11-22-2005, 01:20 AM
[b]கதை இதுவரை
அதிகாலை நேரம் பறவைகள் தமது கூட்டில் இருந்து வரவேற்பு கீதம் இசைக்க காலை கதிரவன் கிழக்கு திசையில் இருந்து புமியை நோக்கி மெல்ல மெல்ல தவளத்தொடங்கினான் விவசாயிகள் கலப்பையை தோளில் சுமந்த வண்ணம் வயலை நோக்கிச் சென்றனர்.
கீதா படுக்கையில் புரண்டு படுத்தாள்.
ஏய் கீதா எழும்பு எழும்பு மணி என்னாகிறது??
இன்னும் என்ன தூக்கம் பாடசாலைக்கு கிளம்ப வேண்டும் என அம்மாவின் கூப்பாடோ வீதிவரை கேட்டது
இன்னும் ஒரு ஐந்து நிமிடம் அம்மா என்று மறுபக்கம் திரும்பி படுக்க ஆயத்தமாகும்போது "ம்ம் படு படு கொஞ்ச நேரத்தில் செம்பும் தண்ணியும் தான் வரும் முகத்திற்கு" என்ற வார்த்தையை கேட்டு தூள்ளி எழுந்தாள்
எழுந்து நேரத்தை பாத்தாள், நேரம் ஏழு மணி, எட்டுமணிக்கு பாடசாலையில் இருக்க வேண்டும், இல்ல்லாவிடில் மொட்டைவாத்தி தலையில் டொக்கு டொக்கு என்று குட்டுவார். அதை நினைத்தபோதே தலை வலித்தது , அவசரம் அவசரமாக குளித்துவிட்டு கண்ணாடியில் வந்து தை சீவத்தொடங்கினாள், அப்போதுதான் நினைவில் வந்தது எங்கே அவனை கானவில்லை, ஒவ்வரு நாளும் உடற்பயிற்ச்சிக்கு போயிற்று சரியாக, தான் தலை சீவும் நேரத்தில் அவன் அங்கு இருப்பான் தன் நன்பனுடன். அவள் மனது தவித்தது. எங்கே அவன். பொங்கும் பூங்குனலில் பாடல் போய் கொண்டிருந்தது "எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா"
அந்த பாடல் தனக்கென ஒலிப்பதாக உண்ர்ந்தாள். மீண்டும் அம்மாவின் அலறல் "என்ன கண்ணாடிக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறாய்.. பள்ளிக்கூடம் போகும் முன் எதாவது உதவி செய்வோம் என்று நினைப்பு இல்லை எந்த நேரம் பார் கண்ணாடிக்கு முன்னால் தான்" என்று அம்மா புலம்பத்தொடங்கினாள். அம்மா எனக்கு நேரமாகிவிட்டது பின்னேரம் வந்து என் செல்ல அம்மாவிற்கு உதவி செய்கின்றேன் என்றவாறே முத்தம் ஒன்றை கொடுத்து விட்டு சாப்பாட்டு வோக்சையும் எடுத்துக்கொண்டு சைக்கிளை எடுத்தாள். அப்போ தான் தங்கை நேற்று சைக்கிளை எடுத்து காத்து போக வைத்திருந்தது தெரிந்து. இப்போ இதற்கு சண்டை போட்டால் நேரம் போய் விடும் பின்னார் வந்து அவாவை கவனிப்போம் என்று நினைத்து விட்டு சைக்கிளை உருட்டத் தொடங்கினாள் பக்கத்தில் உள்ள சைக்கிள் கடைக்கு. அந்த வெண்ணிலா எங்கையாவது கண்ணில் படக்கூடாதா என்று நினைத்துக்கொண்டே......
என்ன ஆச்சரியம் அவளின் வெண்ணிலா அதுதாங்க கறுப்புநிலாவாகிய காந்தன் சைக்கில் கடையில் பஞ்சர் ஒட்டிக் கொண்டிருந்தான் தனது சைக்கிளுக்கு அவனைக்கண்டதும் ஏனோ தெரியவில்லை புதுசெருப்புப் போட்டு நடப்பதுபோல அவளின் கால்கள் தடுமாறிப் பின்னியது கிட்ட வந்து விட்டாள் கடைக்காரன் பஞ்சர் போட நேரமாகும் பின்னேரம் வந்து எடுக்கும் படி கூறினான் இப்ப என்ன செய்வது பள்ளிக்கூடத்துக்கு நடந்து போக நேரமாகி விடுமே யோசித்தபடி நடக்கத் தொடங்கினாள் பின்னால் ஏதோ சத்தம் காந்தன்தான் சைக்கிலில் வந்து கொண்டிருந்தான் அவனின் சைக்கிளுக்கு பெல்லைத்தவிர மற்றதெல்லாம் சத்தம் போட்டன கிட்ட வந்தவன் சைக்கிலை நிப்பாட்டி கேட்டான் "பள்ளிக்கு நேரமாகிவிட்டால் ஏறுங்கோ கொண்டு போய் விடுகிறேன்" எண்டு ஆயிரம் பட்டாம்பு|ச்சிகள் பறப்பது போல ஒரு பிரமை ஆனாலும் வெட்கம் புடுங்கித்தின்டது அவளை யோசித்தாள் போகலாமா?..வேண்டாமா..,,? என
சைக்கிளில் ஏறுவதா விடுவதா என்று அவளுக்குள் சில நிமிடங்கள் பெரும் போராட்டம் நடந்தது. முன்பின் தெரியாதஅவனுடைய சைக்கிளில் ஏறுவது தன் பெண்மைக்கு அழகில்லை என்ற முடிவுக்கு வந்தாள்.அதை எப்படி சொல்வது என்று தெரியாமல் தவித்தாள் பின் ஒருவாறு சமாளித்துக்கொண்டு மன்னித்துக்கொள்ளுங்கள் நான் உங்களுடைய வண்டியில் ஏறமுடியாது. நான் நடந்து செல்கின்றேன். என்னை வற்புறுத்தாதீர்கள் என்றபோது அவனுக்குள்ளும் அவளைப்பற்றி ஒரு உயர்வான எண்ணம் தோன்றியது.
சைக்களில் இருந்து இறங்கிக்கொண்டே நான் உங்களுடைய முடிவை மதிக்கின்றேன். உங்கள் முடிவு சரியான முடிவுதான் என்று சொன்னான். அவன் சைக்கிளை உருட்டிக்கொண்டு அவளுடன் நடந்துகொண்டிருந்தான். அவளும் அவனுடன் பேசிக்கொண்டு நடந்து கொண்டிருந்தாள். தலையை குனிந்துகொண்டு அவனுடன் பேசிக்கொண்டு நடந்தவள் சற்றுத்தலையை துாக்கியபோது
சற்றுத்திகைத்துவிட்டாள் யார் அங்கே வந்துகொண்டிருப்பது அப்பாவா?
"ம்ம் அப்பா தான்" என்றவாறு நடையில் வேகத்தை கூட்டி அப்பா வந்த தீசையை நோக்கி நடந்தாள். பிள்ளைகளின் மேல் ஆசையாத நம்பிக்கை வைத்திருக்கும் அப்பா அதை பெரிதாக எண்ணவில்லை மாறாக "என்ன பிள்ளை சைக்கிளுக்கு என்ன நடந்தது ஏன் நடந்து போகின்றாய்?"என்று கேட்டார்... கீதாவும் சைக்கிள் கடையில் என்று கூறிவிட்டு "அப்பா எனக்கு நேரம் போய் கொண்டு இருக்கின்றது. என்னை இறக்கி விடுங்கோ ஓருக்கா என்று சொல்லி முன்னால் அமர்ந்தாள். அமர்ந்து கொண்டு தான் கடைக்கண்ணால் பின்னால் திருப்பி பார்த்தாள். என்ன ஆச்சரியம் அவளின் கருப்பு நிலா காந்தனை காணவில்லை..... இனியும் எப்போது காண கிடைக்கும் என்று நினைக்கையில் தான் அப்பா மெல்ல வாய் திறந்தார். "பிள்ளை
பிள்ளை வரேக்கை யாரோ பெடியன் பக்கத்திலை வந்தான் ஆரது? என்று கேட்டார் கீதாவோ தடுமாறியபடி எனக்குத் தெரியாதப்பா" என்றாள்
அப்பா : இல்லை பிள்ளை ஊர் கெட்டுப் போய் கிடக்கு வீண் கதைகள் வராமல் இருக்கவேணும் ஏற்கனவே உன்ரை கொக்கா செய்த வேலை தெரியும் தானே
கீதா : என்னப்பா நீங்கள் என்னை ஏதோ சந்தேகப்படுகிற மாதிரி கிடக்குது
அப்பா: ஏதோ சொல்லவேணும் போல கிடந்திச்சு சொன்னன் இனி நீங்கள் படிக்கிற பிள்ளையள் நல்லது கெட்டது தெரியும் தானே
பாடசாலை கிட்டியது இறங்கினாள் கீதா அன்று பாடசாலையில் படிப்பித்தது எதிலும் கவனம் செல்லவில்லை ஏன்தான் இண்டைக்கு இப்படி நடக்கிறதோ என் தன்னையே திட்டுக் கொண்டாள் பாடசாலை விட்டு தோழிகளுடன் கதைக்கவும் மனமில்லாமல் நடந்து வர வெளிக்கிட்டாள் சைக்கிள் கடையில் சைக்கிலை எடுக்கவேண்டும் எண்டதால் கொஞ்சம் வேகமாகவே நடந்தாள் சைக்கிள் கடையில் இவளின் சைக்கிலில் கையை வைத்தபடியே இருந்தான் காந்தன் இவளுக்கு மனம் படபடத்தது என்ன செய்வது ...மெல்ல மெல்ல கடையை நெருங்கிவிட்டாள்
கீதாவைக் கண்டவுடன் கடைக்காரன் சைக்கிளை எடுத்து வெளியில் விட்டு பிள்ளை அப்பா காசு தந்திட்டார் நீர் சைக்கிளை எடும் என்றார். நன்றி சொல்லிவிட்டு காந்தனை நேரிடையாக பார்க்க தைரியம் அற்று ஸ்கூல் பைக்கை பின் கரியரில் வைத்து பார்க்கும்போது தான் கவனித்தாள் கரியாரில் ஒரு கொப்பி இருப்பதைக் கவனித்தாள். காந்தனை மெதுவாக பார்க்க அவன் புன்னகைத்தான். வீட்டிற்குள் சென்று அந்த கொப்பியை எப்போ திறந்து பார்ப்போம் என்று இருந்தது. இடையில் இறங்கி பார்ப்போம் என்றாலும் ஊரில் எல்லோரும் தெரிந்தவர்கள் ஏன் வீண் வம்பு என்று வீட்டு ஒழுங்கைக்குள் வந்தாள். சைக்கிளை பலமாக மித்தித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள். நேராக தனது அறைக்குள் சென்றாள். கொப்பியை திறந்து பார்த்தாள்.. என்ன அழகான படங்கள். அதற்கு கீழ் அழகான காதல் வரிகள். "சகியே கண்களால் பேசிய வார்த்தைகள் போதும் இனி எழுத்துகளினால் காதல் கவி பாடுவோமா" என்னும் வரிகளில் அவள் தன் நிலையே மறந்தாள். மெல்லிய துள்ளல் ஒன்றை மனதில் உணர்ந்தாள். இது தான் பட்டம்புச்சி பறக்கிறது என்பார்களா என்று எண்ணினாள். அப்போ யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டு மெல்ல இவ்வுலகிற்கு வந்தாள். அக்கா கதவை திற என்றபடி அவளின் சுட்டி தங்கை வந்தாள்.
தொடருங்கள்

<b> .. .. !!</b>