகும். உதாரணமாக இலங்கையில் தமிழ்மக்கள் வாழும் பிரதேசம் உலர், வறள், உலர் ஈர வலயங்களைக் கொண்டது. உலர், வறள் வலையங்களானாலும் பாரம்பரிய காலமாக இந்த சூழலுக்கு ஈடாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தச் சூழலுக்கு பங்கம் வரும்போது மனிதர்கள் வாழமுடியாத நிலை ஏற்படுகின்றது. இதுதான் சுற்றுச்சூழலின் - இயற்கை கட்டமைப்பின் பெறுமதி.
மனிதன் வளர்ச்சிப்போக்கு என்கிற பெயரில் இயற்கையை அழித்து வருகிறான். இந்த அழிப்பு உயிரினங்களின் வாழ்வுச் சுழற்சியை பாதிப்படையச்செய்யும் ஒன்று. புூமியின் சகல உயிரின வாழ்வும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்ட பொருத்தப்பாடுடையதாகும். இயற்கையின் ஒரு கட்டத்தில் ஏற்படுத்தப்படும் ஊறு முழுக்கட்டத்தையும் வீழ்த்துவதாக்கி விடுகின்றது. மக்கள் தொகை அதிகமாகின்றது. இதன் விளைவு இயற்கையில் கைவைக்க வேண்டியதாகின்றது என்பது விருத்தி நாடம் மனிதனின் நிலைப்பாடு.


"மரங்களுக்கு உயிர் உண்டு
என்றபோதிலும்
அவை வெட்டப்படக்
கூடாதென்று
நான் சொல்லமாட்டேன்.
இலைகள்
இயற்கைக்கு எழில் கூட்டுகின்றன.
இருந்தாலும்
அவை கிள்ளப்படக்கூடாதென்று
நான் சொல்லமாட்டேன்.
கிளைகள் மரங்களின் கரங்கள்தான்
என்றபோதிலும்
அவை முறிக்கப்படக்
கூடாதென்று
நான் சொல்லமாட்டேன்?.
ஏனெனில்,
எனக்கு
ஒரு குடிசை வேண்டும்."


இந்தக் கவிஞன் கூறும் நிலைதான் தமிழினத்துக்கும் என்பது ஒரு புறமிருக்க-
ஒட்டுமொத்தமான உயிரின பாதிப்புக்கு இதுவே காரணமாகின்றது என்பது முக்கிய விடயம்.
வடதமிழீழத்தில் இரு பாரிய குளங்களின் நிலை இன்றைக்கு சிக்கலாகிவிட்டிருக்கின்றது. நீண்ட கால மழை வீழ்ச்சி அவதானிப்பின் கணிப்பின்படி முத்தையன்கட்டுக்குளம், வவுனிக்குளம் என்பன கட்டப்பட்டன. இயற்கையழிவால் எதிர்பார்க்கப்பட்ட மழைவீழ்ச்சி தற்போது இல்லை. குறித்த சில ஆண்டுகளில் பெருமழை பெய்தால் மட்டுமே இவை நிரம்பும். இல்லாவிடில் இவை நிரம்புவதில்லை. இந்தக் குளங்களை ஆதாரமாகக் கொண்டு வாழ்நிலையை அமைத்த மக்களுக்கு இது அபாயகரமான ஒன்று. இந்தக் குளங்கள் நிரம்ப மாற்று ஒழுங்குகள் செய்யப்படாதவிடத்து வாழ்விழப்பு அபாயம் ஏற்படும். நமக்கு சூழல் பாதிப்பால் ஏற்பட்ட கசப்பான விடயத்துக்கான ஒரு உதாரணம் தான் இது.
இதுபோல் உலகமெங்கும் இத்தகைய அபாயங்கள் ஏற்படுகின்றன. இதன் காரணத்தால்தான் இன - மொழி - மதங்களுக்கு அப்பால் நின்று சகலரும் சூழலைப் பாதுகாக்க மனித நேயத்தின்பால் குரலெழுப்புகின்றனர்.
ஏனென்றால், கலை, இலக்கியம் எல்லாவற்றுக்கும் மேலாக மனித உயிர் வாழ்வின் இருப்பையே இது தீர்மானிப்பதாக இருக்கின்றது.


இயற்கையில் மீறல்
மாற்றீடு:-
இயற்கை மீறல் தவறான செயலே. பெரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தேவைகள் அதிகமாகும் வேளையில் - தேவைகளுக்கான ஈடுசெய்தல்களுக்காகவே இயற்கை அழிவுக்குட்படுத்தப்படுகின்றது. மனிதத் தேவையா - இயற்கை மீறலா என்ற தர்க்கம் உள்ளது. காடழிப்பு - தொழிற்சாலைக் கழிவுகளை சூழலில் பரவவிடுதல் காபனீர் ஒக்சைட் பிறப்பித்தல் - புூமியின் உயிர்ப்பைக் காக்கும் ஓசோனைப் பிளக்கும் வகையில் உற்பத்திகளை மேற்கொள்ளுதல் என்பவற்றால் சூழல் மாசாகின்றது. புூமியின் ஆயுள் குறைக்கப்படுகின்றது.
சூழல் மாசடைதலில் முக்கிய நிலையில் காடழிப்பு உள்ளது. ஏனைய விடயங்களை மட்டுப்படுத்தலாம். ஜேர்மனி நாடுமட்டுமே ஓசோனைப் பாதிக்கும் உற்பத்திகளை மேற்கொள்வதை நிறுத்திவிட்டது. ஏனைய நாடுகள் மக்கள் தேவைக்கெனக் கூறி உற்பத்திகளை விருத்தி செய்துள்ளன. இவற்றுக்கான நோக்கம் விற்பனையே (லாபமே) தவிர உலக நன்னோக்கல்ல. ஜப்பான் நாடு தனக்குத் தேவையான மரங்களைத் தன் நாட்டில் வெட்டுவதில்லை. அயல் நாடுகளில் வாங்குவதே. அது தான் சூழல் பாதுகாப்புக்கு தன் பங்களிப்பு என ஜப்பான் கூறிக் கொள்கின்றது. இப்படியாகத்தான் உலக முதலாளிய சக்திகளின் சூழல் பேணல் நிலை உள்ளது. சூழல் பாதுகாப்புக்கு என இயக்கங்கள் செயற்பட்டு வருகின்ற போதிலும் அவை சிறுபான்மையாகவே கருதப்படுகின்றன. இவற்றின் மனிதாபிமான நோக்கு எவராலும் கருத்தி லெடுக்கப்படுவதில்லை.
சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல புூமியின் ஒரு சிறு துண்டுமே அதன் உயிர்ப்புக்கு ஆதாரமானது. அதனால், ஒவ வொரு சிறுபகுதியும் தம் தம் சூழலைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
தேவைக்காக இயற்கையை அழித்தல் கூட வாழ்வியலுக்கு முரணானதே. இதற்கான மாற்றீடு என்பது அதன்தன் சூழ்நிலைக்கு ஏற்றதாகவே இருக்கும். குறிப்பாக இதுதான் மாற்றீடு எனக் கூறமுடியாது. யாவரும் மனித நேயத்தின் பால் கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் உணர்வுடன் சூழல் பேணலில் ஈடுபட வேண்டும். அதற்கு கல்வி முறைமையும் பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும். சூழல் பேணலுக்கான ஒரு முழு ஆய்வு குறித்து இடத்தினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும்
Reply


Messages In This Thread
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:02 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-22-2003, 08:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:46 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:47 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:49 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:50 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:51 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:52 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:54 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:55 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:57 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:58 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:01 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:02 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:04 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:05 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:06 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:07 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:09 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:11 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:12 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:13 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:14 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:15 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:17 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:18 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:19 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:21 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:23 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:27 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)