06-22-2003, 09:35 AM
மரங்களும் விறைத்துப் போய்விடுமளவிற்கு இடைவிடாத பெரும் மழை. இங்கிருந்து பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை. எல்லாம் மங்கல், ஜலப் பிரளயம். இருபதடி கிட்ட வரும் போதே யாரையும் தெரியும். இதைச் சாதகமாய் பயன்படுத்தி அவர்கள் முன்னேற முயலலாம். இருப்பினும் அவன் பார்வைகள் நீர்திரையைக் கிழித்தபடி து}ரங்களில் பாய்ந்தன.
தலையில் விழுந்த துளிகள் கன்னங்களில் வழிந்தன.
"கெக்லு}லு}. கெக்லு}.. ஹேங்லு}லு}.ஹேங்லு}லு} ஙேலு}.. ஙேலு}லு} ஙேலு}லு}" என்று ஏராளமான இனங்காணா ஒலிகளை மாரிகாலத் தவளைகள் எழுப்பின. 'கொத்தனப் புடி குடலைப்புடுங்கு சண்டைக்கு வாறான் குடோன் குடோன்' என்றே அவை கத்திக் கொள்வதாகவும், காலையில் வயிறு வெடித்துச் செத்துப் போய் விடுவதாகவும் சிறு வயதில் அவனது ஐயா கூறியது ஞாபகம்.
அந்தக் கத்தல்கள் ஏதேதோ உணர்வுகளை எல்லாம் மனதில் விதைத்து அப்போது அவைமேல் இரக்கத்தையே ஏற்படுத்தும்.
மழைக்கால இராத்திரிகளில் படுக்கையில் அம்மாவைக் கட்டிப் பிடித்தவாறே கிடப்பது இதந்தரு சுகானுபவம்.
இரவிரவாகப் பெய்யும் மழையில் கிணற்றில் கை தொட்டுவிடும் து}ரத்தில் தண்ணீர் தேங்கி வழியும்.
பகலிரவென்று பாராமல் போர்த்துப் படுக்கச் சொல்லும்.
மழை பெய்து ஓய்ந்து கிடக்கும் அந்தக் குளிர்கால வேளைகளில் அம்மாவின் ஓயாத கூப்பிடு சத்தத்தையும் பொருட்படுத்தாது மழை நீர் கொப்புகளில் முத்துக்களாய் தேங்கி நிற்க. அதை உலுப்பி ஒருவருக்கொருவர் சிலுநீர் தெளித்தும், கிளை கிளையாய்ப் பறந்து வரும் புற்றீசல் பிடித்தும் உழவு நடந்த கச்சான் காணியில் காளான் பிடுங்கிக் குடை பிடித்தும் மகிழ்ந்தது இப்போது இதமான நினைவுகளாய் மட்டும்லு}.
'டூடும்' அருகில் விழுந்து வெடித்த எறிகணையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பங்கருக்குள் தலையைப் பதித்துக் கொண்டான்.
கெக்லு}. கெக் ஹேங் ஹேங்..
"கொத்தனப்பிடி குடலைப் புடுங்கு சண்டைக்கு வாறான் குடோன் குடோன்"
அவன் கரங்களில் இருந்த ரி-56 எதிரிகளின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தது. வலது கரத்தின் ஆட்காட்டி விரல் 'ரிகரை' இழுக்கத் தயாரானது.