Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகத்து அரசியல் கட்டுரைகள்
#94
இச்சிறுதீவில் 'சமாதானத்தின்' பெயரால் இதுவரை கொடுக்கப்பட்ட விலை போதாதா?
-
ஜெயராஜ்


இலங்கை மக்கள்
சமாதானத்தை வேண்டியே வாக்களித்துள்ளார்கள். ஆனால், என்ன விலை கொடுத்தாகிலும் சமாதானம் பெறப்பட வேண்டும் என அவர்கள் கூறவில்லை. சமாதானத்துக்கு என்ன விலை கொடுக்கப்பட வேண்டும் என எவரும் இதுவரை தீர்மானிக்கவில்லை
-முன்னாள் வெளிவிவகார
அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர்


வடக்கு - கிழக்கு மோதலுக்குத் தீர்வு காணும்
ஒரு தெளிவான ஆணையை தற்போதைய அரசாங்கம் பெற்றிருக்கின்றது. அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் அரசியல்தீர்வுக்கு வருவதற்காகச் சர்வதேச செல்வாக்குச் செலுத்தப்படுகின்றது. வடக்கு - கிழக்குப் பிரச்சினைக்குத் தீர்வுகாண இதுவே கடைசிச் சந்தர்ப்பமாகும். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியமானதாகும்
-சிறீலங்கா பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க




"இலங்கை மக்கள் சமாதானத்தை வேண்டியே வாக்களித்துள்ளார்கள். ஆனால், என்ன விலை கொடுத்தாகிலும் சமாதானம் பெறப்பட வேண்டும் என அவர்கள் கூறவில்லை. சமாதானத்துக்கு என்ன விலை கொடுக்கப்பட வேண்டும் என எவரும் இதுவரை தீர்மானிக்கவில்லை".
-முன்னாள் வெளிவிவகார அமைச்சர்
லக்ஸ்மன் கதிர்காமர்


முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கதிர்காமரின் மேற்கூறப்பட்ட கருத்துக்கள் இலங்கையில் சமாதானத்துக்காகக் கொடுக்கப்பட்ட விலை இன்னமும் போதாதா என்றதொரு கேள்வியை எழுப்புவதாகவே உள்ளது. ஏனெனில், அவரின் கூற்றுக்களின்படி சமாதானத்துக்கான விலை இன்னமும் தீர்மானம் செய்யப்படவில்லை என்பதாகின்றது.
லக்ஸ்மன் கதிர்காமரின் இந்நிலைப்பாடானது அவரின் தனிப்பட்ட கருத்தாக இருக்கமாட்டாது. ஏனெனில், சிறீலங்கா அரசியலில் தனிப்பட்ட hPதியில் கருத்தெதனையும் முன்வைத்து அதனை முன்னெடுத்தச் செல்லும் பலமும் - துணிவும் அவருக்கு இல்லை. ஆகையினால், சனாதிபதி சந்திரிகாவின் நம்பிக்கைக்குரியவரான இவரின் கருத்துக்கள் பெரும்பாலும் சனாதிபதி சந்திரிகாவின் கருத்துக்களாகவே கொள்ளத்தக்கதாகும்.
இலங்கைத் தீவில் கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக மித மிஞ்சிய அளவில் இரத்தம் சிந்தப்பட்டுவிட்டது. மலிந்துவிட்ட இனமோதல்களினாலும், வன்முறைகளினாலும் சிந்தப்பட்ட இரத்தத்தின் கறைகளைக் கழுவிக் கொள்வதற்குப் பல வருடங்கள், ஏன் சில தசாப்தங்கள் கூடத் தேவையாக இருக்கலாம் என்றே கருதவும், மதிப்பிடவும் படுகின்றது.
வன்முறை அரசியலும் - இராணுவ மோதல்களும் போதும். 'சொர்க்கபுரியான' இலங்கைத் தீவில் மீண்டும் அமைதி கொண்டு வரப்படுதல் வேண்டும் என்பதற்காக இருமுறை சிங்கள மக்கள் தெளிவாகவே வாக்களித்துவிட்டனர். அதில் ஒருமுறை சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான பொ. ஐ. முன்னணிக்கும், ஒருமுறை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணிக்கும் மக்கள் வாக்களித்துள்ளனர்.
2001ஆம் ஆண்டின் இறுதியில் சமாதானத்துக்கென, ஐக்கிய தேசிய முன்னணிக்கென மக்கள் எவ வாறு வாக்களித்தார்களோ அதனை ஒத்ததாகவே 1994 இன் மத்தியில் சமாதானத்துக்கென மக்கள் உறுதியாகவே வாக்களித்திருந்தனர் எனலாம். சிறீலங்காவின் வரலாற்றில் சமாதானத்தை நிலை நிறுத்துவார் என்ற நம்பிக்கையில் சனாதிபதி சந்திரிகாவுக்கு அளித்த ஆதரவு போல் வேறு எவருக்கும் மக்கள் ஆதரவு அளிக்கவில்லை என்று கூடக்கூறலாம். 1994 சனாதிபதித் தேர்தலில் சந்திரிகா குமாரதுங்க 62 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறுவதற்கு
இதுவே அடிப்படையாக இருந்தது.
ஆனால், சமாதானத்தை உருவாக்குவதற்கென வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தை அவர் தவறாகவே பயன்படுத்தினார். மக்கள் வழங்கிய ஆணையைப் புறம் தள்ளிய அவர், தாம் முன்னெடுத்த யுத்தத்துக்கும் 'சமாதானத்துக்கான யுத்தம்' எனப் புதிய தத்துவ விளக்கம் ஒன்றைக் கொடுக்க முனைந்ததோடு நாட்டின் அனைத்து வளங்களையும் யுத்தத்துக்கெனத் திருப்பிவிட்டார்.
சமாதானத்தின் பெயரில் அவர் யுத்தத்துக்கென செலவீடு செய்தது, இழந்தது, அளவுக்கு மீறியதாக - நாட்டினால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிலானாதான, சுமையாக இருந்தது. ஆனால், அவ யுத்தத்தினால் கிடைக்கப்பெற்றதோ பெரும் பொருளாதார அழிவும், உயிரழிவும்தான்.
ஒருபுறம் சிறிலங்கா இராணுவம் பெரும் ஆளணி இழப்பையும், தளபாட இழப்பையும் சந்தித்தது மட்டுமல்ல, விடுதலைப் புலிகளை யுத்தத்திற் தோற்கடிக்க முடியாது என்பதையும் உறுதி செய்யும் கட்டத்துக்கு வந்திருந்தது. இராணுவம் சந்தித்த தோல்விகளினால் யுத்தத்தின் அடுத்த கட்டம் குறித்து அது பேச முடியாத அவல நிலையை அடைந்தது.
இதேசமயம், அதிகரித்த இராணுவுச்செலவீட்டால் சிறீலங்காவின் பொருளாதாரம் என்றுமில்லாத அளவில் மோசமான கட்டத்தை அடைந்தது. பொருளாதார வளர்ச்சி ஸ்தம்பித்த நிலையை அடைந்து அதன் வளர்ச்சியானது எதிர்க்கணியமாக மாறும் நிலை உருவாகியது. நாட்டின் முக்கிய வருவாய்த்துறைகள் வீழ்ச்சி கண்டது மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரக் கொள்கையே கேள்விக்குரியதாகியது.
இதனைத்தவிர நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வன்முறையும், சமூகச் சீர்கேடும் அதிகரித்துச் செல்வதாகியது. நாட்டின் பொருளாதாரம் மட்டுமல்ல, அமைதியும், அழகும் முற்றாகவே பாதிப்புக்கும், ஆபத்துக்கும் உள்ளாகியது. அதாவது, சந்திரிகா குமாரதுங்க சமாதானத்தின் பெயரில் யுத்தத்துக்கெனக் கொடுத்த விலை சிறீலங்காவால் தாங்கிக் கொள்ள முடியாத பெரும் சுமையாக இருந்தது.
வேறுவிதமாகக் கூறுவதானால் சமாதானத்தை உருவாக்குவதற்கு எனச் சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான அரசாங்கம் நடாத்திய யுத்தமானது - நாடு தாங்கிக்கொள்ள முடியாத உயரிய விலை உடையதாக இருந்தது. இதனாலேயே பொ. ஐ. முன்னணி அரசாங்கம் தனது இரண்டாவது பதவிக்காலத்தை நிறைவு செய்ய முடியாது இடைநடுவில் கவிழ வேண்டிய அவல நிலைக்கு உள்ளாக வேண்டி வந்தது. அதாவது, யுத்தத்தினால் சமாதானத்தைத் தோற்றுவிக்க அது கொடுத்த விலையானது அது தனது ஆட்சி அதிகாரத்தையே இழந்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தையே உருவாக்குவதாக இருந்தது.
இந் நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியிடம் சமாதானத்தை உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தை மக்கள் வழங்கியுள்ளனர். இது தெளிவான ஆணையாக அவருக்கு மக்களினால் வழங்கப்பட்டுள்ளது. லக்ஸ்மன் கதிர்காமர் குறிப்பிடுவதுபோல் சமாதானத்துக்கு என்ன விலை கொடுக்கலாம் என்பதை மக்கள் தெரிவிக்கவில்லை, என்பது தவறாகும்.
ஏனெனில், மக்கள் பொது. ஐ. முன்னணி அரசாங்கம் சமாதானத்தின் பெயரில் கொடுத்த கொடுக்க முனைந்த விலைகள் மிக அதிகம் என்ற hPதியிலேயே ஐக்கிய தேசிய முன்னணியிடம் சமாதானத்தைக்கொண்டு வருவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளனர்.
இதனைப் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஓரளவு புரிந்து கொண்டுள்ளார் என்பதை விளக்குவது போன்றே அவரது பேச்சுக்கள் அமைந்துள்ளன. அதுமாத்திரமல்ல, இலங்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றின் மூலம் சமாதானத்தை உருவாக்கக் கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பம் என்பதையும் அவர் ஓரளவேனும் புரிந்து கொண்டுள்ளதாகவே தெரிகின்றது.
மக்கள் சமாதான முறையில் அரசியல் தீர்வொன்றுக்கு வழங்கியுள்ள சந்தர்ப்பம் - விடுதலைப் புலிகளின் அமைப்பு அரசியல் தீர்வு முயற்சிக்கு அனுசரணையாக எடுத்துவரும் நடவடிக்கைகள், வழங்கிவரும் அனுசரணைகள், சர்வதேச hPதியில் தீர்வு முயற்சிக்குக் கிடைக்க வரவேற்பு, அங்கீகாரம் என்பன இவ அரசியல் தீர்விற்கு இதுவே இறுதிச் சந்தர்ப்பம் என்பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புரிந்துகொள்ளக் காரணமாக இருந்திருக்கலாம்.
இது மாத்திரமல்ல, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான இச்சந்தர்ப்பத்தை தவற விடுதல் கூடாது என்பதையும் அவர் தெளிவாகப் புரிந்துகொண்டிருத்தல் வேண்டும். ஏனெனில், இதனை அவர் அடிக்கடி வற்புறுத்தி வருபவராகவுள்ளார். இவ வாறான அவரின் உணர்விற்கு இச்சந்தர்ப்பம் இழக்கப்பட்டு மீண்டும் மோதல்ககள் தொடருமாயின் நாடு இதுவரையில் சந்தித்த இழப்புக்களைவிடப் பேரிழப்புக்களையும் அழிவையும் சந்திக்க வேண்டிவரும் என்பதையும், இலங்கைத்தீவில் இரு அரசுகள் உருவாவதும் தவிர்க்க முடியாது போகும் என்பதையும் அவர் விளக்கிக் கொண்டுள்ளமை அடிப்படையாக இருக்கலாம்.
அதாவது, லக்ஸ்மன் கதிர்காமர் குறிப்பிட்டது போன்று சமாதானத்துக்கு என்ன விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைவிடப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமாதானத்தை என்னவிலை கொடுத்தாவது நிலைநிறுத்தாது போனால் ஏற்படப்போகும் எதிர்கால விளைவுகளைப் பற்றியே சிந்திக்க வேண்டியவராகவுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க சமாதானம் என்ன விலை கொடுத்தும் பெறப்படலாம் என மக்கள் கூறவில்லை என்ற கூற்றுக்கள் கதிர்காமரின் அர்த்தமற்றவையும், யதார்த்தபுூர்வமற்றதும் ஆகும். சிங்கள மக்கள் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை எட்டக்கூடிய வகையில் சமாதான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லவும் பேச்சுக்களை நடாத்தவும் ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு புூரண அங்கீகாரம் கொடுத்துள் ளனர்.
இதேசமயம், இப்பேச்சுவார்த்தைக்கென அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகள் எவையும் சமாதானத்துக்கான விலை எனக்கூறுவது தமிழ் மக்களின் உரிமைகளைக் கொச்சைப்படுத்துவதும், வழங்க மறுப்பதும் போன்றதாகும். ஏனெனில், அரசாங்கம் இன்று மேற்கொள்ளும் பொருளாதாரத் தடையில் தளர்ச்சி, மீன்பிடித்தடையில் தளர்ச்சி போன்றவை தமிழ் மக்களின் மீது ஒடுக்குமுறை நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைத் தளர்வடையச் செய்வதற்கான நடவடிக்கையே ஒழிய சமாதானத்துக்கெனக் கொடுக்கப்படும் விலையல்ல.
இதேசமயம், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி அவர்களைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வருவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையானது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனப் புலிகள் இயக்கத்தை அங்கீகாரம் செய்த தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பதற்கான வாய்ப்பை வழங்குவதான செயற்பாடே ஒழிய சமாதானத்தின் பெயரால் தமிழ் மக்களுக்கோ, புலிகளுக்கோ வழங்கப்பட்ட சலுகை அல்ல. சிறீலங்கா அரசாங்கம் தடை விதித்தாலும், விதிக்காது போனாலும் புலிகளே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பது தமிழ் மக்களினால் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றாகிவிட்டது. இவ யதார்த்தத்துக்கு மாறான நடவடிக்கைகள் யாவும் தோற்றுப் போய்விட்டன என்பதே கடந்த கால வரலாறாகும்.
ஆனால், விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கமானது லக்ஸ்மன் கதிர்காமருக்கு விரும்பத்தக்கதொன்றாக சுயகௌரவத்துக்குப் பாதிப்பை விளைவிப்பதாக இருக்கலாம். ஏனெனில், விடுதலைப் புலிகள் மீதான தடை விடயத்தில் முழு மூச்சாக உழைத்தவர் அவராகும். ஆனால், லக்ஸ்மன் கதிர்காமரின் முயற்சிக்காக நாட்டின் நலனுக்கு அவசியமானதாகப்படுவதை எவ வாறு புறந்தள்ளுவது? இந்நடவடிக்கையை சமாதானத்துக்காகக் கொடுக்கப்படும் விலை என எவ வாறு முடிவு செய்வது?
இதற்கு அப்பால் விடுதலைப் புலிகள் அமைப்புடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையோ அன்றி அதில் இடம்பெறக்கூடிய அதிகாரப் பரவலாக்கல் குறித்த விடயங்களோ நிச்சயமாக நாட்டின் பிரிவினைக்கு வாய்ப்பளிப்பதாக இருக்கமாட்டாது என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், இப் பேச்சுவார்த்தையானது இரு நாடுகளை உருவாக்குவதற்கானதல்ல. ஒரு நாட்டில் இரு இனங்களும் சம உரிமைகளைப் பெற்றவையாகச் சுய கௌரவத்துடன் சமாதானமாக வாழ்வதெப்படி என்பதைத் தீர்மானிப்பதற்கானதே.
ஆகையினால், இப்பேச்சுவர்த்தைகளில் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றிய விடயங்களே இடம்பெறுவதாக இருக்கும். சமாதானத்துக்காகச் சிறீலங்காவின் இறையாண்மையைக் கேள்விக்குரியதாக்கும் விடயங்கள் இலங்கையைப் பிரிவினைக்கு உட்படுத்தும் விடயங்கள் எவையும் இடம்பெறப் போவதில்லை. அதற்கான சூழ்நிலையும் இல்லை. மாறாக, தமிழ் மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகள், நியாயபுூர்வமாக வழங்கப்பட வேண்டிய உரிமைகள் என்பனவற்றை வழங்குதல் தொடர்பானதாகவே இருக்கும்.
ஆகையினால், சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான சுமுகமான நல்லெண்ணச் சூழலை உருவாக்குவதற்காகவும், புலிகளுடனான அரசியல் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கெனவும் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எவையும் சமாதானத்துக்கான விலையாகவும் - விடுதலைப்புலிகளுக்கோ அன்றி தமிழ் மக்களுக்கோ கொடுக்கப்படும் சலுகையாகவும் கொள்ளத்தக்கதல்ல.
ஆனால், சமாதானத்தைக் கொண்டுவர அன்றி நிலைநிறுத்த அரசாங்கம் விலை கொடுக்க வேண்டிவருமானால் அது நிச்சயமாக சமாதானத்துக்கு விரோதமான அன்றி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முனையும் சக்திகளினாலேயே ஏற்படக் கூடியதாக இருக்கும். அதாவது, பௌத்த - சிங்கள அடிப்படைவாத சக்தியான பௌத்த அமைப்புக்களினாலோ அன்றி வெறி பிடித்த இனவாத சக்திகளினாலோ அல்லது சிஹல உறுமய, ஜே. வி. பி., பொ. ஐ. முன்னணி போன்ற அதிகாரத்துக்குப் போட்டியிடும் சக்திகளினாலோ ஏற்படக் கூடும்.
சமாதானம் - சகோதரத்துவம் - அமைதி என்பனவற்றுக்காகச் சில உலகத் தலைவர்கள் உயர்ந்த பட்ச விலையாக தமது உயிர்களைக் கொடுத்துள்ளனர். ஆனால், உண்மையான சமாதானத்தை நேசித்த எவரும் சமாதானத்தை யுத்தத்தின் மூலம் கண்டுவிடலாம் என விழையவில்லை. அத்தோடு, சமாதானத்தை நிலைநிறுத்த முனைந்த தலைவர்கள் என்றும் மக்கள் விரோதிகளாகவும் இருந்ததில்லை. அவர்கள் கொல்லப்பட்டமையானது இனவெறி, மதவெறி பிடித்த சமாதானத்தின் விரோதிகளினாலேயே ஆகும்.
ஆகையினால், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமோ அன்றி அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவோ சமாதானத்துக்காக ஏதாவது விலை கொடுக்க வேண்டிவரின் அது நிச்சயமாக சிங்கள பேரினவாத சக்திகளிடம் இருந்தே வரக்கூடியதாக இருக்கும். ஏனெனில், சமாதானத்துக்கு விரோதிகளாக, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு விரோதிகளாக அவர்களே உள்ளனர். ஆகையினால், சமாதான முயற்சிகளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மனப்புூர்வமாக ஈடுபாடு காட்டுபவரானால் இனவெறி சக்திகளிடமும், அவற்றுக்குத் து}பமிடும் அரசியல் சக்திகளிடமும் அவர்களின் கைக்கூலிகள் குறித்தும் விழிப்பாக இருத்தல் அவசியமாகும்.
Reply


Messages In This Thread
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:02 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-22-2003, 08:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:46 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:47 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:49 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:50 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:51 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:52 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:54 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:55 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:57 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:58 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:01 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:02 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:04 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:05 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:06 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:07 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:09 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:11 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:12 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:13 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:14 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:15 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:17 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:18 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:19 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:21 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:23 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:27 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)