11-22-2005, 07:02 PM
தனது கருப்புநிலா எழுதிய கவி வரிகள் அவளின் மனதில் அடிக்கடி வந்து வந்து அலைமோதின. "சகியே கண்களால் பேசிய வார்த்தைகள் போதும் இனி எழுத்துக்களினால் காதல் கவி பாடுவோமா" என்ற வார்த்தைகள் மனதில் மீண்டும் வந்தபோது மீண்டும் மனதினுள் பட்டாம்புூச்சி பறந்தது. எதற்கும் சில வரிகள் எழுதிப் பார்ப்போம் அதிலிருந்தாவது அவனுடைய உண்மையான குணத்தை அறிய முடியுமா என்று எத்தனிப்போம் என்று எண்ணியபடி தனது பேனாவை எடுத்து எழுத ஆரம்பித்தாள்.
பள்ளிக்கூடம் போகையில்
பக்கத்தில் வந்த கறுப்பு நிலாவே
மன்னிக்கவும்.... காந்தனே! கவியே!
எட்டு வயதாகுமுன்னமே என் சுட்டித்தங்கை
எட்டி எட்டிப் பார்க்கிறாள்
கடிதத்தில் என்ன எழுதுகிறேன் என்று!
பட்டப்படிப்பு படிக்கவேண்டும் என்கிறார் அன்னை
டாக்டராகவே வரவேண்டும் என்கிறார் என்னை
எப்போதும் என்னருகில் இருந்து தட்டிக் கொடுப்பீர்களா?
அவ்வப்போது இன்றுபோல் தவிக்க விட்டுவிட்டு ஓடுவீர்களா?
ஒரு வார்த்தையாவது எழுதி மீண்டும் என் சைக்கிளின்
"கரியரில்" வைத்துவிடுங்கள்
இரவினில் சந்திப்பு வேண்டாம்
அதை என்னிடம் கேட்கவும் வேண்டாம்
வர முடியாது வெளியில் என்னால்
வந்தாலும் உங்களை தெளிவாகக் தெரியாது முன்னால்.
என்று தான் முதல்முதலாக வடித்த காதல் கவிவரிகளை எழுதிவிட்டு புத்தகத்தை மூடினாள். அந்த நேரம் பார்த்து அருகே காலடி கேட்டது.... தொடருங்கள்