11-21-2005, 12:22 PM
<b>து}யவன்:</b>
நான் எவரின் வழிக்கும் வரவில்லை. யதார்த்தங்களை எழுதுகின்றேன். நீங்கள் சுற்றிச் சுற்றி தமிழ்நாட்டு அரசியல் வாதிகளைச் சாடுவதில் மட்டுமே நிற்கின்றீர்கள். நமது நாட்டில் மட்டும் என்ன வாழுதாம். நாம் மற்றையவர்களைக் குறை சொல்வதாயின் அவர்களைவிட நாம் ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டும். நமது நாட்டில் தற்போதுள்ள ஒழுக்கமான அரசியல்வாதியொருவரை உங்களால் சுட்டிக் காட்ட முடியுமா??? அத்துடன் நீங்கள் ஆரம்பத்தில் ஏதோ ஜெயலலிதா இலங்கைத் தமிழர்களுக்கு ஒருவித கொடுமையும் செய்யவில்லை என்று எழுதியதை நீங்கள் மறைத்தாலும் நான் மறக்கவில்லை.
<b>ஸ்ராலின்:</b>
நீங்கள் சொல்லும் இரண்டு கோணங்கள் விந்தையாகவுள்ளது. என்ன காரணத்திற்காக அண்ணாத்துரைக்குப் பின் நெடுஞ்செழியன் முதலமைச்சராகியிருக்க வேண்டுமென்று எண்ணுகின்றீர்களோ அதே காரணம் தான் எம் ஜி ஆருக்கு பின் நான் சொல்வதும். நெடுஞ்செழியன் ஒன்றும் இடையில் வந்து சேர்ந்து விடவில்லை. ஆரம்பத்திலிருந்தே எம் ஜி ஆருடனிருக்கின்றார். சரி ஜெயலலிதாவை விடுங்கள் எம் ஜி ஆர் என்ன செய்தார். வாரிசு அரசியலைப் பற்றிப் பார்ப்போம். மத்திய காங்கிரசில் ராஜீவின் மரணத்தின் பின் அவரது வாரிசுகளே தலைமைப் பதவிக்கு வரலாம். தமிழ் நாட்டுக் காங்கிரசில் மூப்பனாருக்குப் பின் தலைவராக வாசன் வந்துள்ளார். இவர் எந்தத் தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டார்.அவரை விட ஸ்டாலின் எந்த விதத்தில் குறைந்தவர். ஒருவருக்கு ஆளுமை இருக்கா இல்லையா என்பது அவருக்கு சந்தர்ப்பம் கொடுக்கும் போதுதான் தெரியவரும அதைவிட மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டால்த்தான் ஸ்டாலின் முதலமைச்சராக முடியும். அங்கே வில்லங்கமாக திணிக்கமுடியாது. உதாரணமாக எம் ஜி ஆருக்குப் போட்டியாக கலைஞர் மு.க.முத்துவை கொண்டு வந்தாரென்று சொல்லப்பட்டது. அப்படியாயின் அவர் இப்போ எங்கே??? எனவே மக்களின் அங்கீகாரத்தைப் பெறாத எவராலும் தொடர்ந்து நீடிக்க முடியாது. எனவே கருத்துக்கள் என்பது நேர்மையாக இருக்க வேண்டுமேயொழிய எமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றவாறு அல்ல.