11-21-2005, 06:09 AM
கீதாவைக் கண்டவுடன் கடைக்காரன் சைக்கிளை எடுத்து வெளியில் விட்டு பிள்ளை அப்பா காசு தந்திட்டார் நீர் சைக்கிளை எடும் என்றார். நன்றி சொல்லிவிட்டு காந்தனை நேரிடையாக பார்க்க தைரியம் அற்று ஸ்கூல் பைக்கை பின் கரியரில் வைத்து பார்க்கும்போது தான் கவனித்தாள் கரியாரில் ஒரு கொப்பி இருப்பதைக் கவனித்தாள். காந்தனை மெதுவாக பார்க்க அவன் புன்னகைத்தான். வீட்டிற்குள் சென்று அந்த கொப்பியை எப்போ திறந்து பார்ப்போம் என்று இருந்தது. இடையில் இறங்கி பார்ப்போம் என்றாலும் ஊரில் எல்லோரும் தெரிந்தவர்கள் ஏன் வீண் வம்பு என்று வீட்டு ஒழுங்கைக்குள் வந்தாள். சைக்கிளை பலமாக மித்தித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள். நேராக தனது அறைக்குள் சென்றாள். கொப்பியை திறந்து பார்த்தாள்.. என்ன அழகான படங்கள். அதற்கு கீழ் அழகான காதல் வரிகள். "சகியே கண்களால் பேசிய வார்த்தைகள் போதும் இனி எழுத்துகளினால் காதல் கவி பாடுவோமா" என்னும் வரிகளில் அவள் தன் நிலையே மறந்தாள். மெல்லிய துள்ளல் ஒன்றை மனதில் உணர்ந்தாள். இது தான் பட்டம்புச்சி பறக்கிறது என்பார்களா என்று எண்ணினாள். அப்போ யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டு மெல்ல இவ்வுலகிற்கு வந்தாள். அக்கா கதவை திற என்றபடி அவளின் சுட்டி தங்கை வந்தாள்....................................................

